சாம்பிராணி இலை
இது சிறிய செடியாக இருக்கும். தண்டு எளிதில் உடையும் தன்மை வாய்ந்தது. இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும்.
இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.
இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும்.
இதில் இரண்டு வகை உண்டு. அடி வரை வளரும் வேர்கள், அதன் ஆழம் செல்லாமல் கொத்து வேராகவே இருக்கும்.
மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும்.
தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.
வியாழன், 22 ஏப்ரல், 2010
அழகிற்கு அணிசேர்க்கும் மூலிகைகள் -Karisalankanni
.jpg)
கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி இந்தியாவின் வெப்பமான பகுதிகளில் எளிதாக வளரும். இதை கரிசாலை, கையான், கரப்பான் என்பர். புதர்கள், சாலையோரங்கள், சதுப்பு நிலங்கள் என எங்கும் காணப்படும் சிறுசெடி.
கரிசலாங்கண்ணி நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை என நான்கு வகைகளுண்டு. மஞ்சள் கரிசாலை சாதாரண கரிசாலையைவிட மிக உயர்ந்தது. வடநூல்கள் இது ஒரு கற்பக மூலிகை என்கின்றன. இதை இடித்துச் சாறு பிழிந்தால் கறுப்பாக இருக்கும். காரணம் இதில் இரும்பு சத்தும் செம்புச் சத்தும் அதிகமுள்ளது.
முழுத் தாவரமும் மருத்துவ பண்பு உடையவை. தோல் நோய்கள் மற்றும் மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். கல்லீரல் நச்சுத் தன்மையை நீக்கும். கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவதால் கேசத் தைலமாக பயன்படுத்தப்படுகிறது. கேசத்திற்கு சாயமிடுவதிலும் பயன்படுகிறது. பற்று, தேள் கடிக்கு மருந்தாகும். வீக்கங்கைக் குறைக்கும்.
உடலுக்கு பொன் வடிவத்தையும், வலிமையையும் அளிக்கக் கூடியது. இலைகளை அரைத்த விழுதை உடலில் தேய்த்துக் குளிக்க, நாளடைவில் தோல் பொன்னிறமாக மாறும்.
மஞ்சள் கரிசாலையைக் கறியாகச் செய்துண்ண அறிவின் தெளிவும், திருவும் சேரும். இலைச்சாறு 90 துளி எடுத்து அதோடு நீர் அல்லது மோர் சேர்த்துக் சாப்பிட பாம்பின் கடி நஞ்சு போகும். இரண்டு துளி எடுத்து எட்டு துளி தேன் கலந்து கொடுக்க கைக் குழந்தைகட்கு ஜலதோஷம் நீங்கும்.
தினமும் காலையில் கரிசலாங்கண்ணியின் வேரால் பல் துலக்கி, பின் இக்கீரையை 2 பிடி எடுத்து மென்று, தின்று ஒரு டம்ளர் நீர் அருந்தி வர, நாளடைவில் பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிறக் கறை அகன்றி விடும்.
உடலில் சப்த தாதுக்களை உரமாக்கி, வலுவைத் தந்து உயிர் அணுக்களைப் பெருக்கித் தங்க நிறம் போன்ற சருமத்தை உண்டாக்கும் குணமுடையது. கரிசலாங்கண்ணி இலையை மைபோல அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும். நரை, திரை மாற்றக்கூடிய 108 கற்பக மூலிகைகளில் கரிசாலை முக்கியமானது.
கரிசாலை சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து தீயில் காய்ச்சி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தடவி வர முடி கறுத்து, செழித்து வளரும்.
கரிசலாங்கண்ணி 300 கிராமுடன், கொட்டைக்கரந்தி இலை சமபங்கு சேர்த்து ஏழு நாள் நிழலில் உலர்த்தி எட்டாம் நாள் பொடித்து, சலித்து வைத்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி தூளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழப்பி நாற்பது நாள் சாப்பிட்டு வர நரை மயிர் தானே கருத்து வரும். அவ்வளவும் கருநிறமாக மாறிவிடும். இந்த இலையை நன்றாகக் கசக்கி தேள் கொட்டிய இடத்தில் வைத்து துணியில் ஒரு பொய்க்கட்டு போட்டு விட்டால் போதும். விஷம் இறங்கிவிடும். உலர வைத்த கரிசலாங்கண்ணி பொடியை பசும் பாலுடன் ஒரு மண்டலம் உண்டு வர பல நோய்கள் தீருவதோடு பெண் பூப்படைவாள்.
வெள்ளை கரிசலாங்கண்ணி என்ற சிறிய செடி சோகை நோய்க்கு ஒரு வரப் பிரசாதம். கரிசாலை இலைகள் 200 கிராம், மிளகு 10 கிராம் இரண்டையும் அரைத்து சுண்டைக்காயளவு உருட்டி நிழலில் மூன்ற நாள் உலர்த்தி பின் ஒரு கோப்பையில் போட்டு மூழ்க தேன் விட்டு ஐந்து நாட்கள் வெயிலில் வைத்தெடுத்து வாயகன்ற பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் காலை, இரவு உணவுக்கு முன் பதினைந்து வயதுக்குட்பட்டவர்கள் வேளைக்கு ஒரு தேக்கரண்டியும், பெரியவர்கள் இரண்டு தேக்கரண்டி என மென்று தேவை கையிலிட்டு நக்கி சாப்பிட, மஞ்சள்காமாலை சோகை நீங்கி, இரத்த விருத்தி ஏற்படும். நீண்ட நாட்கள் உண்டு வர கண்கள் பிரகாசமடையும். தலைமுடி கருக்கும். (தேனை உறிஞ்சிக் குடிக்கக் கூடாது. ஏனெனில் புரை ஏறி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்). இலைச் சாற்றை காது வலிக்குக் காதுகளில் விடலாம். இதனை நல்லெண்ணெயில் அரைத்து யானைக்கால் நோய்க்கு மேலுக்குப் பூசலாம்.
குப்பைமேனி, பொன்னாங்கண்ணி-Kuppameni

இந்தியாவின் வெப்பமான பகுதிகளில் வளரும் களைச் செடியாகும். குறுஞ்செடியாக வயல்களிலும், வரப்புகளிலும் வளரும். முழுத்தாவரமும் மருத்துவ பயன் கொண்டவை. மூச்சுக் குழல் மற்றும் ஆஸ்த்துமா நோய்க்கு மருந்தாகிறது. இலைகளின் சாறு தோல் வியாதிகளுக்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது.
உடலிலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. படுக்கைப் புண் மற்றும் நாள்பட்ட சொறி சிரங்குகளை ஆற்றுகிறது. முடக்கு வாதம், மூட்டுவலிக்கு மேல் மருந்தாகவும் தடவப்படுகிறது.
பொன்னாங்கண்ணி:
உடலுக்குப் பொன் போன்று கவர்ச்சியையும், பிரகாசத்தையும் தோற்றுவிக்கும் சக்தி படைத்த மூலிகை என்ற கருத்தில் வழங்கியது பின்னாளில் பொன்னாங்கண்ணியாகிவிட்டது. கண் தொடர்பான எந்தப் பிணிகளுக்கும் இந்தக் கீரை நல்ல மருந்துப்பொருள், உடற்சூட்டை சமனப்படுத்தி ஒரே நிலையில் வைக்கும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. பலவீனமான உடலைச் சீராக வளர்த்து வலிமையையும், வளமையையும் இது ஊட்டும்.
செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையை செம்மையாக வதக்கி, மிளகு, உப்பு கூட்டி புளியை நீக்கி முறைப்படி ஒரு மண்டலம் உட்கொணடால் உடலுக்கு அழகு, பொன்னிறம், நீண்ட ஆயுள், கண் குளிர்ச்சி இவற்றைத் தரும். தினம் இதைத் துவட்டிச் சாப்பிட உடல் ஒளிபெறும். உப்பில்லாமல் வேகவைத்து வெண்ணெயிட்டு நாற்பது நாளுண்ண கண்ணில் உண்டாகும் நோய் தீரும். இதன் தைலத்தைத் தலைமுழுகி வர கண் நோய்கள் தீரும்.
நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும். கண் தொடர்பான பிணிகளுக்கு பொன்னாங்கண்ணி தைலம் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. சருமநோய்களையும் இந்தத் தைலம் அகற்றி உடலைப் பட்டுப் போன்று மென்மையாக ஆக்கும்.
குப்பைமேனி இலையை பொடித்து தக்க அளவாக குழந்தைகளுக்கு கொடுக்க மலப்புழுக்கள் வெளிப்படும். இலையையும், பூண்டையும் சேர்த்தும் கொடுக்கலாம். இலையையும், உப்பையும் கலந்து அரைத்துத் தடவ சொறி, சிரங்கு குணமாகும்.
சிறிது சுண்ணாம்புடன் இலையைக் கலந்து தடவ, நோயுடன் கூடிய மூட்டு வலி சரியாகும். இதையே காதுவலிக்கு காதைச் சுற்றிப் பூச காதுவலி நீங்கும்.
இலையுடன் உப்பு சேர்த்து சாறு பிழிந்து இரு மூக்கிலும் நசியமிட்டு, குளிர்ந்த நீரில் தலை முழுக வெளி நோய் நீங்கும்.
Beauty - பொடுதலை

இத்தாவரம் வயல் வரப்புகளில், காடுகளில், தரையில் படரும் சிறிய கொடியினம். இதன் காய்கள் திப்பிலி போல் இருக்கும்.
‘பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி’ என்பது பழமொழி. பொடுதலை இலை தலையில் உள்ள பொடுகை குணப்படுத்த வல்லது. பொடுதலை இலை பேதிக்கு நல்ல மருந்து. இவ்விலைச் சாறு கொப்புளம், புண், வீக்கத்திற்கு நல் மருந்து.
நூறு கிராம் பொடுதலை இலையை 50 மில்லி நீரிலிட்டு சிறு தீயில் எரித்து கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக நீர்த்தாரைப்புண், அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும்.
பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும், எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.
பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.
பொடுதலையை வதக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து இறுத்துக் கொடுக்க இருமல், வலிநோய்கள் ஆகியன தீரும். இலைகளை வதக்கி வறுத்த ஓமத்துடன் சேர்த்தரைத்து நீர்விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு சங்களவு புகட்ட குழந்தைகளின் கழிச்சல் நீங்கும்.
இலையுடன் சீரகம் அரைத்து கொடுக்க வெள்ளை படுதல் நிற்கும். இலையைத் துவையல் செய்து உண்டு வரை உள்மூலம் தணியும். இலையை அரைத்து கட்டி, கொப்புளத்தில் பற்றிட கட்டிகள் பழுத்து உடையும்.
வல்லாரை (பிரம்மி)-Vallarai

பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது.
இச்செடியின் இலைகளும், தண்டும் மருத்துவ பண்புகள் நிறைந்தவை. வேர்கள் மற்றும் விதைகளிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இத்தாவரத்திலுள்ள ‘ஆஷாயாடிகோசைடு’ எனும் பொருள் தொழுநோயைக் குணப்படுத்துகிறது. தோல், முடி, நகம் போன்றவற்றின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
ஞாபக சக்தியை வளர்க்கவும், மூளைக்குத் தேவையான சத்து மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் சருகாகவும், பதப்படுத்தப்பட்டும் மருந்துப் பொருள் தயாரிக்கப் பயன்படுகின்றன. வல்லாரை இலையுடன் சிறிது டைமண்ட் கல்கண்டும், குங்குமப்பூவும், பசும்பால் சேர்த்து நன்கு அரைத்து வேளைக்கு நெல்லிக் காயளவு 96 நாட்கள் சாப்பிட்டு வர முகம் ஒளி பெறுவதுடன் இளமை திரும்பும். (உணவில் மாமிசம் தவிர்க்க வேண்டும்).
வல்லாரை இலைகளைப் பற்களின் மிது வைத்துத் தேய்ப்பதனால் பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிறம் மாறி பற்கள் நல்ல வெண்ணிறத்தைப் பெறும். உணவில் வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.
நாட்டுப்புற மக்கள் நன்கு அறிந்த மூலிகை வல்லாரை. இது வாய்க்கால் கரை, வரப்பு, வயல் இவ்விடங்களில் தரையோடு தரையாகப் படரும் கொடியினம். கொடியின் கணுக்களில் ஒரு கொத்தாகப் பல தண்டுகள் காணப்படும். தண்டின் நுனியில் வேம்பிலை போன்று ஓரு வட்டமான இலையிருக்கும். இதற்கு சிறு கசப்பு சுவையுண்டு. இதை அளவோடு உண்டால் பெரும் பயனளிக்கும். அளவில் அதிகமானால் தலைவலி, தலைசுற்றல் ஏற்படும். வாக்கு நயமில்லாதவர்கள், ஞாபகசக்தி குறைபாடுள்ளவர்களுக்கு இந்த தெய்வீக மூலிகை ஒரு வரப் பிரசாதம்.
பிணிகளை நீக்கி ஆயுளைப் பெருக்கும். இருதய பலத்துக்கும், உடல் வன்மைக்கும் வல்லாரை ஒரு தெய்வீக கற்பக மூலிகை ஆகும். இதன் இலையை காம்பு இல்லாமல் நிழலில் உலர்த்திப் பொடி செய்து வேளைக்கு மூன்று குன்றி மணி எடை சர்க்கரையுடன் இரண்டு வேளை கொடுக்கலாம்.
இவ்விலையை அரைத்து படை, வீக்கம், யானைக் கால் வீக்கம், ரணம் இவைகட்கு மேல் பூசுவதால் அதிக நன்மை தரும்.
இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது. மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும். வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம்.
வல்லாரையை இடித்தெடுத்துப் பிழிந்த சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் அரைலிட்டர் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து எரிக்க, அடிமண்டி மெழுகு போல விரலால் உருட்டும் போது திரளும் பதத்தில் இறக்கி வடிகட்டி தினந்தோறும் தலையில் தடவியும், தேய்த்துக் குளித்தும் வர, மூளைத்தெளிவு, குளிர்ச்சி தந்து நரையைத் தடுக்கும்.
வல்லாரை இலையை பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் நீங்கும் என்று கூறுவார்கள்.
வல்லாரை இலையை பச்சையாக பயன்படுத்தக் கூடாது. இலைகளை ஆய்ந்து பிட்டுபோல அவித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். வல்லாரை இலையுடன் அரிசித் திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை சுண்டைக் காயளவு சாப்பிட்டு வர நல்ல ஞாபசக்தி உண்டாகும்.
Amaranthus-அரைக்கீரை

