யு.டி.ஆர்.எஸ். முறையின் மூலம் ஒரு வீரருக்கு நடுவர் தீர்ப்பு வழங்கிய பிறகு, அதில் சந்தேகம் எழுந்தால் சம்பந்தப்பட்ட வீரர், கள நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மூன்றாவது நடுவரிடம் கோரலாம். இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமநிலையில் முடிந்தால், அதன்பிறகு இரு அணிளுக்கும் தலா ஒரு ஓவர் (சூப்பர் ஓவர்) வழங்கப்படும். அதில் வெற்றிபெறும் அணியே அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். யு.டி.ஆர்.எஸ். முறை, சூப்பர் ஓவர் முடிவு ஆகியவற்றை வரவேற்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். யு.டி.ஆர்.எஸ். முறை இதுவரை டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. அதுவும் சம்பந்தப்பட்ட இரு நாடுகளின் ஒப்புதலுக்குப் பிறகே இந்த முறை செயல்படுத்தப்பட்டது. இப்போது முதல் முறையாக உலக கிண்ணத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. யுடி.ஆர்.எஸ் முறைக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. |
வியாழன், 3 பிப்ரவரி, 2011
உலக கிண்ண போட்டிகளில் நடுவர் தீர்ப்பு மறுபரிசீலனை, சூப்பர் ஓவர் அறிமுகம்
வியாழன், 19 ஆகஸ்ட், 2010
40 வீரர்களுடன் விளையாடும் ஆனந்த்* ஒரே சமயத்தில் செஸ் சாகசம்

ஐதராபாத்: செஸ் சாகசம் நிகழ்த்த காத்திருக்கிறார் "உலக சாம்பியன்' விஸ்வநாதன் ஆனந்த். ஒரே சமயத்தில் 40 வீரர்களுடன் விளையாட உள்ளார். ஐதராபாத்தில் சர்வதேச அளவிலான கணித நிபுணர்களின் கூட்டம் நேற்று துவங்கியது.
இதனை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்தார். இதில், இந்தியாவின் "கிராண்ட்மாஸ்டர்' ஆனந்த் பங்கேற்கும் சிறப்பு செஸ் போட்டி வரும் 24ம் தேதி நடத்தப்பட உள்ளது. கணிதம் மற்றும் அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள இவர், ஒரே சமயத்தில் 40 வீரர்களுடன் விளையாட இருக்கிறார்.
இது குறித்து போட்டி அமைப்பாளர் ஒருவர் கூறுகையில்,""ஆனந்துடன் விளையாட மிகச் சிறந்த 40 பேரை தேர்வு செய்துள்ளோம். இதில், இந்தியாவை சேர்ந்த கணித பேராசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்,''என்றார்
திங்கள், 12 ஜூலை, 2010
புதிய வரலாறு படைத்தது ஸ்பெய்ன் அணி…...!!

2010ம் ஆண்டு ஜூன் 10ம் திகதி முதல் ஜூலை 11ம் திகதி வரை 32 நாடுகள் கலந்துகொண்ட உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் ஆபிரிக்க கண்டத்தில் முதன்முறையாக தென்னாபிரிக்காவில் நடைபெற்றன. 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தினை முதன்முறையாக ஸ்பெய்ன் தனதாக்கிக் கொண்டு புதிய வரலாற்றினைப் படைத்தது.
பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் ஜொகர்னஸ்பேர்க் சொக்கர் சிட்டி அரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் இரண்டு ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து மற்றும் ஸ்பெய்ன் அணிகள் மோதிக்கொண்டன. இந்த இறுதிப் போட்டியில் ஸ்பெய்னானது, நெதர்லாந்தினை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் சாம்பியன் பட்டத்தினை முதன்முறையாக தனதாக்கிக் கொண்டு புதிய வரலாற்றினைப் படைத்தது.

மிகவும் ஆக்ரோஷமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முழுமையான 90 நிமிடத்தில் இரண்டு அணி வீரர்களும் பல்வேறு தடவைகள் முயன்றும் கோலினைப் பெறமுடியாமல் போகவே மேலதிகமாக நேரம் வழங்கப்பட்டது. அதன் பிரகாரம், முதல் 15 நிமிடத்தில் எந்த கோலும் பெறப்படவில்லையாயினும் போட்டியின் 116வது நிமிடத்தில் ஸ்பெய்ன் அணியின் இனியெஸ்டா பெற்ற அபார கோலின் மூலம் ஸ்பெய்ன் அணி உலகக் கிண்ணத்தினை முதல் தடவையாக சுவீகரித்தது. இந்தப் போட்டியில் ஏராளமான மஞ்சள் அட்டைகளும், சிவப்பு அட்டை ஒன்று காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 3ம் இடத்துக்கான போட்டியில் உருகுவே மற்றும் ஜேர்மனி அணிகள் மோதிக்கொண்டன. இதில் ஜேர்மனி அணி 3-2 என்ற கோல் அடிப்படையில் வெற்றி கொண்டு 3ம் இடத்தினை 4வது தடவையாக சுவீகரித்தது. கடந்த உலகக் கிண்ணத்திலும் ஜேர்மனி அணியே 3ம் இடத்தினைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
2010 உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில்............