தோட்டக்கால்களில் பயிரிடப்படும் ஒரு வகைக் கீரை. இதை வேரோடு பிடுங்காமல் அறுத்தெடுப்பதால் அறுகீரை எனப் பெயர் வந்தது. கீரையின் மேல்பாகம் பசுமையாகவும், அடிப்பாகம் சிவப்பாகவும், நீலநிறம் கலந்தாற் போலவும் இருக்கும். இது ஒரு உன்னதமான சஞ்சீவியாகும்.
அரைக் கீரையில் புரதம், தாது உப்பு, மாவு சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரம், இரும்பு சத்துகள் உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து மலர்ச்சிக்கலை நீக்குவதுடன் இதயத்திற்கு பலத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு இரும்புச் சத்து ஊட்டும்.
அரைக்கீரை சாப்பிட்டு வர சுரம், சன்னி, கபநோய், வாதம், நடுக்கம் தீருவதுடன் உடல் பலம் பெறும்.
மலச்சிக்கல், ஜன்னி, நரம்புத் தளர்ச்சி, பலவீனம், உடல்வலி, வாய்வு சம்பந்தமான வியாதிகள், நீர்க்கோவை, நரம்பு வலி ஆகியவை தீரும். நுரையீரல் ஜுரங்களைக் குறைக்க வல்லது. மேலும் இக்கீரை நினைவாற்றலைப் பெருக்கும் திறன் கொண்டது. இரத்தப் போக்கால் பலவீனமடைந்தவர்களைத் தேற்றி உடலுக்கு சக்தி கொடுக்கும்.
தலைமுடி கறுப்பாக, செழிப்பாக வளர ஊக்குவிக்கும் இக்கீரை மருந்தாலும், உணவாலும் ஏற்படும் உடற்சூட்டைத் தணிக்கிறது. சிறு பித்த சம்பந்தமான நோய்களையும், கண் நோய்களையும் குணப்படுத்துகிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் ஜுரம், ஜன்னி, கபம், வாதநோய், உடல்நடுக்கம் முதலான நோய்கள் தீரும். உடல் வலுப்பெறும். அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் தலைமுடியை கருகருவென்று நன்கு வளரச் செய்கிறது. முடிக்கு ஒரு மினுமினுப்பையும் தருகிறது.
அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். மேலும் இது நரம்பு தளர்ச்சியைப் போக்கும். நரம்புகளுக்கு பலமூட்டும். நோயினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்களுக்கு இது இழந்த பலத்தை திரும்பக் கொடுக்கும். அரைக்கீரை உடம்பில் தொல்லை தரும் வாயுவைப் போக்கும். இரத்தத்தை விருத்தி செய்யும். தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் ஏற்படாது. எந்த நோயும் அணுகாது.
அரைக்கீரை விதைத் தைலம்:
தேங்காய் எடுத்து கண் திறந்து நீரைப் போக்கி அதனுள் அரைக்கீரை விதையை நிரப்பி மூங்கில் குச்சியினால் ஆப்பிட்டு அடைத்து தரையில் புதைத்து விட வேண்டும். 48 நாள் கழித்த பின் உடைத்து ஓடு நீக்கி நன்கு அரைத்து 1-1/2 லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி பதத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும். இதை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்து வர தலைவலி நீங்கும். தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
அரைக்கீரை பற்றி அறியாதாரே கிடையாது எனலாம். அரைக்கீரைக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு. எனவே இது மூலிகை வகையில் சேர்கிறது. அரைக்கீரையை மருந்தாக தயாரித்துச் சாப்பிடத் தேவையில்லை. சமையல் செய்து சாப்பிட்டாலே பல வியாதிகள் குணமாகும். தாது புஷ்டியை உண்டு பண்ணும். நரம்பு தளர்ச்சியைப் போக்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். ஆண்மை இழந்தவர்கள் தினசரி இக்கீரை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெறலாம். உடலில் உற்பத்தியாகும் வாயுவை அகற்றிவிடும். நாவில் ருசியறியும் தன்மை மாறினால் அரைக்கீரை சாப்பிட நா ருசியறியும் தன்மை பெற்றுவிடும். அடிக்கடி உடலில் வலி தோன்றி சங்கடப்படுகிறவர்கள் தினசரி இக்கீரை சாப்பிட உடல் வலி நீங்கும். அரைக்கீரையுடன் அதிக அளவு வெங்காயம் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட இருமல் குணமாகும்
அரைக்கீரையின் மருத்துவ பயன்களைச் சொல்லி முடியாது. அநேகமாக எல்லா விதத்திலும் இது சிறந்த பச்சிலையாகப் பயன்படுகிறது. குறிப்பாக ஜுர வகைகளுக்கு நல்ல மருந்து. நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் வாயு நீக்கும் மூலிகையாகும். உடலில் எந்தப் பகுதியில் வாயு சேர்ந்து தொல்லை கொடுத்தாலும் இது உடனே அகற்றி நலம் சேர்க்கும். உடல் வலி நீங்கி உடல் கலகலப்பாக இருக்கும். அரைக்கீரையின் இயல்பு உஷ்ணம் என்றாலும் யாரும் எந்த நிலையிலும் சாப்பிடலாம். குறை ஏற்படாது.
அறுகம்புல்-Cynodon Dactylon

அறுகம்புல் விநாயகருக்கு சூட்டப்படும் என்பதால் இது தெய்வீக மூலிகை இனத்தைச் சார்ந்ததாகிறது. ஆற்றங்கரை ஓரங்களிலும், சதுப்பு நிலங்களிலும் எளிதில் வளரக்கூடியது. அறுகம்புல் மருத்துவ குணங்கள் பலவும் கொண்டது. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
அறுகம்புல்லின் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள கண் நோய், தலை நோய், கண் புகைதல், குருதியழல் இவை ஒழியும்.
அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண் நோயும், கண் புகைச்சலும், மூக்கிலிட, மூக்கிலிருந்து பாயும் குருதியும், காயம் பட்ட இடத்தில் பூச அதிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். புண்களின் மீது தடவ புண் ஆறி வரும்.
அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவிவர சொறி, சிரங்கு, படர்தாமரை போகும்.
அறுகம்புல்லுடன், கடுக்காய்த் தோல், இந்துப்பு சிறிது, கிரந்தி தகரம், கஞ்சாங்கோரை இவை ஓரெடை எடுத்து மோர் விட்டரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு, படர்தாமரை ஒழியும், நுண் புழுக்களும் சாகும்.
ஆவாரை-Avarai

மலைச்சரிவுகளிலும், சிலவகைப் பூமியிலும் அதிகம் கிடைக்கிறது. சீயக்காய் போன்று சிகையிலுள்ள அழுக்கைப் போக்கிவிடும். வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும். இச்செடியானது மத்திய இந்தியா, தென்னிந்தியா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் ஏராளமாக வளரும் குத்துச் செடி. இதன் இலை, பூ, வேர், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
இது பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது. இது செம்மண் பூமியில் தான் அதிக அளவில் பயிராகிறது. பெருஞ்செடியாக அடர்ந்து வளரும். முட்டை வடிவத்தில் குண்டு குண்டாக மொக்குகள் விட்டு பெரிய இதழுடன் மஞ்சள் நிறப் பூக்களுடன் காணப்படும். மழைக் காலத்தில் செழிப்பாகவும், கோடைகாலத்தில் செழுமை குன்றியும் காணப்படும். இலை அகத்திக் கீரையை ஒத்த வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும்.
ஆவாரஞ் செடியின் பட்டை தோல் பதனிட அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. மந்தமான கண் தெளிவடையும். மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். ஆவாரம் பூவின் இதழ்களை ஆய்ந்து எடுத்து பச்சைப் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து சமைத்து தொடர்ந்து 40 நாள் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் நல்ல பலம் பெறும்.
உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது. பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து அரைத்து உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம். உடலிலுள்ள அரிப்பு நீங்க நன் மருந்து. ஆவாரைக்கு ‘தங்க மங்கை’ என்ற சிற்ப்புப் பெயருண்டு. இதில் தங்க பஸ்பம் செய்வார்கள்.
வைத்தியத் துறையில் இதன் எல்லா பாகங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உடலிலுள்ள துர்நீரை இறக்கி சிறு நீராக சுரக்கச் செய்து நீரை வெளியேற்றுகிறது. நரம்பு தளர்ச்சியை நீக்கி, வலிமையைக் கொடுக்கிறது.
ஆவாரம்பூவை நெய்யில் வதக்கி உட்கொண்டு வர உடலில் மறைந்திருக்கும் பல வியாதிகள் அகன்று விடும். பூவை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை, வெட்டை, மேக நோய்கள், சோர்வு, நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும். ஆவாரம் பூவுடன் நாவல் மர இலையை சேர்த்துப் பொடியாக்கி பசும்பாலில் கலக்கிக் குடித்துவர சர்க்கரை வியாதி விலகி விடும். நாவல் இலைக்குப் பதில் வில்வ இலையையும் சேர்க்கலாம்.
ஆவாரம் பூவுக்கு உடலைப் பொலிவுடன் அமைக்கும் சக்தி உண்டு. விருப்பம் போல பக்குவம் செய்து, இதனை உணவோடு சேர்த்துக் கொண்டால் உடலில் நல்ல தளதளப்பும், சாந்தியும் ஏற்படும்.
பூவுடன் பச்சைப் பயிறு சேர்த்தரைத்து நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இலைகள் குளிர்ச்சியுடையது. வெயிலில் வெகு தூரம் நடப்பவர்கள், இந்த இலையை தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகை கட்டி நடப்பார்கள். வெயிலின் வெப்பம் பாதிக்காது. நடையும் சுறுசுறுப்புடன் தோன்றும்.
ஆவாரைப் பிசின் நிரிழிவு, வெள்ளைப்படுதல் முதலிய சிறுநீர் கேடுகளைப் போக்கும். இலை குளிர்ச்சியுடையமையால், வெயிலில் வெகுதூரம் நடப்பவர்கள் இவ்விலைகளைத் தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகையிட்டு நடக்க வெயிலின் கடுமை தாக்காது. பூவைச் சமைத்துச் சாப்பிட, கற்றாழை மணம், நீரிழிவு, நீர் வேட்கை சமனப்படும்.
விதையின் தோலைப் போக்கி, நுண்ணியதாகப் பொடிசெய்து கண்ணில் தூவியாவது அல்லது தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்ணோய்க்கு இடல் வழக்கு. இதனால் சீழ்பிடிக்கும் கண்ணோய் தீரும்.
வேரை குடிநீரிலிட்டுச் சாப்பிட்டுவர நீரிழிவு, ஆண்குறி எரிச்சல் தணியும். வேண்டுமானால் இத்துடன் கற்கண்டு, பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆவாரை வேர்ப்பட்டையை கஷாயஞ் செய்து அதற்கு நேர் வெள்ளாட்டுப் பால் அல்லது பசுவின் பால், எண்ணெய் இவற்றைக் கூட்டித் தைலம் செய்து தலைமுழுகி வர, உடல் வெப்பந் தணியும், கண் குளிரும்.
ஆவாரந்துளிர், கல்மதம், கொன்றைவேர் ஆகிய மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் நீங்கும். ஆவாரம், சீந்தில், தில்லைச்செடி இவைகளின் வேர், இலை, தண்டு, பூ முதலியவற்றை முறையே மூன்று, இரண்டு, ஒன்று எனும் எடையாகக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி அரைப்படிக்கு அரைப்படி நீரிட்டு, அரைக்கால் படியாகக் குடிநீர் செய்து அதில் பால் கூட்டி காலை, மாலை கொடுக்க நீரிழிவு போகும். நீரில் சர்க்கரை அளவும் குறையும்.
தைம்-Thyme

மேற்கு இமயமலைப் பகுதிகளிலும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு ஆசியா பகுதிகளிலும் தைம் பயிரிடப்படுகிறது. பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் ஒரு சாதாரணமான தோட்டப் பயிர். பழுப்பு சேர்ந்த பச்சை நிற இலைகள் உலர்ந்ததும் சுருண்டிருக்கும். இலைகள் முழுமையாகவும், அரைத்த பொடியாகவும் விற்பனையாகிறது.
காரமான, துடிப்பான மணமும், இனிப்புச் சுவையும் கொண்டது தைம் தைலம் மருத்துவ தன்மைகள் கொண்டவை. நரம்பு தளர்ச்சி மற்றும் ஹிஸ்டீரியாவிற்கு குணம் தரும். நஞ்சுக்கு மாற்று மருந்தாகும். புழுக்களைக் கொல்லும் ஆற்றல் இதற்கு உண்டு. நெஞ்சுவலி, காசநோய், மார்புச்சளி முதலிய நிலைகளில் சிகிச்சைக்கு உதவும்.
பித்தநீரையும், இரத்தத்தையும் இளக்கும். சிறுநீரகம், கண் முதலியவற்றின் சிகிச்சைக்கும், இரத்தத்தை சுத்தி செய்வதற்கும் பயன்படும். விதைகள் குடற்பூச்சிகளைக் கொல்லும். சரும வீக்கம் மற்றும் சரும நோய்களின் சிகிச்சையிலும் உதவும்.
அவுரி-Indigofera Tinctoria

நீலி என சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகிறது. அவுரி எங்கும் கிடைக்கும் செடியினம். குறிப்பாக இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் பயிராகும் செடி. ‘வண்ணான் அவுரி’ என்ற பெயரும் உண்டு. இதன் இலைரசம் நீல நிறம் கொண்டது. இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு ஏராளமாய் மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. விளைநிலங்களுக்கு பசுந்தாள் உரமாகப் பயன்படுகிறது. விஷத் தாவரங்களினால் ஏற்படும் விஷங்களைப் போக்கி விடும் என்பதால் நிலத்துக்கும், பயிருக்கும், மனிதர்களுக்கும் மிகுந்த பயனளிக்கிறது.
முடி வளர் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், கூட்டணியில் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி மூலிகையாகும். அவுரியானது ஆரோக்கியம் கொடுக்கும். மலச்சிக்கலை நீக்கும். விஷங்களைக் கொல்லும் குணங்களைக் கொண்டது.
இதன் இலை பதினெண் வகை நஞ்சுகளைப் போக்கும். காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.
——–
ஸேஜ் (Sage)
புதினா குடும்பத்தைச் சேர்ந்த உறுதியான புதர்ச் செடி, ஸேஜில் உள்ள சத்து எண்ணெய்க்காக ஜம்முவில் பயிரிடுகிறார்கள். இலைகள் நறுமணம் கொண்டவை. வாடை அழுத்தமாகவும், துவர்ப்பாகவும், கசப்பாகவும் இருக்கும்.
கோழி மாமிசம், மசால், இறைச்சி போன்ற உணவுப் பண்டங்களுக்கு ஸேஜ் பெருமளவில் பயன்படும் பூண்டுச் செடிகளில் ஒன்று. உலர்ந்த இலைகள் மூலிகையாகப் பயன்படுகின்றன. பற்பொடி, கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
அழகுக்கூடும்…
பார்ஸ்லி -Parsley

மத்தியத் தரைக் கடல் பகுதி மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. எனினும் இலைகளுக்காக இந்தியாவில் வேளாண்மைத் துறையில் பயிரிடப்படுகிறது. இது குளிர்காலப்பயிர் என்பதால் மலைப்பிரதேசங்களில் செழித்து வளருகிறது.
செடியின் எல்லா பகுதிகளிலும் ‘பார்ஸ்லி எண்ணெய்’ என்ற சத்து எண்ணெய் கிடைக்கிறது. பார்ஸ்லியின் பச்சை இலைகள் உணவுப் பண்டங்களின் வாடையைக் குறைக்கப் பயன்படுகிறது. இலைகள் பச்சையாகவும், இலையமுதாகவும் உட்கொள்ளப் படுகின்றன. இறைச்சி, கோழி இறைச்சி சமையலில் வாசனைக்காகவும் ருசிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை தேனீர் பானம், சொறி, சிரங்குகளைத் தடுக்கும் குணம் கொண்டது. வைட்டமின் ‘சி’ அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். பழத்தின் தோல், பேன் போன்ற சருமப் பூச்சிகளை ஒழிக்க உதவும். பார்ஸ்லியை அளவோடு உபயோகித்தால் நலம் பயக்கும்.
சடாமஞ்சி
சீமை இனம், நாட்டு இனம் என இருவகை உண்டு. சீமை இனம் வட ஆசியா, வட காஷ்மீரம், சிந்து, பர்மா, இலங்கை முதலிய இடங்களிலும் நாட்டு இனம் இமயம், காஷ்மீர், பூட்டான் முதலிய பாகங்களிலும் பயிராகிறது. இது ஒருவகைப் பூங்கோரை இனம். இதற்கு நீண்ட ஆணிவேரும், பல சல்லி வேர்களுமுண்டு. புதிய வேருக்கு இனிப்பும், அதிக காரமான மணமுமிருக்கும். நாட்சென்றால் நாற்றம் பெறும். இவ்விரண்டு இனத்திற்கும் குணம் சற்றேறக்குறைய ஒத்திருக்குமென்பது கொள்கை.
சீமை இனத்தைப் பொடிசெய்து பத்திலிருந்து இருபது குன்றுமணி எடை நீரிற் கலந்து, நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை கொடுக்க சுரம், வலிப்பு நீங்கும். முக்கால் வராகன் எடை கொடுக்க கோழையை வெளிப்படுத்தும்.
நாட்டு இனத்துச் சடாமஞ்சியை நசுக்கி எடுக்கப்படும் எண்ணெய் அரோமா எண்ணெய் எனப்படுகிறது. இது மஞ்சள் நிறமாயிருக்கும். இது தலைமயிர் கறுத்து வளர உதவும். மேலும் சரும நோய்களுக்கும், கிரீம்களுக்கும் சேர்க்கப்படுகிறது.
சடாமஞ்சியை நசுக்கி வெந்நீரில் ஒருமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, அரைக்கால் முதல் கால் ஆழாக்கு வீதம் தினம் மும்முறை கொடுக்க சூதக சன்னி, வலிப்பு நீங்கும்.
லெட்டூஸ்-Beauty tips

கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இது இலைக் கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக் கீரை என்றும் கூறுவர். இதன் பிறப்பிடம் இந்தியாதான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தக் கீரையானது இமயமலைச் சாரலில் ஏராளமாக தன்னிச்சையாக வளரக் கூடியது. பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும். சில வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும். இலைகள் தடிப்பாக இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும்.
பச்சை நிறம் கீரைவகையைச் சார்ந்தது. சாலட்டுகளில் அழகுக்காக சேர்க்கப்படுவது எனினும் வைட்டமின் ‘ஈ’ சத்தும், அதிகப்படியான தாது உப்புக்களும் நிறைந்து காணப்படுகின்றன. புற ஊதாக்கதிர் மற்றும் சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும் சருமத்திற்கு நிவாரணமளிக்கிறது.
புரதம், தாது உப்புகள், வெப்ப ஆற்றல் முதலியன மிகுந்த கீரை, சிவப்பு அணுக்களைத் தோற்றுவிக்கும் ஒருவித சத்து இக்கீரையில் இருக்கிறது. இது சமையலில் இனிய மணத்துக்காகவும், சுவைக்காகவும் பலர் இதனை விரும்பி உண்கின்றனர். முதிர்ந்த இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்கின்றன.
இக்கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தரவல்லது. முச்சிரைப்பு நோயான ஆஸ்துமாவைக் கண்டிக்க வல்லது. இதிலுள்ள மாவுச் சத்து காரணமாக உடல்பருமனைக் குறைப்பதற்கு இந்தக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள். நிரிழிவு நோய்க்கு நல்ல பத்திய உணவு இக்கீரை.
செம்பருத்தி -Hibiscus

தோட்டங்களில் அழகுச் செடியாகவும், வேலித் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது. பசுமை நிறத்துடன் கூடிய தடித்த புதர்ச் செடி பல நிற மலர்களைக் கொண்டது. பூக்கள் தனித் தனியாகவும், அடுக்காகவும் காணப்படுகிறது. சிவப்பு ஐந்து இதழ்கள் கொண்ட நாட்டு செம்பருத்தி பூவே சிறந்தது.
இத்தாவரங்களில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.
மைசூர், பெங்களூர் போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
இலைகள், பூக்கள் மிகுந்த மருத்துவ பயன்கள் தருபவை. இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. வழுவழுப்பான தன்மை கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை. மாதவிடாயைத் தூண்டக் கூடியது.
இதழ்களின் வடிசாறு காய்ச்சலில் வெம்மை போக்கும். சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது. பூவின் இதழ்களை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து தடவ வழுக்கைக்கு நிவாரணமளிக்கிறது. கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.
காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும். தலை முடி உதிர்தல், புழுவெட்டு, இளநரை, செம்பட்டை முடி, இளவயதில் ஏற்படும் வழுக்கை இவற்றிற்கான தைலம் இப்பூக்களிலிருந்து தயாரிக்கலாம்.
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும்.
சிவப்பு பூக்கள் தான் மருத்துவச் சிறப்பு வாய்ந்தவையாகும். செம்பருத்திப் பூவில் தங்கச் சத்து உண்டு என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும். தினந்தோறும் அதிகாலையில் ஒன்றிரண்டு மலர்களைத் தின்று வந்தால் பருவம் அடையாத பெண்கள் பருவமடைவார்கள். வழுக்கைத் தலையில் பூவின் சாற்றை தேய்த்தால் நாளடைவில் வழுக்கை மறையும்.
ஒற்றையினப் பூவோடு, பொடுதலை, கோரைக் கிழங்கு, மருதாணி இலை சேர்த்து இடித்து தலையைச் சுத்தம் செய்து பூசி வந்தால் கூந்தல் வளர்வதோடு முடியும் கறுப்பாகும். உடல் குளிர்ச்சி பெற்று மயிர் உதிர்வது தடுக்கப்படும். ஒற்றைச் செம்பருத்திப் பூ, மருதாணி இலையுடன், பத்து மிளகு சேர்த்து மைபோல அரைத்து நரைமுடி உள்ளவர்கள். முடி கொட்டியவர்கள், கண் மயிரிலர் பூச்சி வெட்டியவர்களை தேய்த்து வந்தால் நல்ல பலன் கிட்டும்.
காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.
கடற்பாசி (ஸ்பைருலினா) -Spirulina

இலங்கையைச் சேர்ந்த கடலிலும், நம் நாட்டுக் கடலிலும் விளைகிற ஒருவகைப் பூண்டு. இதைக் காயவைத்து எடுத்து மருந்தாக உபயோகிக்கலாம்.
பச்சையம் அதிகம் செறிந்த இந்தப் பவுடர் சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியது. சருமத்திற்கு ஈரப்பதம், பொலிமை, இளமை அளிக்கக் கூடியது.
கடற்பாசி பவுடருடன் சிறிது கருவாப்பட்டை சேர்த்துக் காய்ச்சி, கூழ்ப்பதமாக எடுத்து ஆறவைத்து, சிறிது சர்க்கரையும், திராட்சை ரசமும் சேர்த்து உள்ளுக்குக் கொடுத்துவர, நோயுற்றிளைத்தவர்கள் மிகுந்த உடல் வலிமையும், ஊக்கமும் பெறுவார்கள்.
ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மின் கதிர் வீச்சால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகளை முறியடிக்க வல்லது. உள்மருந்தாகவும், உபயோகப்படுத்தப்படுகிறது.
சிறிது ஆரஞ்சு பழச்சாறு மற்றும் பால் பவுடருடன் கலந்து முகத்திற்குத் தேய்த்துக் கழுவ, தொய்வடைந்த சருமம் வலுப்பெறும். வயோதிகத் தோற்றம் மாறும். சருமம் சமச்சீரான நீர்ச்சத்தினைப் பெற்று அழகுடன் விளங்கும்
மஞ்சள் -Turmeric

இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். மஞ்சள் ஆண்டுதோறும் வளரும் பூண்டு வகைச்செடி. 60 முதல் 90 செ.மீ. உயரம் வளரும். இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைதது மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்கள்தான் மஞ்சள்.
நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். பச்சை மற்றும் உலர்ந்த கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. மஞ்சளில் இருந்து கிடைக்கும் சத்து எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
சுத்திகரிக்கப்பட்ட, பளபளப்பூட்டப் பெற்ற வேர்த்தண்டுதான் மஞ்சள். சமையலில் நிறமும், சுவையும் கூட்டும் மஞ்சள் மருத்துவ குணங்கள் மிகக் கொண்டது. இதில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது. இதில் கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள் என்று பல வகைகள் உள்ளன. ‘ஆலப்புழை மஞ்சள்’ தான் உலகிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
துணிகளுக்கு சாயம் ஏற்றவும், மருந்துகளிலும், ஒப்பனைப் பொருட்களிலும் மஞ்சளுக்கு தனி மகிமையே உண்டு. இந்துக்கள் மஞ்சளை மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.
பதார்த்தங்களுக்கு நிறம் தருவதற்காக மட்டுமின்றி, மசாலாவில் உள்ள காரத்தால் குடலில் புண் தோன்றாது காக்கவும், பருப்பு வகைகளில் உள்ள வாய்வுகளை அகற்றவும், உதவுவதுடன் காய்கள் நிறமிழக்காமல் தூய்மையடையவும், மீன் மாமிச வகைகளிலுள்ள நச்சுத்தன்மை மற்றும் விரும்பத்தகாத நாற்றங்களைப் போக்கவும் மஞ்சள் பயன்படுகிறது.
இன்றும் பருத்தித் துணிகளுக்கு சாயம் கொடுப்பதற்கும் பூச்சு வண்ணங்கள், வார்னிஷ் முதலியவை தயாரிக்கும் தொழில்களுக்கும் மஞ்சள் பயன்படுகிறது.
மஞ்சள் கலந்த நீரை வீட்டு முற்றங்களிலும், வெளிப்பகுதிகளிலும் தெளித்து வைப்பதன் மூலம் தொற்று நோய்க் கிருமிகள் அணுகவொட்டாமல் செய்யலாம். அளவாக மஞ்சள் பூசிக்கொள்வதால் பெண்களின் முகத்திற்கு வசீகரம் உண்டாகும். சருமம் வறட்சியடைவதில்லை. முதுமைக்குரிய குறிகளைக் தோற்றுவிப்பதில்லை. இரத்தக்கட்டை அகற்றுவதில் மஞ்சளுக்கு ஈடான மருந்து வேறில்லை. மஞ்சளை நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி தைலத்தை உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் தோன்றாது. பெண்களுக்கு ஏற்படும் ‘ஹிஸ்டீரியா’ எனும் நோய்க்கு மஞ்சள்புகை நல்ல மருந்து.
மங்கல உணர்வுடன், மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம் போன்ற பொருட்கள் நமது இந்துப் பெண்களுக்கு சிக்கனமான நாட்டு ஒப்பனைச் சாதனங்களாகப் பயன்படுகின்றன. உடல் முழுவதும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், சருமம் பொலிவடைகிறது.
மஞ்சளில் உடலின் நிறமியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. பல சரும நோய்களுக்கு பச்சை மஞ்சள் கிழங்குளின் சாறு ஓட்டயிர்க் கொல்லியாகப் பயன்படும். பெரியம்மை நோய்க்கு மஞ்சளை, நல்லெண்ணெய், வேப்பிலையுடன் அரைத்து தடவ வடுக்களை அகற்றி, கிருமிகளை அழித்து, உடலுக்கு வனப்பைக் கொடுக்கும்.
இந்திய மருத்துவத் துறையில் மருத்துவத் தைலங்கள், களிம்புகள் தயாரிப்பிலும் மஞ்சள் முக்கிய இடம் பெற்றுள்ளன. தோலின் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைப் போக்கக் கூடிய திறன் கொண்டது. புண்களை விரைந்து ஆற்றக்கூடியது.
வீக்கங்களைப் போக்குவதில் மஞ்சளுக்கு அதிக சக்தி உள்ளது. தோல் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாகிறது. மஞ்சளுக்கு ‘கொலஸ்டிரால்’ அளவினைக் குறைக்கும் திறனும் உண்டு.
பருவ வயதில் தோன்றும் முகப்பருக்களைத் தடுப்பதோடு அவற்றுக்கு சிகிச்சையாகவும் மஞ்சளின் நஞ்சடைத் தன்மைகள் பயன்படுகின்றன. பெண்களின் உடலிலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தகிறது.
இது மூன்று அடி வரை தோகையுடன் வளரக் கூடியது. பூமியில் மிருதுவான மணற்பாங்கான இடங்களில் இஞ்சியைப் போன்று பயிராகிறது. வயிற்றில் புண்கள் இருந்தால் அதை ஆற்றும் சக்தி மஞ்சளுக்குண்டு. புண்களில் உள்ள சீழை வெளியேற்றும்.
பித்த வெடிப்பு :
காம்பு நீக்கி சீத்தா இலை 10, 1 முட்டை வெள்ளைக்கரு, 1 அங்குல பச்சை மஞ்சள் மூன்றையும் கலந்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கைக்குப் போகுமுன் கால்களை சுத்தமாக்கி பின் இக்களிம்பை தடவி வெள்ளை துணியால் சுற்றிக் கொண்டு உறங்க வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு பாதங்களைக் கழுவி, ஈரம் போகத் துடைக்க வேண்டும். தொடர்ந்து 4 நாட்கள் செய்ய பித்த வெடிப்பு குணமாகும்.
ஆழமற்ற வடுக்கள் என்றால் மஞ்சள்பொடி, திருநீறு இரண்டையும் சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு பவுடர் போல் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் குணமாகும்.
மஞ்சளைச் சாதத்துடன் சேர்த்தரைத்துக் கட்டிகளின் மீது வைத்துக்கட்ட அவைகள் எளிதில் பழுத்துடையும். மஞ்சளைக் சுட்டு முகர நீரேற்றம் நீங்கும். மஞ்சளுடன் ஆடாதோடா பாலை இலை சேர்த்து பசுவின் நீரை விட்டரைத்துப் பூச சொறி, சிரங்கு, நமைப்படைகள் ஒழியும். மஞ்சள் நீரை அருந்த காமாலை போகும். மஞ்சளை அரைத்து நீரிற்கலக்கி, வெண்சீலைக்குச் சாயமேற்றி அவ்வாடையை உடுப்பதால் வாதநீர்ச்சுருக்கு, இருமல், ஜுரம், மலக்கட்டு இவை நிங்கும்.
மஞ்சள் நீரில் நனைத்த துணியினை நிழலிலுர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள் கண்களை அப்போதைக்கப்போது துடைத்துவர கண் சிவப்பு, கண்ணருகல், கண்ணில் நீர் கோர்த்தல் போன்றவை தணியும்.
கஸ்தூரி மஞ்சள் --Kasturi Manjal