19வது உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் நிகழ்த்தப்பட்ட & புதுப்பிக்கப்பட்ட சாதனைகள் வருமாறு............
முதன்முதலாக..........
ஆபிரிக்கா கண்டத்தில்(தென்னாபிரிக்கா) முதல் தடவையாக உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத்தொடர் நடைபெற்றது. இதில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெய்ன் அணி ஆபிரிக்க கண்டத்தில் புதிய வரலாற்றினைப் படைத்தது.
முதல்வெற்றி...........
ஸ்பெயின் அணிக்கெதிராக 85 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து அணி முதல் வெற்றியினை (1-0) பதிவுசெய்தது.
பிரான்ஸ் அணிக்கெதிராக 80 ஆண்டுகளில் மெக்சிக்கோ அணி முதல் வெற்றியினை (2-0) பதிவுசெய்தது.
கிரேக்க அணி உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் நைஜீரியா அணிக்கெதிராக 2-1)
ஸ்லோவேனியா அணி உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் அல்ஜீரியா அணிக்கெதிராக 1-0)
அந்நிய மண்ணில் ஜப்பான் அணியானது, உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் கமரூன் அணிக்கெதிராக 1-0)
சிலி 48 ஆண்டுகளின் பின் உலகக் கிண்ணத்தில் தமது முதல் வெற்றியினை பதிவுசெய்தது. (முதல் சுற்றில் ஹொண்டுராஸ் அணிக்கெதிராக 1-0 வெற்றி)... கடைசியாக 1962ல் யுகோஸ்லாவியாவுடனான போட்டியில் வெற்றி .........
முதல் தடவையாக..........
உலகக் கிண்ண வரலாற்றில் கானா முதல் தடவையாக காலிறுதிக்கு முன்னேறியது. முன்னர் 2006 உலகக் கிண்ணத்தில் 2ம் சுற்றுக்கு நுழைந்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் பரகுவே முதல் தடவையாக காலிறுதிக்கு முன்னேறியது. முன்னர் 1986,1998,2002 உலகக் கிண்ணத்தில் 2ம் சுற்றுக்கு நுழைந்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் நியூசிலாந்து அணி முதல் தடவையாகப் புள்ளியினைப் (03) பெற்றுக்கொண்டது. முன்னர் 1982ல் 3போட்டிகளிலும் தோல்வி கண்டது.
80 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் போட்டியினை நடத்திய நாடானது (தென்னாபிரிக்கா) முதல் சுற்றுடன் வெளியேறியது இதுவே முதல் தடவையாகும்.
உலகக் கிண்ண வரலாற்றில் நடப்பு சாம்பியனும்(இத்தாலி), 2ம் இடத்தினைப் பெற்ற அணியும்(பிரான்ஸ்) முதல் சுற்றுடன் வெளியேறியதும் இதுவே முதல் தடவையாகும்.
80 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் 3 சகோதரர்களைக் கொண்ட முதல் அணியாக ஹொண்டுராஸ் விளங்கியது.
உலகக் கிண்ண வரலாற்றில் தந்தையும், மகனும் ஒரே அணியில் இதுவே முதல் தடவை. அமெரிக்க அணியில் தந்தை மைக்கல் பொப்(பயிற்றுனர்), மகன் மைக்கல் ப்ரட்லி(அணி வீரர்).
இறுதிப்போட்டி.............
80 ஆண்டுகால உலகக் கிண்ண வரலாற்றில் ஸ்பெய்ன் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. இதன் மூலம் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 12வது அணியாக ஸ்பெய்ன் விளங்குகின்றது.
நெதர்லாந்து அணி 32 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. முன்னர் 1978ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் 1-3 தோல்வியடைந்தது.
32 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு சாம்பியன் பட்டம் வெல்லாத இரண்டு அணிகள் மோதின (ஸ்பெய்ன் & நெதர்லாந்து) . இதற்கு முன்னர் 1978ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா & நெதர்லாந்து அணிகள் மோதின.