மஞ்சள் குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் மிகுந்த வாசனை கொண்டது. இந்தியாவின் பல பகுதிகளிலும் பயிரிடப்படும் மருந்துத் தாவரமாகும். பல்வேறுபட்ட மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தி வரும் ஓர் உயரிய மருத்துவப் பொருளே கஸ்தூரி.
புற்று நோயின் கடுமையைக் குறைக்கக் கூடியது. மிகுந்த வாசனைமிக்க இதன் பொடி, வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட் தயாரிப்புகளில் பெரும்பங்கு வகிக்கின்றன.
சற்று தூக்கலான மணம் உள்ளதாகும். சற்று பெரிய அளவில் காணப்படும் கஸ்தூரி வாசனைப்யூட்டக்கூடிய தயாரிப்புகளுக்கு பிரதானப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. கஸ்தூரி மஞ்சளைக் கொண்டு தயாரிக்கப்படும் குளியல் பொடிகளை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தேய்த்துக் குளித்துவந்தால் உடல் மட்டுமல்லாது கண்பார்வையும் ஆரோக்கியமாக இருக்கும்.
கதிர்வீச்சிலிருந்து தோலினைப் பாதுகாக்கும். சருமத்திலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். கஸ்தூரி மஞ்சள் இலையின் சாறை தலைக்குத் தடவ, தலை சம்பந்தமான நோய்கள் தீரும்.
கஸ்தூரி மஞ்சளுடன் கருந்துளசியைச் சேர்த்து அரைத்து உடலெங்கும் தேய்த்து வைத்திருந்து இளஞ்சூட்டில் குளித்து வந்தால் உடல் கவர்ச்சியுடனும், பளபளப்பாகவும் விளங்கும்.
கஸ்தூரி உடலின் தாதுக்களுக்குத் தேவையான பலத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து, உடலில் ஏற்படும் பல்வேறுபட்ட நோய்களுக்கும், வலிப்பு, இழுப்பு, உடற்சோர்வு, இளைப்பு, பலவீனம் ஆகியவற்றை நீக்கி முகத்தில் பொலிவையும், அழகையும், முகத்திற்கு ஒருவித ஒளியையும் தரும்.
ஒரு கண்ணாடி தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அவற்றில் சிறிது கஸ்தூரியை போட்டு பார்த்தால் அது ஊதா நிறத்தோடு கீழிறங்கும். இவையே உண்மையான கஸ்தூரியாகும்.
அகில்-Agile

அகில் சந்தன மர வகையைச் சார்ந்தது. அகில் கட்டை இலேசான இனிப்பும், கசப்பும் கலந்த சுவை உடையது. உடலின் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. சுமார் 60 முதல் 75 அடி வரையிலும் வளரக் கூடிய மரம். இம்மரங்களில் ஒருவித பிசின் இருக்கிறது. அதுவே அகில் எனப்படுகிறது.
இந்தியாவில் அஸ்ஸாம் காடுகளிலும், கம்போடியா, பர்மாவிலும் அதிகம் காணப்படுகிறது. மருத்துவ முறைப்படி பக்குவம் செய்து சாப்பிட நரை, திரை போன்ற முதுமைக்கால சருமக் குறைபாடுகளை அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
அகில் கட்டையை பசும்பால் விட்டு சந்தனம் அரைப்பது போல் அரைத்து, விழுதை சருமத்திற்கு தொடர்ந்து பூசி வர, சருமத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கும்.
ஊளைச் சதை உள்ளவர்கள் இந்த விழுதை தொடர்ந்து உடலில் பூசி வர ஊளைச் சதைக் குறைந்து இறுகி, உடல் வனப்புடன் விளங்கும் என மருத்துவக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.
சந்தனம் போன்று நறுமணம் கொண்டது. பண்டைக் காலங்களில் அகிற்புகையூட்டி கூந்தலை உலர்த்தியிருக்கிறார்கள். இதிலிருந்து வடிக்கப்படும் தைலம் “அகர் அக்தர்” எனப்படுகிறது. இது தனியாகவும், பல உயர்ந்த வாசனைப் பொருள் தயாரிப்பில் கூட்டுப் பொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவம், ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலும் சிறப்பிடம் பெறுகிறது.
வெப்பத்தைத் தூண்டும், பித்தத்தைப் பெருக்கும், வீக்கங்களை வடிக்கும் செய்கையுடையது. வயோதிகத்தால் உண்டாகும் தேகத் தளர்ச்சியைப் போக்கி உடம்பை இறுக்கும். சந்தனம் போல அகிற்கட்டையை உரைத்து மேனியில் பூசிவர, வயோதிக மேனித் தளர்ச்சி நீங்கும். ஆண்மை விருத்தியில் அகிற்கட்டையும் பங்கு கொள்ளும்.
அகிற்கட்டை தைலம் வடித்து தலைக்கு உபயோகித்து வர மூக்கடைப்பு, பீனிசம் போன்ற நோய்கள் அணுகாது.
அகிற்தைலம் :
அகிற் ஊறவைத்த நீர், நல்லெண்ணெய், பசும்பால் வகைக்கு ஒரு படி எடுத்து ஒன்று கூட்டி, இதில் அதிமதுரம், தான்றிக்காய்த் தோல் சிறிது எடுத்து பசுவின் பால் விட்டரைத்துக் கலந்து, எரித்துப் பதத்தில் வடித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
இத்தைலத்தை தினசரி தலைக்குத் தடவிவர நீர்க்கோவை, மேகம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் தீரும்.
சந்தனம் -Sandalwood tree

மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா. இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.
மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். கட்டையை பழச்சாற்றில் உரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு பூசலாம். புருவத்தின் வலிகளுக்கு உரைத்துப் பற்றிடலாம். சந்தனாதித் தைலம் தேய்த்து தலைமூழ்கி வர உடல் சூடு தணிந்து முறைப்படும்.
சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. பருமனுக்கு ஏற்ப மிக விலை உயர்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மரத்தின் மையம் பகுதியிலும், வேர்ப்பகுதியிலும் சேகரித்து வைத்துக் கொள்ளப்படுகிறது. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது.
சந்தனம் தமிழர் வாழ்வில், மருந்தில் மிக முன்காலத்திலிருந்து பயன்பட்டு வந்துள்ளன. வெளி உபயோகத்தில் மட்டுமல்ல உள் மருந்தாக உண்பதாலும் பல பிணிகள் நீங்கும்.
மிகுந்த நறுமணத்துடன் நீடிக்கவல்ல தன்மையுடன் இருப்பதால் மணமுள்ள பொடிகள் தயாரிக்கவும், ஒப்பனைச் சாதனங்களில் சேர்க்கப்படும் வாசனைப் பொருளாகவும், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ஒளிக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் களிம்புகள் அனைத்து வித சருமத்திற்கும் ஏற்றது.
சருமத்திற்கு மிருதுத் தன்மை அளிக்கக்கூடியது. காய்ச்சலையும், ஒற்றைத் தலைவலியையும் போக்கும் குணமும் உண்டு. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.
பக்கவாதம், முடக்குவாதம், அஜீரணம் எனப் பல நோய்களைப் போக்கும். மேல் பூச்சாக தோல் வியாதிகளைப் போக்கும். தளர்ந்த சருமத்திற்கு இறுக்கமளிக்கும். பாலுணர்வை ஊக்குவிக்கும் செயல் ஊக்குவியாகவும் செயல்படுகிறது. உலர்ந்த மரக்கட்டைகள் பொடியாக்கப்பட்டு நீருடன் சேர்த்து கொப்புளங்களுக்கு களிம்பாகவும், தோல் வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும் தோல் வியாதிக்கு பயன்படுகிறது.
தலையில் அரைத்துப் பூச சுரத் தலைவலி, கோடைக்கட்டிகள் அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும், இருதயத்திற்கும் உள்ள பலவீனம் நலமடையும்.
சந்தனம் இரத்தத்தை சுத்தி செய்து, தேகத்தைக் குளிர்பித்து, மார்புத் துடிப்பு, மனபயம் முதலியவற்றை குணப்படுத்தும். சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றுடன் அரைத்துக் தடவ நமைச்சல், சொறி சிரங்கு, அக்கி, படர்தாமரை, வீக்கம், தேமல் சரியாகும்.
அமுக்கிராங்கிழங்கு (அஸ்வகந்தி) -Aswaganthi

இந்தியாவிலும் பலுசிஸ்தானத்திலும் பயிராகும் சிறு செடி. கீழ் வங்காளத்தில் கிடைப்பதில்லை. இச்செடி சாம்பல் நிறமுள்ளது. காய் தக்காளிக் காயைப்போலத் தோலால் மூடப்பட்டு உள்ளே காயிருக்கும். பழுத்தால் பழம் செந்நிறமாயிருக்கும்.
இது நம்நாட்டு ஜின்சங். கிராமங்களில் சிறிய புதர்க்காடுகளில் வளரக் கூடிய கத்தரி இனத்தைச் சேர்ந்த செடி இனமாகும். அமுக்கணாங் கிழங்கு என்றும் கூறுவர். அமுக்கரா செடியின் சதைப் பற்றுள்ள வேர் அமுக்கிராங்கிழங்கு எனப்படுவதாகும். ஆயுர்வேதத்தில் இது அஸ்வகந்தி எனப்படுகிறது.
சீனா, கொரியாவில் பிரசித்தி பெற்ற ஜின்செங் என்ற செடியின் வேருக்கு சமமான பலன் இதில் உண்டு. வெப்ப குணமுள்ள அமுக்கரா வேரைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்திலிட்டு மூழ்க பசும்பால்விட்டு வேகவைத்து பால் சுண்டின பின் அளவிட்டு நீரில் அலம்பி வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்த வேண்டும். சிறிது துவர்ப்புள்ள இக்கிழங்கினால் சகலதோஷம் நீங்கும்.
அமுக்கிராங் கிழங்கினால் கஷாயம், வாதநோய், தோல் நோய், வயோதிக பலஹீனம் போகும். கிராம மக்களிடையே இப் பச்சைக்கிழங்கை அம்மியிலரைத்து காரக்குழம்பில் கலந்து சமைத்துண்ணும் பழக்கம் நடைமுறையிலுள்ளது. பச்சை அமுக்கிராங்கிழங்கை அரைத்துக் கட்டி, அடிபட்ட வீக்கம், வாத வீக்கங்களின் மேல் பூசி வைக்க வீக்கம் வற்றி விடும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி விதையைச் சுத்தம் செய்து 100 கிராம் எடுத்து சம அளவு சுத்தி செய்த அமுக்கிராங் கிழங்குகளோடு சேர்த்து நன்கு இடித்து தூளாக்கி சலித்து சமஅளவு கலந்து வைத்துக் கொள்ளவும். காலை, இரவு, உணவுக்குப்பின் 1 ஸ்பூன் வீதம் காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டுவர, கை, கால் ஓய்ச்சல், நரம்புத்தளர்ச்சி நீங்குவதுடன் உடல் உறுதி, காமவிருத்தி, நீண்ட ஆயுள் ஏற்படும். பத்தியமில்லை.
அமுக்கிராங் கிழங்கை பொடி, நெய் முதலியன செய்து பயன்படுத்தினால் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் முதலியவைகள் உண்டாகும். இதைச் சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டரைத்து, வீக்கங்களுக்குப் போட வீக்கம் கரையும். கிழங்கு அல்லது இலையை அரைத்து நோயுடன் கூடிய வீக்கம், புண் இவைகட்குப் பூசலாம்.
கிழங்கைப் பாலில் வேகவைத்து அலம்பி, உலர்த்தி பொடிசெய்து ஒருவேளைக்கு இரண்டு முதல் நான்கு கிராம் வரை தேனில் கலந்து கொடுக்க பசியின்மை, உடல் பருமன் இவைகள் போகும்.
அமுக்கிராக்கிழங்குப் பொடி ஒரு பங்கும், கற்கண்டு மூன்று பங்கும் சேர்த்து வேளைக்கு நான்கு கிராம், காலை, மாலை உட்கொண்டு அரை அல்லது ஓர் ஆழாக்கு பசுவின்பால் சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும். உடலுக்கு அழகு தரும்.
அதிமதுரம் -Adhimaduram

நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.
ஸ்பெயின், துருக்கி, சிரியா, ஈரான் நாடுகளிலும் விளைகிறது. வெண் திட்டுகள், வெண்குட்டம் கண்ட இடத்தில் பூசி ஊற வைத்துக் குளித்து வர வெண்மை மாறி வரும். அதிமதுரத்தை தொடர்ந்தும், அதிகமாகவும் உண்ண உடல் எடை கூடும்.
இது ஆற்றங்கரைகளில் வளரும். வெளிநாட்டுக் குண்டுமணிச் செடியின் வேருக்கு அதிமதுரம் எனப் பெயர். ரஷ்யாவிலும், சீனாவிலும் இது விளைகிறது. 24 அடி உயரம் வரை உயர்ந்து வளரும் செடி அதிமதுரம், வேர் வெட்ட வெட்ட அழியாது. பல வருடங்கள் கழித்தும் வெட்டிய வேர் துளிர்க்கும். பல நோய்களை அழிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அதிமதுரம் இனிப்பு சுவையுள்ள வேர். ஸ்பெயினில் நன்கு வளரும்.
சுருட்டுப் பருமனில் ஏறத்தாழ அதே நீளத்தில் குச்சி, குச்சியாக சிவப்புச் சாயலுடன் அதிமதுரம் இருக்கும். இதில் ஹைட்ரோ கார்டிகோன் என்ற ஒரு பொருள் இருக்கிறது. நச்சுக் குணம் சிறிதும் இம் மூலிகையில் இல்லை. கொழுப்புப் பொருட்களை நன்கு ஜீரணிக்க உதவும் பண்பு இதற்கு உண்டு.
தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம். அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.
அதிமதுரம் என்றால் அதிக இனிப்புள்ளது என்று பொருள். இதன் வேர்ப்பகுதி தான் அதிமதுரம். இதை வடமொழியில் யஷ்டிமது என்றழைப்பர். இது இமயமலை அடிவாரத்தில் ஏராளமாக வளர்கிறது.
பண்டைய காலத்தில் எகிப்து, சீனம், கிரேக்கம் போன்ற நாடுகளில் புகையிலைகளுடன் அதிமதுரம் சேர்த்து புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் புகையினால் ஏற்படும் தீமைகள் தவிர்க்கப்பட்டது. அதிமதுரத்திலிருந்து எடுக்கப்படும் சத்தானது கரும்பின் சர்க்கரையை விட ஐந்து மடங்கு இனிப்பு கொண்டதாகும்.
அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.
பாதாம் பருப்பு-Almonds