இதுவரை நடைபெற்ற 18 உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்களிலும் ஐரோப்பாவுக்கு வெளியே எந்தவொரு ஐரோப்பிய நாடும் சாம்பியன் பட்டம் வென்றதில்லை.அந்த குறையினை நீக்கி ஐரோப்பாவுக்கு வெளியே சாம்பியன் பெற்ற முதலாவது ஐரோப்பிய நாடாக ஸ்பெய்ன் சாதனை படைத்தது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிக இறுதிப் போட்டியில்(03) விளையாடிய 5வது நாடாக நெதர்லாந்து சாதனை படைத்தது. இதன் முதலிடத்தில் பிரேசில் & ஜேர்மனி (07), அதனைத் தொடர்ந்து இத்தாலி(06), ஆர்ஜென்டீனா(04) ஆகிய நாடுகள் விளங்குகின்றன.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நுழைந்த அணி என்ற சாதனையினை பிரேசில் அணியுடன்(2002) நெதர்லாந்து. பகிர்ந்துகொண்டது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் இறுதிப் போட்டிக்கு நுழைந்த முதற்தடவையிலேயே சாம்பியன் நாடான ஸ்பெய்ன் தனக்கு முன்னர் அந்த பெருமையினைக் கொண்ட உருகுவே, இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவற்றுடன் தன்பெயரினைப் பதிந்துகொண்டது.
2010ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மொத்தமாக 1 கோல் மாத்திரம் பெறப்பட்டது. இதற்கு முன்னர் 1990ம் ஆண்டு உலகக் கிண்ணம் (ஜேர்மனி 1 – ஆர்ஜென்டீனா 0)
உலகக் கிண்ண வரலாற்றிலே தாம் விளையாடிய முதல் போட்டியில் தோற்று, இறுதிப் போட்டி வரை முன்னேறி சாம்பியனான ஒரே அணி என்ற சாதனையினை ஸ்பெய்ன் பதிவுசெய்தது.
உலகக் கிண்ண வரலாற்றிலே தாம் விளையாடிய போட்டிகளில் குறைந்த கோல்களினைப்(08) பெற்று சாம்பியனான அணி என்ற சாதனையினை ஸ்பெய்ன் பதிவுசெய்தது.
ஐரோப்பிய சாம்பியன், உலகக் கிண்ண சாம்பியனானது இது 2வது தடவையாகும். (இதற்கு முன்னர் 1974ல் மே.ஜேர்மனி)
சில குறிப்புக்கள்.........
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிகளவான அரையிறுதிப் போட்டிகளில் விளையாடிய நாடான ஜேர்மனி தனது சாதனையினை புதுப்பித்தது – 12 போட்டிகள்
அதிக உலகக் கிண்ண போட்டிகளில்(99) விளையாடிய அணியாக ஜேர்மனி சாதனை படைத்தது. பிரேசில் 97 போட்டிகளில் விளையாடியுள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டத்தில் அதிக தடவைகள்(4) 3வது இடத்தினை சுவீகரித்த அணியான ஜேர்மனி தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் 3ம் இடத்தினைப் வெற்றி கொண்ட ஒரே அணியாக புதிய சாதனை படைத்தது.
24ஆண்டுகளின்பின் ஆரம்பப் போட்டி சமனில் முடிவடைந்தது. (தென்னாபிரிக்கா எதிர் மெக்ஸிக்கோ 1-1) , முன்னர் 1986ல் இத்தாலி எதிர் பல்கேரியா 1-1
உருகுவே அணி 40 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக காலிறுதி & அரையிறுதிக்கு நுழைந்தது. உருகுவே அரையிறுதியில் நெதர்லாந்திடம் 2-3 என்ற கணக்கில் வீழ்ந்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் 60 ஆண்டுகளின் பின்னர் ஸ்பெய்ன் முதல் தடவையாக அரையிறுதிக்கு முன்னேறியது. முன்னர் 1950ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு நுழைந்தது.
உலகக் கிண்ண வரலாற்றில் சுவிட்சர்லாந்து அதிக போட்டிகளில்(05) எதிரணிக்கு கோல் விட்டுக்கொடுக்காத அணியாக இத்தாலியுடன் தன்பெயரினை பதிவுசெய்தது. (சுவிட்சர்லாந்து 2006ல் 4 போட்டிகளிலும், 2010ல் தனது முதல் போட்டியில் ஸ்பெயினுக்கெதிராக 1-0 என வெற்றிபெற்றது)
உலகக் கிண்ணத்தில் நடப்புச் சாம்பியன் 2வது தடவையாக முதற் சுற்றுடன் வெளியேறிய அவமானகரமான சாதனையினை படைத்த ஒரே நாடாக இத்தாலி விளங்குகின்றது. இதற்கு முன்னர் 1950 உலகக் கிண்ணத்தில் இத்தாலி முதல் சுற்றுடன் நடையைக் கட்டியது.
புதன், 9 ஜூன், 2010
முறையாகத் தூங்கினால் குழந்தைகள் படுசுட்டிகளாக இருப்பார்கள்: ஆய்வில் தகவல்

தினசரி முறையாகத் தூங்கும் பழக்கம் உடைய குழந்தைகள் படுசுட்டிகளாக விளங்குகின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ரீ இன்டர்நேஷனல் என்ற ஆராய்ச்சி நிறுவனம் 8 ஆயிரம் குழந்தைகளிடம் இது குறித்து ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் எரிகா கெய்லர் கூறியதாவது: ஆய்வு மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் 9 மாத குழந்தைகளாக இருந்தபோதிலிருந்து எவ்வாறு தூங்குகின்றன என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதே குழந்தைகளுக்கு 4 வயதான பின்பும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. தினசரி இரவு சீக்கிரமே தூங்கச் செல்வதுடன் 11 மணி நேரம் தூங்கும் குழந்தைகள், சொல்வதை விரைவாகப் புரிந்து கொள்ளுதல், மொழிகளை எளிதாக கற்றுக் கொள்ளுதல், கணிதத்தில் புலியாக விளங்குதல் போன்றவற்றில் படுசுட்டிகளாக விளங்குகின்றன.
குறித்த நேரத்தில் தூங்கச் செல்லாததுடன், 11 மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும் குழந்தைகள் அவ்வளவு சுட்டிகளாக விளங்காததும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, தினசரி இரவு சீக்கிரமே குழந்தைகளைத் தூங்கச் செய்வதன் மூலம் அவர்களுக்குத் தேவையான அளவு தூக்கத்தை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தூங்குவதற்கு முன் குழந்தைகளுடன் உரையாடுவது, கதைகள் சொல்வது ஆகியவை பயனுள்ளதாக அமையும் என்றார். குழந்தைகளை சீக்கிரமே தூங்கச் செய்ய வேண்டும் என்பதையே இதற்கு முந்தைய ஆய்வுகளும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது
வியாழன், 22 ஏப்ரல், 2010
அழகிற்கு அணிசேர்க்கும் மூலிகைகள்-Sambarani leaf
சாம்பிராணி இலை
இது சிறிய செடியாக இருக்கும். தண்டு எளிதில் உடையும் தன்மை வாய்ந்தது. இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும்.
இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.
இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும்.
இதில் இரண்டு வகை உண்டு. அடி வரை வளரும் வேர்கள், அதன் ஆழம் செல்லாமல் கொத்து வேராகவே இருக்கும்.
மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும்.
தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.
இது சிறிய செடியாக இருக்கும். தண்டு எளிதில் உடையும் தன்மை வாய்ந்தது. இலைகள் வெளிர்பச்சையாக வெற்றிலை வடிவத்தில் இருக்கும். இலை இரண்டு மில்லிமீட்டர் கனம் உள்ளதாக இருக்கும். இலையின் மேலும், கீழும் நுண்ணிய துணை இலைகள் படர்ந்திருக்கும். இந்த இலையைக் கசக்கினால் நல்ல வாசனை வரும்.
இந்தியா முழுவதும் குறிப்பாக ராஜஸ்தான், தென்னிந்தியாவிலும், காடுகளிலும் வளர்கிறது. வீடுகளிலும் விரும்பி மருந்திற்காக வளர்க்கப்படுகிறது. சதைப்பற்று மிக்க, மணமிக்க காம்புகளையுடைய சிறிய புதர்ச்செடி இது.
இதன் இலைகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுகின்றன. கை வைத்தியமாகவும், மக்களால் பயன்படுத்தப்படுகிறது. பித்தப்பை கல் உண்டாவதைத் தடுக்கும் குணம் கொண்டது.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். நாள்பட்ட இருமல், அஜீரணம், வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு நல்ல மருந்தாக இலைச்சாறு பயன் தருகிறது. கண் அழற்சிக்கு இதன் சாறு மேல் பூச்சாக தடவ பயன்படும்.
இதில் இரண்டு வகை உண்டு. அடி வரை வளரும் வேர்கள், அதன் ஆழம் செல்லாமல் கொத்து வேராகவே இருக்கும்.
மருத்துவத் துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரி செய்யவும், சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
தேமல் உள்ள இடங்களில் காலையும், மாலையும் வெந்நீரால் கழுவிச் சுத்தம் செய்து அதன் மேல் சாம்பிராணி இலைச் சாற்றைத் தேய்த்து வந்தால் தேமல் மறையும்.