அனைவரும் அறிந்த அழகு சாதனப் பொருள். பெரிய பழவகையைச் சேர்ந்தது. இதன் கொட்டைகளிலுள்ள பருப்புகள் புரதசத்து மிகுந்தது. நினைவாற்றலை வளர்க்கக் கூடியது. இளைய தலைமுறையினருக்கு உடல், உள்ள வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணை புரியக்கூடியது. உடலுக்கு முக்கிய தேவைகளான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிரம்பப் பெற்றது.
கேசம் மற்றும் சரும பராமரிப்பிற்கு உறுதுணை செய்யக்கூடிய துத்தநாகச் சத்தும், சருமத்திற்கு வனப்பும், இளமைத் தன்மையும், புற்று நோயை எதிர்த்து கிருமிகளை நாசம் செய்யக் கூடிய வைட்டமின் ‘இ’ சத்தும், எலும்பின் உறுதிக்கு தேவையான கால்சியம் மற்றும் தசைகளின் சக்திக்குத் தேவையான மக்னீஷியமும் பாதாம் பருப்பில் செறிந்து காணப்படுகிறது. இதிலுள்ள புரதம் உடலில் தங்கி பக்க விளைவுகளை உண்டாக்காது. உடலுக்கு சக்தியையும் வலுவையும் மட்டுமே சேர்க்கக் கூடிய தன்மையுடையது.
சரும நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்கவல்ல ‘ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள்’ உள்ளன. இதிலுள்ள புரதசத்து சமைத்த இறைச்சிக்கு சமமானவை. எனவே இவை அழகுக்கும், நோயில்லா ஆரோக்கிய வாழ்விற்கும், உத்திரவாதமானவை. சருமத்தை சுத்தம் செய்யும் மிருதுத் தன்மை அளிப்பதால் சருமப் பராமரிப்பிற்கான பொருட் தயாரிப்பின் சேர்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமப் பராமரிப்பின் தலையாய ‘அரோமா’ எண்ணெய் ஆகும்.
சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தையும், குறிப்பாக கண்ணின் கருவளையததிற்கும் பயனளிக்கும். சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் “ப்ளீச்” தன்மை இருப்பதால் கண்ணின் கருவளையம் எளிதில் மறையும்.
வெந்தயம்-Fenugreek Seeds

மேத்தி என வடநாட்டவரால் குறிப்பிடப்படும் வெந்தயம் மத்திய தரைக்கடல் நாடுகளில் பயிரிடப்படும் பூண்டுச் செடியாகும். இதன் உலர்ந்த பழமே வெந்தயமாகும். மஞ்சள் நிற விதைகள் கசப்புச் சுவை கொண்டவை எனினும் மருத்துவ குணமும், நல்ல மணமும் கசப்புச் சுவையும் கொண்டது.
இதன் இலைகளும், விதைகளும், உணவுப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வெந்தய விதைகளில் புரதம், மாவுச்சத்து, சர்க்கரை பிசின், வைட்டமின் உலோகச் சத்து, செரிமானப் பொருள்வகை முதலியன அடங்கியுள்ளன. இந்த விதையில் சத்துள்ள அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. செடியின் இலைகளிலும், தண்டுகளிலும், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, அஸ்கார்பிக் அமிலம் ஆகியன அடங்கியிருக்கின்றன.
நமது தேசமெங்கும் தோட்டப் பயிரில் பயிரிடப்படுகிறது. நறுமணம் பொருந்திய வெந்தயமும், அதன் இலைகளும், தண்டுகளும் உலகம் முழுவதிலும் சமையலிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இரவில் சிறிதளவு வெந்தயத்தை சுத்தமான நீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் ஊறிய வெந்தயத்தோடு நீரையும் பருகுவதால் உஷ்ண உபாதையிலிருந்து விடுபடலாம். தற்போது கருத்தடை மருந்துகளிலும் வெந்தயம் பயன்படுகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தலை வழுக்கையைத் தடுக்கும் மருந்தாகவும் பயன்பட்டு வந்தது. வெந்தயத்தை உணவில் சேர்க்க, உடல் செழுமையாக இருக்கும். உடல் வலியும் தீரும். கல்லீரல் நோய்களை நீக்கும்.
நமது அன்றாட உணவின் அங்கமாகவும், நறுமணப் பொருள் என்ற வகையில் உணவு வகைகளில் ஊட்டச்சக்தியையும், சுவையையும் அதிகரிக்கின்றது. நீரிழிவு நோய்க்கு நல்ல பலன் அளிக்கும் என நம்பப்படுகிறது.
குளிர்ச்சித் தன்மையளிப்பதால் பெரியம்மை நோய் கண்டவர்க்கு பானமாகவும், உடலுரமுண்டாக்குவதற்கும், ஆண்மை பெருக்குவதற்கும் பயன்படுகிறது.
கூந்தல் தைலத்திலும் வாசனைப் பொருள்களிலும், சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது. ரிக்கெட்ஸ், இரத்த சோகை, நீரிழிவு ஆகிய துன்பந்தரும் நோய்களை குணப்படுத்தும் குணமும், திறனும் இதற்குண்டு. இலைகள் உடலுக்கு குளிர்ச்சியூட்டும். மிதமான பேதி மருந்து, புறவீக்கம், தீக்காயங்கள் இவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. வறுத்த வெந்தயப் பொடி மெலிந்த உடலைப் பெருக்கச் செய்யும்.
பச்சை பயறுடன் வெந்தயம் சேர்த்து வெந்நீரில் குழைத்து உடல், முகம், கை, கால்களால் தடவி வர தோல் பளபளப்பாகும்.
வெந்தயம் கீரையை பருப்புடன் கடையலாகச் செய்து சாப்பிட்டு வர பசியின்மை, இருமல், சிறநீரக எரிச்சல் குணம் ஆகும். இக்கீரையை நாமே தொட்டிகளில் பயரிடலாம். இதை விதைத்து 10 நாட்களில் 2 அல்லது 3 இலை விட்டதும் பறித்து சமைக்க வேண்டும். இல்லையெனில் அதில் நார்ப்பொருள் அதிகமாகி, மிகவும் கசப்பாக இருக்கும்.
வெந்தயம், பச்சைப் பயறோடு, பொன்னாங்கண்ணிக் கீரையை அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால் தலை சம்பந்தமான நோய் நீங்கும்.
வெந்தயக்கீரை
வைட்டமின் ஏ சத்தும் சுண்ணாம்புச் சத்தும் நிறைந்தது. வெந்தயக்கீரை இளஞ்செடியுடன் இருக்கும் போதே பறித்து பயன்படுத்த வேண்டும். அஜீரணக் குறைபாடுகளை வெந்தயக்கீரை எளிதாக அகற்றிவிடும். ஜீரணசக்தி இக்கீரைக்கு அதிகமுண்டு. தொடர்ந்து வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட சொறி, சிரங்கு அகலும். பார்வைக் கோளாறுகளையும் இது அகற்றும். ஒன்றுவிட்டு ஒரு நாள் உணவோடு ஏதாவது ஒரு வகையில் வெந்தயக்கீரையைச் சேர்த்துக் கொள்வதை பழக்கமாகக் கொண்டு விடுவது நல்ல பலனைத் தரும். கோடைக்குக் குளிர்ச்சியூட்டும் கீரை இது.
ஓட்ஸ்-Oats

நெல்லைப் போன்ற புற்செடித் தாவரம். இதன் தானியம் ஓட்ஸ். காய்ந்த தானிய விதையான ஓட்சில் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் ‘பி’யும், தாது உப்புக்கள், பொட்டாசியம், பாஸ்பரசும் உள்ளன.
பண்டைய காலங்களில் ஆங்கிலேயர்களால் குதிரைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனெனில் இதில் நிறைந்துள்ள புரதம் மற்றும் வைட்டமின் தாதுக்களால் கால்நடைகள் மிகவும் வனப்பாக வளர்க்கப்பட்டன.
இத்தானியத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், ஜீரண உறுப்புகள் இயங்கவும், உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இருதயத்திற்கும், எலும்புகளுக்கு உறுதியையும் கொடுக்கும் தன்மை இருப்பதால் நாளடைவில் இது மனிதர்களின் அன்றாட உணவிலும், அழகு சாதனத் தயாரிப்பிலும் பங்கு வகிக்கலாயிற்று.
வைட்டமின் ‘இ’ மற்றும் ‘பி’ காம்ளக்ஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீஷியம் போன்ற தாது உப்புகளும், தமனிகளின் சுவர்களை வலுப்படுத்தும் சிலிக்கான் என்னும் தாதும் நிறைந்து காணப்படும் தானியமாகும்.
வைட்டமின் ‘இ’ சத்து சருமத்திற்கு அதிகப்படியான ஊட்டச்சத்தையும், நீர்மத்தையும் அளிக்கிறது. சருமத்திலுள்ள வேண்டாத கழிவுகளை வெளியேற்றுகிறது. ஒவ்வாமை அதிகமான சருமத்திற்கு இத்தானியச் சேர்க்கையில் தயாரிக்கப்படும் அழகுப் பொருட்கள் ஒத்துப் போகின்றன.
ஜீரணத்திற்கு சிரமம் தராது. நோயாளிக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய உணவு மருந்தாக ஓட்ஸ் உள்ளது. குளிர்ப்பகுதியில் விளையும் தானியமான ஓட்ஸில் பல பிரிவுகள் உள்ளன. நரம்பு மண்டலத்திற்கு நன்மை செய்கிறது. இரத்தம், மயிர், நகம், பற்கள் போன்றவை இதில் உள்ள சத்துக்களால் பயன் அடைகின்றன.
இருதயத்திற்கு ஓட்ஸ் லேசான பலமூட்டியாக உள்ளது. கொலஸ்டிராலை கட்டுப்படுத்துகிறது. மூளைக்கும், நரம்புக்கும் ஊட்டம் தருவதால் நல்ல தூக்கம் தரக்கூடியது.
சோம்பு-Anise seeds

நறுமணங் கொண்ட சிறிய பூண்டுச் செடி இது. இதன் உலர்ந்த பழங்களே சோம்பு. நறுமணமும், இனிப்புச் சுவையும் கொண்டது. வட இந்தியாவில் குளிர்காலப் பயிராகவும், தென்னிந்தியாவில் மலைப் பிரதேசங்களிலும் வளருகின்றன.
சோம்புத் தைலம் நிறமற்றதாக அல்லது வெளுத்த மஞ்சள் நிறமாக நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். இலைகள் சமையலுக்கு மணமும், வனப்பும் தருவதற்கு உதவுகின்றன. இலைகள் சிறுநீர் பெருக்கும் தன்மையுடையவை. சிறுநீரக நோய்களின் சிகிச்சையில் உதவுகின்றன. சமையலுக்கு குறிப்பாக இறைச்சி வகைகளுக்கு மணம் கூட்டுகிறது.
வாயுவை அகற்றவும், தாய்ப்பால் சுரக்கவும், வியர்வை பெருக்கவும் நாட்டு மருந்துடன் உபயோகிக்கப்படுகிறது. சோப்புகளுக்கு வாசனை கூட்ட உதவுகிறது.
மாசிக்காய் -Nutmeg

‘மேஜிக் நட்’ என்று இதற்கு மறுபெயர். ஜாதிக்காய் பருமன் மாசிக்காய் இருக்கும். ஒரு சிறு துவாரம் இதில் இருப்பதுண்டு. துவாரம் விழுந்தக் காய் மருத்துவ குணம் அதிகம் பெற்றது என்று கூறுவர் வைத்தியர். நீல நிறத்தில் சாம்பல் நிறம் (கிரே கலர்) கலந்து கொட்டை காட்சியளிக்கும். உடைத்து உட்பகுதியைப் பார்த்தால் வெண்மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை நுண் தூளாக்குவது எளிது. எல்லா மளிகைக் கடைகளிலும் கிடைக்கும். கிராமப்பகுதி மக்கள் வாய்ப்புண்ணிற்கு இதை வாயில் அடக்கி வைத்துக் கொள்வர். மேல்நாட்டு மருத்துவத்திலும் இதை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
நல்ல துவர்ப்புச் சுவையுடையது. இதனால் வாய், தொண்டை, உதடு, பல்லீறு, பெண், ஆண்களின் மெல்லிய சதைகளில் ஏற்படும் புண், மூலிகை விஷங்களால் ஏற்படும் நச்சுத்தன்மையைக் கண்டிக்கும். சிறுநீரை எளிதாக வெளியேறும் படி செய்யும். மாசிக்காய் தூளை நீர் அல்லது பாலில் குழைத்து தலை மயிரில் தடவி ஊற வைத்துக் குளிக்க மயிர் கருமை நிறமடையும்.
மாசிக்காய்த் தூளை வினீகருடன் கலந்து தேமல், படைகளுக்குப் பூசி ஊறவைத்துக் குளிக்க நிவாரணம் கிட்டும். மாசிக்காயை எரித்து எடுத்த சாம்பலை இரத்தக் கசிவுள்ள புண்களில் தூவக் கசிவு குறையும். உடலில் தூவி குளிக்க வியர்வை நாற்றம் மட்டுப்படும். பிறப்புறுப்பைக் கழுவும் கஷாயமாக வெள்ளைப்படுதல் சிரமத்தைப் பெண்களுக்குக் குறைக்கும். பல்வலி மருந்துகளில் மாசிக்காயும் ஒன்று.
அழகுக்கூடும்…
கடுக்காய் -Terminalia chebula