தலைவலி தோன்றிய நேரத்தில் சாம்பிராணி இலையைக் கசக்கி அதன் சாறை நெற்றிப் பொட்டில் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குணமாகும்.
அழகிற்கு அணிசேர்க்கும் மூலிகைகள் -Karisalankanni
.jpg)
கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி இந்தியாவின் வெப்பமான பகுதிகளில் எளிதாக வளரும். இதை கரிசாலை, கையான், கரப்பான் என்பர். புதர்கள், சாலையோரங்கள், சதுப்பு நிலங்கள் என எங்கும் காணப்படும் சிறுசெடி.
கரிசலாங்கண்ணி நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை என நான்கு வகைகளுண்டு. மஞ்சள் கரிசாலை சாதாரண கரிசாலையைவிட மிக உயர்ந்தது. வடநூல்கள் இது ஒரு கற்பக மூலிகை என்கின்றன. இதை இடித்துச் சாறு பிழிந்தால் கறுப்பாக இருக்கும். காரணம் இதில் இரும்பு சத்தும் செம்புச் சத்தும் அதிகமுள்ளது.
முழுத் தாவரமும் மருத்துவ பண்பு உடையவை. தோல் நோய்கள் மற்றும் மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். கல்லீரல் நச்சுத் தன்மையை நீக்கும். கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவதால் கேசத் தைலமாக பயன்படுத்தப்படுகிறது. கேசத்திற்கு சாயமிடுவதிலும் பயன்படுகிறது. பற்று, தேள் கடிக்கு மருந்தாகும். வீக்கங்கைக் குறைக்கும்.
உடலுக்கு பொன் வடிவத்தையும், வலிமையையும் அளிக்கக் கூடியது. இலைகளை அரைத்த விழுதை உடலில் தேய்த்துக் குளிக்க, நாளடைவில் தோல் பொன்னிறமாக மாறும்.
மஞ்சள் கரிசாலையைக் கறியாகச் செய்துண்ண அறிவின் தெளிவும், திருவும் சேரும். இலைச்சாறு 90 துளி எடுத்து அதோடு நீர் அல்லது மோர் சேர்த்துக் சாப்பிட பாம்பின் கடி நஞ்சு போகும். இரண்டு துளி எடுத்து எட்டு துளி தேன் கலந்து கொடுக்க கைக் குழந்தைகட்கு ஜலதோஷம் நீங்கும்.
தினமும் காலையில் கரிசலாங்கண்ணியின் வேரால் பல் துலக்கி, பின் இக்கீரையை 2 பிடி எடுத்து மென்று, தின்று ஒரு டம்ளர் நீர் அருந்தி வர, நாளடைவில் பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிறக் கறை அகன்றி விடும்.
உடலில் சப்த தாதுக்களை உரமாக்கி, வலுவைத் தந்து உயிர் அணுக்களைப் பெருக்கித் தங்க நிறம் போன்ற சருமத்தை உண்டாக்கும் குணமுடையது. கரிசலாங்கண்ணி இலையை மைபோல அரைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும். நரை, திரை மாற்றக்கூடிய 108 கற்பக மூலிகைகளில் கரிசாலை முக்கியமானது.
கரிசாலை சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து தீயில் காய்ச்சி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தலைக்கு தடவி வர முடி கறுத்து, செழித்து வளரும்.
கரிசலாங்கண்ணி 300 கிராமுடன், கொட்டைக்கரந்தி இலை சமபங்கு சேர்த்து ஏழு நாள் நிழலில் உலர்த்தி எட்டாம் நாள் பொடித்து, சலித்து வைத்து காலை, மாலை அரைத் தேக்கரண்டி தூளுடன் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழப்பி நாற்பது நாள் சாப்பிட்டு வர நரை மயிர் தானே கருத்து வரும். அவ்வளவும் கருநிறமாக மாறிவிடும். இந்த இலையை நன்றாகக் கசக்கி தேள் கொட்டிய இடத்தில் வைத்து துணியில் ஒரு பொய்க்கட்டு போட்டு விட்டால் போதும். விஷம் இறங்கிவிடும். உலர வைத்த கரிசலாங்கண்ணி பொடியை பசும் பாலுடன் ஒரு மண்டலம் உண்டு வர பல நோய்கள் தீருவதோடு பெண் பூப்படைவாள்.
வெள்ளை கரிசலாங்கண்ணி என்ற சிறிய செடி சோகை நோய்க்கு ஒரு வரப் பிரசாதம். கரிசாலை இலைகள் 200 கிராம், மிளகு 10 கிராம் இரண்டையும் அரைத்து சுண்டைக்காயளவு உருட்டி நிழலில் மூன்ற நாள் உலர்த்தி பின் ஒரு கோப்பையில் போட்டு மூழ்க தேன் விட்டு ஐந்து நாட்கள் வெயிலில் வைத்தெடுத்து வாயகன்ற பாட்டிலில் பத்திரப்படுத்தி தினமும் காலை, இரவு உணவுக்கு முன் பதினைந்து வயதுக்குட்பட்டவர்கள் வேளைக்கு ஒரு தேக்கரண்டியும், பெரியவர்கள் இரண்டு தேக்கரண்டி என மென்று தேவை கையிலிட்டு நக்கி சாப்பிட, மஞ்சள்காமாலை சோகை நீங்கி, இரத்த விருத்தி ஏற்படும். நீண்ட நாட்கள் உண்டு வர கண்கள் பிரகாசமடையும். தலைமுடி கருக்கும். (தேனை உறிஞ்சிக் குடிக்கக் கூடாது. ஏனெனில் புரை ஏறி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்). இலைச் சாற்றை காது வலிக்குக் காதுகளில் விடலாம். இதனை நல்லெண்ணெயில் அரைத்து யானைக்கால் நோய்க்கு மேலுக்குப் பூசலாம்.
குப்பைமேனி, பொன்னாங்கண்ணி-Kuppameni

இந்தியாவின் வெப்பமான பகுதிகளில் வளரும் களைச் செடியாகும். குறுஞ்செடியாக வயல்களிலும், வரப்புகளிலும் வளரும். முழுத்தாவரமும் மருத்துவ பயன் கொண்டவை. மூச்சுக் குழல் மற்றும் ஆஸ்த்துமா நோய்க்கு மருந்தாகிறது. இலைகளின் சாறு தோல் வியாதிகளுக்கு மேல் பூச்சாகப் பயன்படுகிறது.
உடலிலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. படுக்கைப் புண் மற்றும் நாள்பட்ட சொறி சிரங்குகளை ஆற்றுகிறது. முடக்கு வாதம், மூட்டுவலிக்கு மேல் மருந்தாகவும் தடவப்படுகிறது.
பொன்னாங்கண்ணி:
உடலுக்குப் பொன் போன்று கவர்ச்சியையும், பிரகாசத்தையும் தோற்றுவிக்கும் சக்தி படைத்த மூலிகை என்ற கருத்தில் வழங்கியது பின்னாளில் பொன்னாங்கண்ணியாகிவிட்டது. கண் தொடர்பான எந்தப் பிணிகளுக்கும் இந்தக் கீரை நல்ல மருந்துப்பொருள், உடற்சூட்டை சமனப்படுத்தி ஒரே நிலையில் வைக்கும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு. பலவீனமான உடலைச் சீராக வளர்த்து வலிமையையும், வளமையையும் இது ஊட்டும்.
செழிப்பாய் வளர்ந்த பொன்னாங்கண்ணிக் கீரையை செம்மையாக வதக்கி, மிளகு, உப்பு கூட்டி புளியை நீக்கி முறைப்படி ஒரு மண்டலம் உட்கொணடால் உடலுக்கு அழகு, பொன்னிறம், நீண்ட ஆயுள், கண் குளிர்ச்சி இவற்றைத் தரும். தினம் இதைத் துவட்டிச் சாப்பிட உடல் ஒளிபெறும். உப்பில்லாமல் வேகவைத்து வெண்ணெயிட்டு நாற்பது நாளுண்ண கண்ணில் உண்டாகும் நோய் தீரும். இதன் தைலத்தைத் தலைமுழுகி வர கண் நோய்கள் தீரும்.
நோய் காரணமாக பலவீனமடைந்தவர்கள் டானிக் போன்று இக்கீரையை உண்டு வர உடலில் ரத்த உற்பத்தி பெருகி நல்ல பலம் சேரும். கண் தொடர்பான பிணிகளுக்கு பொன்னாங்கண்ணி தைலம் நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. சருமநோய்களையும் இந்தத் தைலம் அகற்றி உடலைப் பட்டுப் போன்று மென்மையாக ஆக்கும்.
குப்பைமேனி இலையை பொடித்து தக்க அளவாக குழந்தைகளுக்கு கொடுக்க மலப்புழுக்கள் வெளிப்படும். இலையையும், பூண்டையும் சேர்த்தும் கொடுக்கலாம். இலையையும், உப்பையும் கலந்து அரைத்துத் தடவ சொறி, சிரங்கு குணமாகும்.
சிறிது சுண்ணாம்புடன் இலையைக் கலந்து தடவ, நோயுடன் கூடிய மூட்டு வலி சரியாகும். இதையே காதுவலிக்கு காதைச் சுற்றிப் பூச காதுவலி நீங்கும்.