உச்சி முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் உடல் பிணிகள் பலவற்றை குணப்படுத்தும் இக்காய் பக்க விளைவுகள் ஏற்படுத்தாது. திரிபலாத் தைலமாக தலையின் பொடுகு, நரையைக் குணப்படுத்தும் கொண்டது.
கடுக்காய் மலைகளில் தான் பயிராகும். கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக் கடுக்காய், பால் கடுக்காய் எனும் நான்கு வகையினுள் கருங்கடுக்காய் மலத்தைப் போக்குவதுடன் மேனிக்கு அழகைக் கூட்டும். அறிவுத் தெளிவை ஏற்படுத்தும். வாத, பித்த கபத்தை நீக்கும். செங்கடுக்காய் நீர் முப்பிண நோய்களை போக்கவல்லது. மேனி பொன்னிறம் பெறவும், அறிவு பெருக்கவும் உதவுகிறது. வரிக்கடுக்காய் விந்துவைப் பெருக்கி உடலுக்கு பொலிவு தரும். பால் கடுக்காய் உடலுக்கு அழகும், ஒளியும் வன்மையும் தரும். வயிற்று மந்தத்தைப் போக்கும்.
மரம் 100 அடி உயரம் வரை வளரக்கூடியது. இந்தியக் காடுகளில் ஆங்காங்கு வளர்கிறது. அறுசுவைகளுள் உப்பு சுவை நீங்கலாக உள்ள மற்ற ஐந்து சுவைகள் உள்ள ஒரே கனி கடுக்காய் ஆகும். ‘பெற்ற தாயினும் சிறந்தது’ என சித்தர் பாடுகிறார். தாய் அறுசுவை உணவு ஊட்டி உடல் வளர்ப்பது போல் கடுக்காய் அறுசுவை கனி கொடுத்து நோயை நீக்கி நம் உடலைத் தேற்றுமாம்.
நாட்டு கடுக்காயில் முற்றிப் பழுத்தது, பசுமை நிறத்தோடும், சதைப்பற்று உள்ளதாகவுமிருக்கும். அவ்வாறு இல்லையேல் கரு நிறத்தோடு சதைப்பற்று அற்றதாக இருக்கும் காபூல் கடுக்காய் பார்வைக்குப் பெரிதாகத் தோன்றினாலும் ஊட்டமில்லாமல் இருக்கும். சூரத் கடுக்காய் மஞ்சள் நிறத்தோடு ஊட்டம் மற்றம் எடையோடு இருக்கும்.
கடுக்காய்த் துவையல் அரோசகத்தைப் போக்கும். மலத்தைக் கட்டும். கடுக்காயும், காசுக்கட்டியும் சமபாகமெடுத்து அரைத்து நாக்கு விரணத்துக்குத் தடவ நன்மை தரும். கடுக்காயின் நுண்ணிய பொடியையேனும், கஷாயத்தையேனும் மூலத்தின் மீது தூவ அல்லது கழுவ இரத்தம் நிற்கும். ஒவ்வொரு நாளும் காலைதோறும் கடுக்காயை ஓராண்டு சாப்பிட்டு வர நரை, திரை மாறும். பச்சைக் கடுக்காயை பாலிலரைத்துச் சாப்பிட இருமல், சீதக்கடுப்பு, புகையிருமல், நீங்கும்.
கடுக்காய்க்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்று பெயர். சுண்ணாம்பில் கடுக்காயை ஊறவைத்து அந்நீர் கலந்து கட்டிய கட்டடங்கள், பலமானவையாக இன்றும் விளங்குகின்றன. விலையோ குறைவு, பயனோ மிகுதி. திரிபாலதித் தைலமாகத் தலையின் பொடுகு, சுண்டு நரை, கண் சிவப்பைக் குணப்படுத்தும். கடுக்காயத் தோலைச் சந்தனக் கல்லில் உரைத்து எடுத்த விழுதை காலில் பித்தவெடிப்பு, ஆறாத சேற்றுப் புண்களுக்குத் தடவ உடனடி ஆறுதலும், குணமும் தரும். பாக்டிரியா கிருமிகளை மட்டுமல்ல நுண் கிருமிகளையும் கொன்றொழிக்கும் கடுக்காய், உடல் தேற்றும் பண்பு படைத்தது. கொடிய குணம் சிறிதும் இதற்குக் கிடையாது. துவர்ப்புக் குணமும், உடல் தேற்றும் தன்மையும், மலமிளக்கும் இயல்பும், கிருமி கொல்லும் ஆற்றலும் குழந்தைகளின் குடல் கோளாறுகளைப் போக்கும் திறனும் கொண்டது.
கடுக்காய்க்கு அமிர்தம் என்று பெயர் வழங்குகிறது. கடுக்காயை லேகியம் செய்து உண்ண, நரை, திரை மாறி காய சித்தியாகும்.
இதற்கு ‘அகஸ்த்தியர் ரசாயனம்” என்று பெயர்.
கடுக்காய்த் தோலை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தோலை சந்தனக் கல்லில் உரைத்து, விழுதைக் காலில் பித்தவெடிப்பு, சேற்றுப் புண் மற்றும் ஆறாத புண்களுக்குத் தடவி உடனடி குணம் பெறலாம். பல்வலி தீர்க்க பற்பசை தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.
உப்புச் சுவை தவிர இதர சுவைகள் அனைத்தும் பெற்றது கடுக்காய். கடுக்காயை உப்புடன் சேர்த்து உண்டால் ஐயமும், வெல்லத்துடன் சேர்த்து உண்டால் முன்குற்றமும் நீங்கும். எனினும் செரிப்புத் தன்மை அற்றவர், இல்லறத்தில் ஈடுபட்டோர், பட்டினி கிடந்தோர், கருவுற்றோர், தொண்டையிறுகல் உள்ளோர் பயன்படுத்துதல் ஆகாது. கடுக்காய் பொடி பல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும். பல் இறுகும். பாலுடன் காய்ச்சி கொடுக்க சீதபேதி நிற்கும். நாள்தோறும் காலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் நரைமுடி இருக்காது. மேனியில் சுருக்கம் விழாது.
கொதிக்க வைத்த கடுக்காய் தண்ணீரில் ஆசனத்திலுள்ள மூலத்தை கழுவி வந்தால் வெளி மூலம் சுருங்கி குணம் அடையும்.
நெல்லிக்காய்- Gooseberry

ஆம்லா, அமலாகி என வடமொழியில் அழைக்கப்படும் நெல்லிக்காய் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனிகளுக்காக வளர்க்கப்படுகிறது. இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும்.
நெல்லி கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்து, கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது.
பழத்தில் உள்ள விதைகள் சத்திற்கு நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு.
நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. நெல்லிக்காய் சாற்றில் அதிக அளவு அயர்ன் உள்ளதால் முடிச்சாயத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதன் நிறம் கறுப்புக் கலந்த பழுப்பு நிறம்.
புதிய மற்றும் உலர்ந்த பழங்களிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ‘திரிபலா’ என்னும் மும்மருந்து அடங்கிய கூட்டுப் பொருள் தயாரிப்பில் இதன் பங்கு முதன்மையானது. புதிய பழங்கள் குளிர்ச்சியையும், இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.
உயிர்ச்சத்தான வைட்டமின் ‘சி’ சத்து இதில் நிறைந்துள்ளதால் இந்திய மருத்துவத்தில் உபயேரிக்கப்படுகின்றன. இலைகள், பட்டை, வேர், மலர்கள் மற்றும் அனைத்தும் மருத்துவ பயனுள்ள பகுதியாகும்.
இலைகளின் சாறு நாட்பட்ட புண்களுக்கு பூசப்படுகிறது. வடிசாறு வெங்காயத்துடன் கலந்து வயிற்றுப் போக்கினைத் தீர்க்கும். பட்டையும், வேரும் சதை இறுக்கும் தன்மை கொண்டவை. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. பழங்கள் அதிகமாக மசி தயாரிக்கவும் தலை கழுவி நீர்மம் தயாரிக்கவும், பட்டைகளுடன் சேர்ந்து சாயங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நன்மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.
வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும். நடுத்தர ஆரஞ்சுப் பழம் ஒன்றில் இருப்பதைப் போல இருபது மடங்கு வைட்டமின் ‘சி’ சத்து இதில் அடங்கியிருக்கிறது. காய்கள் காய்ந்தாலும், கொதிக்க வைத்தாலும் இச்சத்து அழிவதில்லை. “ஸ்கர்வி” என்ற தோல் நோய் இச்சத்து குறைவினால் தான் ஏற்படுகிறது. இச்சத்துக் குறைவை இக்கனி ஈடு செய்கிறது. இரும்பு சத்து மிகுந்து காணப்படுவதால், கேசப் பராமரிப்பில் சிறந்த ஊக்குவியாகவும், சாயமேற்றும் பொருளாகவும் பயன்தருகிறது.
வற்றலுக்கு நெல்லி முள்ளி என்று பெயர்.
நெல்லிப் பழங்களை விதை நீக்கி இடித்துச் சாறு பிழிந்து சம அளவு சர்க்கரை சேர்த்து மணப்பாகு தயார் செய்து சாப்பிடலாம். அல்லது நெல்லி வற்றலை இடித்துத் தூளாக்கி சம அளவு சர்க்கரை சேர்த்து காலை நேரத்தில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்த கப சம்பந்தமான நோய்களும், பித்த சம்பந்தமான நோய்களும் தீருவதுடன் அதிக உளைச்சலினால் ஏற்படும் கை நடுக்கம் குணமாகிறது. மதுமேக நோயாளிகளுக்கு நெல்லிக்காயுடன் கறி மஞ்சளும், நாவல் கொட்டையும் சம அளவு சேர்த்து வைத்து காலை மாலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வர நோய் விரைவில் கட்டுப்படும்.
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை வைட்டமின் ‘சி’ தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.
கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.
நெல்லிக்காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன் குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சமஅளவு சூரணமாகச் செய்து சேர்க்க “திரிபலா” சூரணம் ஆகிறது. நெல்லிப்பழத்தில் முழுமையும் மரம் பயன்பட்டுச் சிறப்படைவது போன்று மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நெல்லிக்காய் தருகிறது.
நெல்லிக்காய் சாற்றுடன் சுத்தம் செய்து சுடவைத்த கிளிஞ்சல் சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்துச் சூடுகாட்டி களிம்பு போல் செய்து குதிங்கால் வெடிப்பில் தடவ குணமாகும்.
கடல் அமிர்தம் ஒத்த நெல்லிக்காயைப் பகற்பொழுதில் உண்ண பைத்தியம், கபநோய், பீனிசம், உன்மத்தம், மலபந்தம் நீங்கும். காயின் புளிப்புச் சுவையால் வாயுவும், துவர்ப்பால் கபமும், இனிப்பால் அழகும் உண்டாகும்.
நெல்லிக்காயை எலுமிச்சை இலைகளுடன் சேர்த்து விழுது போல் அரைத்தெடுத்து, பாலுடன் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் நரை இருந்தாலும் கருக்கத் தொடங்கி விடும்.
Strawberry-ஸ்ட்ராபெரி

‘பெரி’ குடும்பத்தின் ‘ராணி’ எனப்படும் இந்த சிவந்த நிறப் பழங்கள் ‘வைட்டமின் சி’ சத்து மிகுந்தது. இரும்புச் சத்தும் மிகுந்துள்ளது. பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மையும் இருப்பதால் மருத்துவ குணம் கொண்டது எனப் போற்றப்படுகின்றது.
இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.
அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.
சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.
எலுமிச்சை-Lemon

வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் முட்கள் கொண்ட புதர்ச்செடி அல்லது சிறிய பரந்த மரம். கனிகள் நல்ல மஞ்சள் வண்ணமும், நறுமணமும் கொண்டவை. பூக்களும், கனிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. கனிகளில் சிட்ரிக் அமிலம் மிக முக்கியப் பொருளாகக் காணப்படுகிறது. இவை கிருமிகளுக்கு எதிரானவை.எலுமிச்சம் பழத்தின் தோல், சாறு, விதை எல்லாமே பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஏ, பி, சுண்ணாம்புச் சத்து, உலோகச் சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ், சிட்ரிக் அமிலம், மாலிக் அமிலம், புரோட்டீன், உப்பு, கொழுப்பு முதலியன அடங்கியுள்ளன.
வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் இருப்பதால் சருமம் மற்றும் தலை கழுவியாகவும், சிறந்த சரும டானிக்காகவும் பயன்படுகின்றது. சருமத்திலுள்ள கறைகளை அகற்றுகிறது. சிட்ரிக் அமிலம் எடுக்கப்படுகிறது.
பசியைத் தூண்டல், ஜீரண உறுப்புகளை ஊக்குவித்தல், தசை இறுக்குதல், வயிற்றுவலி மற்றும் வாந்தியை நிறுத்துதல் போன்றவற்றுக்கு மருந்தாகிறது. மேலும் கனியின் சாறு தாகத்தினைப் போக்கி, உடல் எரிச்சலையும் போக்கி, உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கவல்லது.
இயற்கையாகவே சருமத்திற்கு ஊறு விளைவிக்காமல் சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை அகற்றும் வேதிப் பொருட்கள் இருப்பதால் முகத்திற்குத் தேவையான களிம்புகள், மாஸ்க்குகள், கிரீம்கள், குளியல் சோப்புகள், ஷாம்புகள் என அனைத்திலும் இப்பழத்தின் ஆதிக்கம் அதிகம்.
விதைகள் மற்றும் தோலிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. எலுமிச்சை சாதாரணமாக இரண்டரை முதல் மூன்று ஆண்டுகளில் பலன் தர ஆரம்பிக்கும். நல்ல நீர் வளமும், நில வளமுமுள்ள இடத்தில் 50 ஆண்டுகள் வரை பூத்துக் காய்த்துக் கனிந்து பலன் தந்து கொண்டே இருக்கும். சில மரங்கள் நூறு ஆண்டுகள் வரை கூட பலன் தந்து கொண்டிருக்கும்.
எலுமிச்சைசாறு நேரடியாக பற்களின் மீது அடிக்கடி பட நேர்ந்தால் பற்களின் மேல் மின்னுகிற எனாமல் சிதைந்து கெட்டுவிடும். ஆகவே எந்த நிலையிலும் எலுமிச்சைசாறை தனியாக அருந்தவே கூடாது. தனியாக அருந்தும் போது தொண்டையும், மார்பும் வெகுவாகப் பாதிக்கப்படும். தேன் கலந்து பழரசங்களுடன் சேர்த்தே உட்கொள்ளலாம்.
உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும், அழகினையும் எலுமிச்சை மூலம் எளிதில் பெறலாம்.
எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை, கண் நோய், ஆரம்ப யானைக்கால் நோய் குணப்படும். எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு, உடலில் ஏற்படும் தேமலுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து இரவு நேரத்தில் பூசிக் காலையில் குளித்துவர தேமல் மறையும்.
பன்னீர், எலுமிச்சை சாறு சம அளவு நீர்விட்டுக் குலுக்கி வாய் கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் நீங்கும். வாரந்தோறும் எலுமிச்சை சாறை தலையில் தேய்த்துக் குளித்துவர பொடுகு அகலும்.
நெல்லிக் கனிகள் - சிலவற்றை நன்கு அரைத்து எலுமிச்சை ரசம் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடிகொட்டுவது நின்றுவிடும். முடி செழித்து வளர்ந்து கருநிறமாகவும் இருக்கும்.
ஆலமரத்தின் விழுதை அரைத்து எலுமிச்சை சாறுகளோடு கலந்து வாரந்தோறும் தலையில் இட்டுக் குளித்து வர தலைமுடி நன்றாக வளரும். வெள்ளைப்பூண்டை எலுமிச்சை சாற்றோடு கலந்து தேய்த்து வந்தால் பேன் தொல்லை நீங்கும். தலை சூடு தணிய பச்சை பயறு மாவோடு எலுமிச்சை கலந்து குளித்தல் நலம் பயக்கும்.
ஆரஞ்சு-Orange