இலையுடன் உப்பு சேர்த்து சாறு பிழிந்து இரு மூக்கிலும் நசியமிட்டு, குளிர்ந்த நீரில் தலை முழுக வெளி நோய் நீங்கும்.
Beauty - பொடுதலை

இத்தாவரம் வயல் வரப்புகளில், காடுகளில், தரையில் படரும் சிறிய கொடியினம். இதன் காய்கள் திப்பிலி போல் இருக்கும்.
‘பொடுதலை என்ற பேருரைக்கில் விடுதலையாகும் பேதி’ என்பது பழமொழி. பொடுதலை இலை தலையில் உள்ள பொடுகை குணப்படுத்த வல்லது. பொடுதலை இலை பேதிக்கு நல்ல மருந்து. இவ்விலைச் சாறு கொப்புளம், புண், வீக்கத்திற்கு நல் மருந்து.
நூறு கிராம் பொடுதலை இலையை 50 மில்லி நீரிலிட்டு சிறு தீயில் எரித்து கால்பாகம் சுண்டின பின் வடிகட்டி அதை இரண்டு பங்காக்கி காலை, மாலை குடித்து வர சிறுநீரிலுள்ள இனிப்பை மாற்றும். இக்கஷாயத்துடன் வால்மிளகு, சூரணம் சேர்த்து குடித்துவர சிறுநீரக நீர்த்தாரைப்புண், அதனால் ஏற்படும் வெள்ளைப் படுதல் குணமாகும்.
பொடுகு உள்ளவர்களுக்கு முடி உதிரும், எத்தனை தைலங்கள் தேய்த்தாலும் குணமாகாது. பொடுதலை 150 கிராம், தோலுரித்த சின்ன வெங்காயம் 250 கிராம், வெந்தயம் 50 கிராம் மூன்றையும் ஒன்றிரண்டாக இடித்து இரும்பு வாணலியில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்விட்டு அதில் மேற்படி சரக்கை கலந்து சிறு தீயில் எரிக்கவும். நீர் சுண்டி தீயாமல் மிதக்கும் பக்குவத்தில் இறக்கி, ஆறவிட்டு வடிகட்டி பத்திரப்படுத்தவும், இதை தினமும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக தலையில் தேய்த்து தலைவாரிக் கொள்ள வேண்டும்.
பொடுகுக்கு மேற்பூச்சு மட்டும் முழு பலனளிக்காது. உள்ளுக்கும் பொடுதலை இலைகளை நெய்விட்டு வதக்கி, புளி, உப்பு, மிளகாய் போட்டு சேர்த்து துவையல் செய்து சாப்பிட பொடுகு குணமாகும்.
பொடுதலையை வதக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து இறுத்துக் கொடுக்க இருமல், வலிநோய்கள் ஆகியன தீரும். இலைகளை வதக்கி வறுத்த ஓமத்துடன் சேர்த்தரைத்து நீர்விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு சங்களவு புகட்ட குழந்தைகளின் கழிச்சல் நீங்கும்.
இலையுடன் சீரகம் அரைத்து கொடுக்க வெள்ளை படுதல் நிற்கும். இலையைத் துவையல் செய்து உண்டு வரை உள்மூலம் தணியும். இலையை அரைத்து கட்டி, கொப்புளத்தில் பற்றிட கட்டிகள் பழுத்து உடையும்.
வல்லாரை (பிரம்மி)-Vallarai

பிரம்மி என்று அழைக்கப்படும் இத்தாவரம் தரையில் படர்ந்து பரவும். படரும் தண்டிலுள்ள கணுக்களிலிருந்து வேர்கள் புறப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஈரப்பசை நிறைந்த இடங்களிலும், பெரும்பாலும் ஆறுகள், ஓடைகள் போன்ற நீர்ப்பாசனம் மிகுந்த வயல் வெளிகளிலும் காணப்படுகின்றன. இலைகள் வட்ட வடிவமாக தவளையின் பாதம் போன்ற அமைப்பில் உள்ள கீரை வகையைச் சேர்ந்தது.