எலுமிச்சை போன்றே முட்களுடன் கூடிய மரம். சிட்ரஸ் எனும் வேதிப் பொருள் நிறைந்த பழங்களுக்கிடையில், ஆரஞ்சு மிகக் குறைந்த அமிலத்தன்மையும், நிறைந்த மணமும், சுவையும் கொண்டது.
ஆரஞ்சு, சாத்துக்குடி எனப் பல பிரிவுகள் இருந்தாலும் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையே. ஆரஞ்சு சுளைகளின் மேலே போர்த்திருக்கும் வெள்ளை நிறத்திசுக்கள் போன்றே தோல்களில் கால்சியக் சத்து மிகுந்து காணப்படுகிறது.
பழங்களும், பூக்களும் மருத்துவ குணம் கொண்டவை. ஆரஞ்சு பூக்களிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகுந்த அரோமா குணம் கொண்டவை. ஆரஞ்சு பூக்களால் வடித்தெடுக்கப்படும் வடிநீர் முகத்திற்கான லோசன்களாக உபயோகிக்கப்படுகிறது. இந்நீர் சருமத்திற்கு நீர்ச்சத்தினை அளித்து சருமத்தை சமனப்படுத்துகிறது. வைட்டமின் ‘சி’ சத்து மிகுந்திருப்பதால் சருமத்திற்கு பளபளப்பையும் இளமைப்பொலிவையும் கொடுக்கிறது.
இம்மரம் வளர எளிதில் நீர்வடியும் ஈரப்பதமுள்ள நிலம் தேவை. மித வெப்ப நாடுகளில் இது அதிகமாக வளர்கிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இது பயிரிடப்படுகிறது.
நிறம் வேண்டுவோர் ஆரஞ்சுப் பழங்களை உட்கொள்வதுடன் ஆரஞ்சு சாறு கலந்த பொருட்களை உபயோகிக்கலாம். இதன் தோல் சிறந்த அழுக்கு நீக்கி. எனவே பழங்களின் தோல்களும் சோப் மற்றும் க்ரீம்களின் மூலப் பொருளாகின்றன.
இந்த வகைப் பழங்களில் சிட்ரிக் அமிலமும், சர்க்கரையும் உள்ளன. சிட்ரிக் அமிலம் அதிகமாக இருந்தால் புளிப்புச் சுவை அதிகமாக இருக்கும். சர்க்கரை அதிகமாக இருந்தால் இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். ஆரஞ்சில் பல வகைகள் உள்ளன. விதை, பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் வாசனை திரவியங்களுக்கும் சிலவகை குடிபானங்களுக்கு நறுமணமூட்டவும் பயன்படுகிறது.
கமலாபழம், ஆரஞ்சுபழம் என்று சொல்லப்படுகிறது. வருடத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் தான் இப்பழம் கிடைக்கும். ஆரஞ்சு பழம் நல்ல இனிப்பாகவும், சிலவகை இனிப்பு, புளிப்பாகவும் மற்றும் சில வகை வெறும் புளிப்பு ருசியுடனுமிருக்கும். ஆரஞ்சு பழத்தை, ஆரஞ்சுப் பழங்களில் சாத்துக்குடி வகைப் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இதில் வைட்டமின் டி, பி1, பி2, சி என உயிரிச்சத்துகள் நிறைய இருப்பதால் இது உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. நீண்டநாள் வியாதியினால் பாதிக்கப்பட்டுத் தேறி எழுந்தவர்கள் தொடர்ந்து ஆரஞ்சப்பழம் சாப்பிட்டு வர அவர்கள் நல்ல பலம் பெறுவார்கள். பலம் பெற இது ஒரு இயற்கை டானிக்காகவே இருந்து வருகிறது.
அரை கப் பழச்சாற்றில் 1 தேக்கரண்டி சுத்தமான தேனைக் கலக்கி படுக்கைக்குப் போகும் அரைமணி முன் சாப்பிட சுகமான நித்திரை தழுவும். ஆனந்தமான தூக்கம் வரும். தொற்றுநோய் பரவும் காலத்தில் அடிக்கடி ஆரஞ்சப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் தாக்காது.
புதன், 21 ஏப்ரல், 2010
ஆப்பிள் -Apple

பொதுவாகவே பழவகைகளில் ஆப்பிள் உயர்ந்த பழம். நல்ல பலத்தை தரும். அதிக இரத்தம் விருத்தியாகும். பழவகைகளில் முக்கியமானது ஆப்பிள். ஸ்காண்டிநேவியர்கள் ஆப்பிளை, இறைவனின் உணவு என்கின்றனர். ஆப்பிளில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. ஆப்பிள் சதைப்பற்றுள்ள பழம். 80 சதவிகிதம் தண்ணீர், குறைந்த கலோரிகள் கொண்டது. இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துகளும், பாஸ்பரஸ், கால்ஷியம், இரும்பு, ப்ரக்டோஸ், சுக்ரோஸ் முதலான சர்க்கரை, மாவுச்சத்து, நார்ச்சத்து முதலானவை அடங்கியுள்ளன.
சுமார் 12 மீட்டர் உயரம் வரை வளரும். முட்டை அல்லது நீள்வட்ட வடிவமான இலைகள் அடிப்பகுதி அகன்று மேற்புறம் மழமழப்பாக இருக்கும். இலை விளிம்புகள் இரம்பம் போலிருக்கும். இலைகள் பச்சை, மஞ்சள் அல்லது சிவப்பு இந்த நிறங்கள் அனைத்தின் சாயலும் கொண்டதாக இருக்கும். இதன் மலர்கள் ஊதா அல்லது வெள்ளை நிறத்தில் பெரிய கொத்தாகப் பூக்கும். மலர்கள் மிகுந்த நறுமணம் உடையவை.
ஆப்பிளை பழமாக, சாறாக, ஜெல்லியாக, சர்பத்தாக உண்ணலாம். சரிவிகித சத்துணவில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆப்பிள் பழத்தைக் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்திகரிக்கப்படும். இரத்த சோகை குணமாகும். ஜலதோசம், மூச்சு சம்பந்தமான வியாதிகள், சருமநோய்கள், வயிறு சம்பந்தமான நோய்கள் முதலியன அவ்வளவமாகப் பாதிப்பதில்லை. சருமம், முகம் முதலியன பளபளக்கும்.
ஆப்பிள் பழத்திலுள்ள வைட்டமின் B1 உயிர்ச்சத்து உடலுக்குப் பல நன்மைகளை செய்யக் கூடியதாக இருக்கிறது. தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் சீதளத்தை உண்டு பண்ணும். பழத்திலுள்ள B1 உயிர்ச்சத்து இதயத்திற்கு நல்ல பலத்தைத் தரும். மனசந்தோஷத்தை உண்டு பண்ணும். மனோதைரியம் உண்டாக்கும். உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்கச் செய்யும். மலச்சிக்கலை நீக்கும். இரைப்பையிலிருந்து மலக்குடல் வரை நல்ல பலத்தைக் கொடுக்கும்.
அழகுக்கூடும்…
திராட்சை -Grapes

திராட்சை வருடத்தில் ஓரு குறிப்பிட்ட காலத்தில் தான் கிடைக்கும். சாதாரணமாக பச்சை, கறுப்பு, மிகச்சிறிய ஆஸ்திரேலிய திராட்சை, ஐதராபாத்தில் மட்டும் பயிராகும் ‘அங்கூர்’ என்ற வகை கடைகளில் விற்பனைக்கு வருகிறது. திராட்சையில் சுமார் 300 வகை உண்டு.
திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு. உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது. கோழையை ஆற்றும், ஜீரண உறுப்புகளுக்கு வலிமை தருவதுடன் அது பழுதுபட்டால் அதனைத் தீர்க்கும் சக்தியும் கொண்டது. மேலும் ரத்தத்தையும் சுத்தி செய்யும்.
வரலாறு காணாத காலத்திருந்தே திராட்சை மனிதனால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மத்தியத் தரைக்கடல் நாடுகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது.
திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும். இவை வெள்ளை, வெளிர்பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா அல்லது கறுப்பு நிறத்திலிருக்கும். சில வகைகளில் விதைகள் இருக்காது. அனைத்து வகை திராட்சைகளும் அப்படியே உண்ணத் தக்கவைதான். ஒரு சில வகைகள் உலர் திராட்சை செய்யவும். சாறு எடுக்கவும், பழக்கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானவை ஒயின் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதன் சக்கைகள் உரம், அசிட்டிக் அமிலம் எண்ணெய் மற்றும் பல பொருள்கள் தயாரிக்க உபயோகப்படுத்தப்படுகிறது.
கிஸ்மிஸ் என்று பெர்சிய மொழியில் குறிப்பிடப்படுகிறது. திராட்சை வெப்பம் மிகுந்த பகுதிகளில் வளமான மணல் பரப்பில் அதிகம் விளைகிறது. பெரும்பாலான திராட்சை பதியன் மூலமும், விதை மூலமும் வளர்க்கப்படுகிறது. கொத்து கொத்தாக மலரும். இதன் பூக்கள் பச்சை நிறத்திலிருக்கும்.
திராட்சையில் சர்க்கரைச் சத்து அதிகம். தவிர கார்போஹைடிரேட், டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ், பெக்டின் முதலானவையும் பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் முதலான அமிலங்களும், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் முதலான உலோகச் சத்துக்களும் உள்ளன.
உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று அவுன்ஸ் என இருவேளை அருந்தி வர குணம் பெறலாம்.
திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.
வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி அரை ரூபா எடை வரை உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு, இயற்கை அளவிலேயே இருக்கும்.
அழகுக்கூடும்…
வாழைப்பழம் -Banana

வாழைப்பழத்தின் எல்லாப் பகுதிகளுமே இலை, பூ, காய், பழம், தண்டு என பல வழிகளில் பயன்படுகிறது. வாழைப்பழம் சுவையானது. முக்கனிகளில் ஒன்று. எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். உலக மக்களினால் அதிகமாக உண்ணப்படும் பழங்களில் இது ஒன்று. மிகுந்த வெப்பமும் நீரும் உள்ள இடங்களில் வாழை செழித்து வளரும். இதிலே 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
வாழை 3 மீட்டர் முதல் 9 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. வாழைப்பழத்தில் கர்போஹைடிரேட், புரதம், கொழுப்பு முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் அடங்கியுள்ளன. சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், சிறிய அளவில் செம்புச்சத்தும் அடங்கியுள்ளன. நார்ச்சத்தும், ரிபோஃபிளேவின், தயாமின் முதலான வைட்டமின்களும் உள்ளன. இதை அப்படியே சாப்பிடலாம். ஐஸ்கிரீம், சாண்ட்விச், தயாரிக்க இந்தப் பழம் பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை சுவையைக் கொடுக்கும். செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். மலைவாழை சோகையை நீக்கும். பேயன் வாழை குடற்புண் தீர்க்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
இதைத் தவிர கற்பூர வாழை, நேந்திர வாழை, பூவன் வாழை எனப் பலவகை உண்டு.
பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது
உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும். மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது. மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது. வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். மூளைக்கு வலுவூட்டும். தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும். இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும். சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும். கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும். உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.
மஞ்சளும், பச்சையுமான நிறங்களுள்ள வாழைப்பழம் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கக் கூடியது. இதில் பலவகைகள் அடங்கியுள்ளன. உலர்ந்த சருமத்திற்கு மிகுந்த ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. எனவே சரும மாஸ்க்குகள், ஹேர் பேக்குகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்பழச்சதையினுள் வெண்ணெய் போல ஏறக்குறைய இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.
தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும்.
தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும். சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.
அழகுக்கூடும்…
வியாழன், 8 ஏப்ரல், 2010
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....இந்த வார்த்தையை வேறு மொழிகளில் எப்படி சொல்லுவார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? பதிவை தொடர்ந்து பாருங்கள்....
Afrikaans- Veels geluk met jou verjaarsdag!
Albanian- Urime ditelindjen!
Alsatian- Gueter geburtsdaa!
Amharic- Melkam lidet!
Arabic- Eid milaad saeed! or Kul sana wa inta/i tayeb/a! (masculine/feminine )
Armenian- Taredartzet shnorhavor! or Tsenund shnorhavor!
Assyrian- Eida D'moladukh Hawee Brikha!
Austrian-Viennese Ois guade winsch i dia zum Gbuadsdog!
Aymara(Bolivia)- Suma Urupnaya Cchuru Uromankja!
Azerbaijani Ad gununuz mubarek! -- for people older than you
Ad gunun mubarek! -- for people younger than you
Basque- Zorionak!
Belauan-Micronesian- Ungil el cherellem!
Bengali(Bangladesh/ India)- Shuvo Jonmodin!
Bicol(Philippines)- Maogmang Pagkamundag!
Bislama(Vanuatu)- Hapi betde! or Yumi selebretem de blong bon blong yu!
Brazil- ParabŽns a voc!
ParabŽns a voc,
nesta data querida muitas felicidades e muitos anos de vida.
Breton Deiz-ha-bloaz laouen deoc'h!
Bulgarian- Chestit Rojden Den!
Cambodian- Som owie nek mein aryouk yrinyu!
Catalan- Per molts anys! or Bon aniversari! or Moltes Felicitats!
Chamorro Biba Kumplianos!
Chinese-Cantonese Sun Yat Fai Lok!
Chinese Fuzhou- San Ni Kuai Lo!
Chiness-Hakka- Sang Ngit Fai Lok!
Chinese-Mandarin qu ni sheng er kuai le
Chinese-Shanghaiese- San ruit kua lok!
Chinese-Tiociu- Se Jit khuai lak!
Chronia- Polla NA ZHSHS
Croatian- Sretan Rodendan!
Czech- Vsechno nejlepsi k Tvym narozeninam! !
Danish- Tillykke med fodselsdagen!
Dutch-Antwerps Ne gelukkege verjoardach!
Dutch-Bilzers Ne geleukkege verjoardoag!
Dutch-Drents Fellisiteert!
Dutch-Flemish Gelukkige verjaardag! or Prettige verjaardag!
Dutch-Frisian Fan herte lokwinske!
Dutch-Limburgs Proficiat! or Perfisia!
Dutch-Spouwers Ne geleukkege verjeurdoag!
Dutch-Twents Gefeliciteard met oen'n verjoardag!
Dutch Hartelijk gefeliciteerd! or Van harte gefeliciteerd met je verjaardag!
English Happy Birthday!
Esperanto- Felichan Naskightagon!
Estonian- Palju onne sunnipaevaks!
Euskera Zorionak zure urtebetetze egunean!
Faroes( Faroe island )- Tillukku vid fodingardegnum!
Farsi- Tavalodet Mobarak!
Finnish- Hyvaa syntymapaivaa!
French(Canada)- Bonne Fete!
French- Joyeux Anniversaire!
Frisian Lokkiche jierdei!
Gaelic(Irish)- L‡ breithe mhaith agat!
Gaelic(Scottish)- Co` latha breith sona dhuibh!
Galician(Spain)- Ledicia no teu cumpreanos!
Georgian- Gilotcav dabadebis dges!
German-Badisch Allis Guedi zu dim Fescht!
German-Bavarian Ois Guade zu Deim Geburdstog!
German-Berlinisch Allet Jute ooch zum Jeburtstach! or Ick wuensch da allet Jute zum Jeburtstach!
German-Bernese Es Muentschi zum Geburri!
German-Camelottisch Ewllews Gewtew zewm Gewbewrtstewg. Mew!
German-Frankonian Allmecht! Iich wuensch Dir aan guuadn Gebuardsdooch!
German-Lichtenstein Haerzliche Glueckwuensche zum Geburtstag!
German-Moselfraenki sch Haezzlische Glickwunsch zem Gebordsdach!
German-Plattdeutsch Ick wuensch Di allns Gode ton Geburtsdach!
German-Rhoihessisch Ich gratelier Dir aach zum Geburtstag!
German-Ruhr Allet Gute zum Gebuatstach!
German-Saarlaendisc h Alles Gudde for dei Gebordsdaach!
German-Saechsisch Herzlischen Gliggwunsch zum Geburdsdaach!
German-Schwaebisch Aelles Guade zom Gebordzdag!
German-Wienerisch Ois Guade zum Geburdsdog!
German Alles Gute zum Geburtstag!
Greek Eytyxismena Genethlia! or Chronia Pola!
Greenlandic- Inuuinni pilluarit!
Gronings(Netherlands)- Fielsteerd mit joen verjoardag!
Gujarati(India)- Janma Divas Mubarak!
Gujrati(Pakistan)- Saal Mubarak!
Guarani(Paraguay Indian)]- Vy-Apave Nde Arambotyre!
Hawaiian- Hau`oli la hanau!
Hebrew- Yom Huledet Same'ach!
Hiligaynon(Philippines)- Masadya gid nga adlaw sa imo pagkatawo!
Hindi(India)- Janam Din ki badhai! or Janam Din ki shubkamnaayein!
Hungarian- Boldog szuletesnapot! or Isten eltessen!
Icelandic- Til hamingju med afmaelisdaginn!
Indonesian- Selamat Ulang Tahun!
Irish-gaelic- La-breithe mhaith agat! or Co` latha breith sona dhut! Or Breithla Shona Dhuit!
Italian- Buon Compleanno!
Italian -(Piedmont)- Bun Cumpleani!
Italian -(Romagna)- At faz tent avguri ad bon cumplean!
Japanese- Otanjou-bi Omedetou Gozaimasu!
Javaans-Indonesia Slamet Ulang Taunmoe!
Jerriais Bouon Anniversaithe!
Kannada -(India)- Huttida Habba Subashayagalu!
Kapangpangan -(Philippines)- Mayap a Kebaitan
Kashmiri -(India)- Voharvod Mubarak Chuy!
Kazakh -(Kazakstan)- Tughan kuninmen!
Klingon- Quchjaj qoSlIj!
Korean- Saeng il chuk ha ham ni da!
Kurdish- Rojbun a te piroz be!
Kyrgyz- Tulgan kunum menen!
Latin- Fortuna dies natalis!
Latvian- Daudz laimes dzimsanas diena!
Lithuanian- Sveikinu su gimtadieniu! or Geriausi linkejimaigimtadien io progal
Luganda- Nkwagaliza amazalibwa go amalungi!
Luxembourgeois- Vill Gleck fir daei Geburtsdaag!
Macedonian- Sreken roden den!
Malayalam -(India)- Pirannal Aasamsakal! or Janmadinasamsakal!
Malaysian- Selamat Hari Jadi!
Maltese- Nifrahlek ghal gheluq sninek!
Maori- Kia huritau ki a koe!
Marathi -(India)- Wadhdiwasachya Shubhechha!
Mauritian- Kreol mo swet u en bonlaniverser!
Mbula (-Umboi Island, Papua New Guinea)- Leleng ambai pa mbeng ku taipet i!
Mongolian- Torson odriin mend hurgee!
Navajo- bil hoozho bi'dizhchi-neeji' 'aneilkaah!
Niederdeutsch -(North Germany)- Ick gratuleer di scheun!
Nepali -Janma dhin ko Subha kamana!
Norwegian- Gratulerer med dagen!
Oriya -(India)- Janmadina Abhinandan!
Papiamento -(lower Dutch Antilles)- Masha Pabien I hopi aña mas!
Pashto -(Afganistan)- Padayish rawaz day unbaraksha!
Persian -Tavalodet Mobarak!
Pinoy -(Philippines)- Maligayang kaarawan sa iyo!
Polish- Wszystkiego Najlepszego! or Wszystkiego najlepszego zokazji urodzin!
wszystkiego najlepszego z okazji urodzin
Portuguese- (Brazil) Parabens pelo seu aniversario! or Parabenspara voce! or Parabens e muitas felicidades!
Portuguese- Feliz Aniversario! or Parabens!
Punjabi -(India)- Janam din diyan wadhayian!
Rajasthani -(India)- Janam ghaanth ri badhai, khoob jeeyo!
Romanian- La Multi Ani!
Rosarino -Basico -(Argentina)- Feneligiz Cunumplegeanagonos!
Russian- S dniom razhdjenia! or Pazdravliayu s dniom razhdjenia!
Sami/Lappish- Lihkos Riegadanbeaivvis!
Samoan- Manuia lou aso fanau!
Sanskrit -(India)- Ravihi janmadinam aacharati!
Sardinian (-Italy)- Achent'annos! Achent'annos!
Schwyzerduetsch-(Swiss German)- Vill Glück zum Geburri!
Serbian- Srecan Rodjendan!
Slovak- Vsetko najlepsie k narodeninam!
Slovene- Vse najboljse za rojstni dan!
Sotho Masego motsatsing la psalo!
Spanish- Feliz Cumplea–os!
Sri Lankan- Suba Upan dinayak vewa!
Sundanese- Wilujeng Tepang Taun!
Surinamese- Mi fresteri ju!
Swahili- Hongera! or Heri ya Siku kuu!
Swedish- Grattis pŒ fšdelsedagen
Syriac- Tahnyotho or brigo!
Tagalog -(Philippines)- Maligayang Bati Sa Iyong Kaarawan!
Taiwanese- San leaz quiet lo!
Tamil -(India-) Piranda naal vaazhthukkal!
Telugu -(India)- Janmadina subha kankshalu!
Telugu- Puttina Roju Shubakanksalu!
Thai- Suk San Wan Keut!
Tibetan- Droonkher Tashi Delek!
Tulu(Karnataka - India)- Putudina dina saukhya!
Turkish- Dogum gunun kutlu olsun!
Ukrainian- Mnohiya lita! or Z dnem narodjennia!
Urdu (-India)- Janam Din Mubarak
Urdu -(Pakistan)- Saalgirah Mubarak!
Vietnamese- Chuc Mung Sinh Nhat!
Visayan -(Philippines)- Malipayong adlaw nga natawhan!
Welsh- Penblwydd Hapus i Chi!
Xhosa -(South Afican)- Imini emandi kuwe!
Yiddish- A Freilekhn Gebortstog!
Yoruba -(Nigeria)- Eku Ojobi!
Zulu-(South Afican)- Ilanga elimndandi kuwe!
Afrikaans- Veels geluk met jou verjaarsdag!
Albanian- Urime ditelindjen!
Alsatian- Gueter geburtsdaa!
Amharic- Melkam lidet!
Arabic- Eid milaad saeed! or Kul sana wa inta/i tayeb/a! (masculine/feminine )
Armenian- Taredartzet shnorhavor! or Tsenund shnorhavor!
Assyrian- Eida D'moladukh Hawee Brikha!
Austrian-Viennese Ois guade winsch i dia zum Gbuadsdog!
Aymara(Bolivia)- Suma Urupnaya Cchuru Uromankja!
Azerbaijani Ad gununuz mubarek! -- for people older than you
Ad gunun mubarek! -- for people younger than you
Basque- Zorionak!
Belauan-Micronesian- Ungil el cherellem!
Bengali(Bangladesh/ India)- Shuvo Jonmodin!
Bicol(Philippines)- Maogmang Pagkamundag!
Bislama(Vanuatu)- Hapi betde! or Yumi selebretem de blong bon blong yu!
Brazil- ParabŽns a voc!
ParabŽns a voc,
nesta data querida muitas felicidades e muitos anos de vida.
Breton Deiz-ha-bloaz laouen deoc'h!
Bulgarian- Chestit Rojden Den!
Cambodian- Som owie nek mein aryouk yrinyu!
Catalan- Per molts anys! or Bon aniversari! or Moltes Felicitats!
Chamorro Biba Kumplianos!
Chinese-Cantonese Sun Yat Fai Lok!
Chinese Fuzhou- San Ni Kuai Lo!
Chiness-Hakka- Sang Ngit Fai Lok!
Chinese-Mandarin qu ni sheng er kuai le
Chinese-Shanghaiese- San ruit kua lok!
Chinese-Tiociu- Se Jit khuai lak!
Chronia- Polla NA ZHSHS
Croatian- Sretan Rodendan!
Czech- Vsechno nejlepsi k Tvym narozeninam! !
Danish- Tillykke med fodselsdagen!
Dutch-Antwerps Ne gelukkege verjoardach!
Dutch-Bilzers Ne geleukkege verjoardoag!
Dutch-Drents Fellisiteert!
Dutch-Flemish Gelukkige verjaardag! or Prettige verjaardag!
Dutch-Frisian Fan herte lokwinske!
Dutch-Limburgs Proficiat! or Perfisia!
Dutch-Spouwers Ne geleukkege verjeurdoag!
Dutch-Twents Gefeliciteard met oen'n verjoardag!
Dutch Hartelijk gefeliciteerd! or Van harte gefeliciteerd met je verjaardag!
English Happy Birthday!
Esperanto- Felichan Naskightagon!
Estonian- Palju onne sunnipaevaks!
Euskera Zorionak zure urtebetetze egunean!
Faroes( Faroe island )- Tillukku vid fodingardegnum!
Farsi- Tavalodet Mobarak!
Finnish- Hyvaa syntymapaivaa!
French(Canada)- Bonne Fete!
French- Joyeux Anniversaire!
Frisian Lokkiche jierdei!
Gaelic(Irish)- L‡ breithe mhaith agat!
Gaelic(Scottish)- Co` latha breith sona dhuibh!
Galician(Spain)- Ledicia no teu cumpreanos!
Georgian- Gilotcav dabadebis dges!
German-Badisch Allis Guedi zu dim Fescht!
German-Bavarian Ois Guade zu Deim Geburdstog!
German-Berlinisch Allet Jute ooch zum Jeburtstach! or Ick wuensch da allet Jute zum Jeburtstach!
German-Bernese Es Muentschi zum Geburri!
German-Camelottisch Ewllews Gewtew zewm Gewbewrtstewg. Mew!
German-Frankonian Allmecht! Iich wuensch Dir aan guuadn Gebuardsdooch!
German-Lichtenstein Haerzliche Glueckwuensche zum Geburtstag!
German-Moselfraenki sch Haezzlische Glickwunsch zem Gebordsdach!
German-Plattdeutsch Ick wuensch Di allns Gode ton Geburtsdach!
German-Rhoihessisch Ich gratelier Dir aach zum Geburtstag!
German-Ruhr Allet Gute zum Gebuatstach!
German-Saarlaendisc h Alles Gudde for dei Gebordsdaach!
German-Saechsisch Herzlischen Gliggwunsch zum Geburdsdaach!
German-Schwaebisch Aelles Guade zom Gebordzdag!
German-Wienerisch Ois Guade zum Geburdsdog!
German Alles Gute zum Geburtstag!
Greek Eytyxismena Genethlia! or Chronia Pola!
Greenlandic- Inuuinni pilluarit!
Gronings(Netherlands)- Fielsteerd mit joen verjoardag!
Gujarati(India)- Janma Divas Mubarak!
Gujrati(Pakistan)- Saal Mubarak!
Guarani(Paraguay Indian)]- Vy-Apave Nde Arambotyre!
Hawaiian- Hau`oli la hanau!
Hebrew- Yom Huledet Same'ach!
Hiligaynon(Philippines)- Masadya gid nga adlaw sa imo pagkatawo!
Hindi(India)- Janam Din ki badhai! or Janam Din ki shubkamnaayein!
Hungarian- Boldog szuletesnapot! or Isten eltessen!
Icelandic- Til hamingju med afmaelisdaginn!
Indonesian- Selamat Ulang Tahun!
Irish-gaelic- La-breithe mhaith agat! or Co` latha breith sona dhut! Or Breithla Shona Dhuit!
Italian- Buon Compleanno!
Italian -(Piedmont)- Bun Cumpleani!
Italian -(Romagna)- At faz tent avguri ad bon cumplean!
Japanese- Otanjou-bi Omedetou Gozaimasu!
Javaans-Indonesia Slamet Ulang Taunmoe!
Jerriais Bouon Anniversaithe!
Kannada -(India)- Huttida Habba Subashayagalu!
Kapangpangan -(Philippines)- Mayap a Kebaitan
Kashmiri -(India)- Voharvod Mubarak Chuy!
Kazakh -(Kazakstan)- Tughan kuninmen!
Klingon- Quchjaj qoSlIj!
Korean- Saeng il chuk ha ham ni da!
Kurdish- Rojbun a te piroz be!
Kyrgyz- Tulgan kunum menen!
Latin- Fortuna dies natalis!
Latvian- Daudz laimes dzimsanas diena!
Lithuanian- Sveikinu su gimtadieniu! or Geriausi linkejimaigimtadien io progal
Luganda- Nkwagaliza amazalibwa go amalungi!
Luxembourgeois- Vill Gleck fir daei Geburtsdaag!
Macedonian- Sreken roden den!
Malayalam -(India)- Pirannal Aasamsakal! or Janmadinasamsakal!
Malaysian- Selamat Hari Jadi!
Maltese- Nifrahlek ghal gheluq sninek!
Maori- Kia huritau ki a koe!
Marathi -(India)- Wadhdiwasachya Shubhechha!
Mauritian- Kreol mo swet u en bonlaniverser!
Mbula (-Umboi Island, Papua New Guinea)- Leleng ambai pa mbeng ku taipet i!
Mongolian- Torson odriin mend hurgee!
Navajo- bil hoozho bi'dizhchi-neeji' 'aneilkaah!
Niederdeutsch -(North Germany)- Ick gratuleer di scheun!
Nepali -Janma dhin ko Subha kamana!
Norwegian- Gratulerer med dagen!
Oriya -(India)- Janmadina Abhinandan!
Papiamento -(lower Dutch Antilles)- Masha Pabien I hopi aña mas!
Pashto -(Afganistan)- Padayish rawaz day unbaraksha!
Persian -Tavalodet Mobarak!
Pinoy -(Philippines)- Maligayang kaarawan sa iyo!
Polish- Wszystkiego Najlepszego! or Wszystkiego najlepszego zokazji urodzin!
wszystkiego najlepszego z okazji urodzin
Portuguese- (Brazil) Parabens pelo seu aniversario! or Parabenspara voce! or Parabens e muitas felicidades!
Portuguese- Feliz Aniversario! or Parabens!
Punjabi -(India)- Janam din diyan wadhayian!
Rajasthani -(India)- Janam ghaanth ri badhai, khoob jeeyo!
Romanian- La Multi Ani!
Rosarino -Basico -(Argentina)- Feneligiz Cunumplegeanagonos!
Russian- S dniom razhdjenia! or Pazdravliayu s dniom razhdjenia!
Sami/Lappish- Lihkos Riegadanbeaivvis!
Samoan- Manuia lou aso fanau!
Sanskrit -(India)- Ravihi janmadinam aacharati!
Sardinian (-Italy)- Achent'annos! Achent'annos!
Schwyzerduetsch-(Swiss German)- Vill Glück zum Geburri!
Serbian- Srecan Rodjendan!
Slovak- Vsetko najlepsie k narodeninam!
Slovene- Vse najboljse za rojstni dan!
Sotho Masego motsatsing la psalo!
Spanish- Feliz Cumplea–os!
Sri Lankan- Suba Upan dinayak vewa!
Sundanese- Wilujeng Tepang Taun!
Surinamese- Mi fresteri ju!
Swahili- Hongera! or Heri ya Siku kuu!
Swedish- Grattis pŒ fšdelsedagen
Syriac- Tahnyotho or brigo!
Tagalog -(Philippines)- Maligayang Bati Sa Iyong Kaarawan!
Taiwanese- San leaz quiet lo!
Tamil -(India-) Piranda naal vaazhthukkal!
Telugu -(India)- Janmadina subha kankshalu!
Telugu- Puttina Roju Shubakanksalu!
Thai- Suk San Wan Keut!
Tibetan- Droonkher Tashi Delek!
Tulu(Karnataka - India)- Putudina dina saukhya!
Turkish- Dogum gunun kutlu olsun!
Ukrainian- Mnohiya lita! or Z dnem narodjennia!
Urdu (-India)- Janam Din Mubarak
Urdu -(Pakistan)- Saalgirah Mubarak!
Vietnamese- Chuc Mung Sinh Nhat!
Visayan -(Philippines)- Malipayong adlaw nga natawhan!
Welsh- Penblwydd Hapus i Chi!
Xhosa -(South Afican)- Imini emandi kuwe!
Yiddish- A Freilekhn Gebortstog!
Yoruba -(Nigeria)- Eku Ojobi!
Zulu-(South Afican)- Ilanga elimndandi kuwe!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)