இச்செடியின் இலைகளும், தண்டும் மருத்துவ பண்புகள் நிறைந்தவை. வேர்கள் மற்றும் விதைகளிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இத்தாவரத்திலுள்ள ‘ஆஷாயாடிகோசைடு’ எனும் பொருள் தொழுநோயைக் குணப்படுத்துகிறது. தோல், முடி, நகம் போன்றவற்றின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
ஞாபக சக்தியை வளர்க்கவும், மூளைக்குத் தேவையான சத்து மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலைகள் சருகாகவும், பதப்படுத்தப்பட்டும் மருந்துப் பொருள் தயாரிக்கப் பயன்படுகின்றன. வல்லாரை இலையுடன் சிறிது டைமண்ட் கல்கண்டும், குங்குமப்பூவும், பசும்பால் சேர்த்து நன்கு அரைத்து வேளைக்கு நெல்லிக் காயளவு 96 நாட்கள் சாப்பிட்டு வர முகம் ஒளி பெறுவதுடன் இளமை திரும்பும். (உணவில் மாமிசம் தவிர்க்க வேண்டும்).
வல்லாரை இலைகளைப் பற்களின் மிது வைத்துத் தேய்ப்பதனால் பற்களில் படிந்துள்ள மஞ்சள் நிறம் மாறி பற்கள் நல்ல வெண்ணிறத்தைப் பெறும். உணவில் வாரம் ஒரு முறை சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.
நாட்டுப்புற மக்கள் நன்கு அறிந்த மூலிகை வல்லாரை. இது வாய்க்கால் கரை, வரப்பு, வயல் இவ்விடங்களில் தரையோடு தரையாகப் படரும் கொடியினம். கொடியின் கணுக்களில் ஒரு கொத்தாகப் பல தண்டுகள் காணப்படும். தண்டின் நுனியில் வேம்பிலை போன்று ஓரு வட்டமான இலையிருக்கும். இதற்கு சிறு கசப்பு சுவையுண்டு. இதை அளவோடு உண்டால் பெரும் பயனளிக்கும். அளவில் அதிகமானால் தலைவலி, தலைசுற்றல் ஏற்படும். வாக்கு நயமில்லாதவர்கள், ஞாபகசக்தி குறைபாடுள்ளவர்களுக்கு இந்த தெய்வீக மூலிகை ஒரு வரப் பிரசாதம்.
பிணிகளை நீக்கி ஆயுளைப் பெருக்கும். இருதய பலத்துக்கும், உடல் வன்மைக்கும் வல்லாரை ஒரு தெய்வீக கற்பக மூலிகை ஆகும். இதன் இலையை காம்பு இல்லாமல் நிழலில் உலர்த்திப் பொடி செய்து வேளைக்கு மூன்று குன்றி மணி எடை சர்க்கரையுடன் இரண்டு வேளை கொடுக்கலாம்.
இவ்விலையை அரைத்து படை, வீக்கம், யானைக் கால் வீக்கம், ரணம் இவைகட்கு மேல் பூசுவதால் அதிக நன்மை தரும்.
இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது. மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் வியாதியிலும் பயன் தரும். வீட்டுச் சமையலில் இக் கீரையை வாரம் இருமுறை பயமின்றி உபயோகிக்கலாம்.
வல்லாரையை இடித்தெடுத்துப் பிழிந்த சாறு அரைலிட்டர் நல்லெண்ணெய் அல்லது தே.எண்ணெய் அரைலிட்டர் இரண்டையும் கலந்து அடுப்பில் வைத்து எரிக்க, அடிமண்டி மெழுகு போல விரலால் உருட்டும் போது திரளும் பதத்தில் இறக்கி வடிகட்டி தினந்தோறும் தலையில் தடவியும், தேய்த்துக் குளித்தும் வர, மூளைத்தெளிவு, குளிர்ச்சி தந்து நரையைத் தடுக்கும்.
வல்லாரை இலையை பால் கலந்து அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு உண்டு வர நரை, திரை அகலும். இளமைத் தோற்றம் திரும்பும். எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும். இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் யானைக் கால் நோய் நீங்கும் என்று கூறுவார்கள்.
வல்லாரை இலையை பச்சையாக பயன்படுத்தக் கூடாது. இலைகளை ஆய்ந்து பிட்டுபோல அவித்த பின்னரே பயன்படுத்த வேண்டும். வல்லாரை இலையுடன் அரிசித் திப்பிலி சேர்த்து ஊறவைத்த மைபோல அரைத்து, காலை, மாலை சுண்டைக் காயளவு சாப்பிட்டு வர நல்ல ஞாபசக்தி உண்டாகும்.
Amaranthus-அரைக்கீரை

தோட்டக்கால்களில் பயிரிடப்படும் ஒரு வகைக் கீரை. இதை வேரோடு பிடுங்காமல் அறுத்தெடுப்பதால் அறுகீரை எனப் பெயர் வந்தது. கீரையின் மேல்பாகம் பசுமையாகவும், அடிப்பாகம் சிவப்பாகவும், நீலநிறம் கலந்தாற் போலவும் இருக்கும். இது ஒரு உன்னதமான சஞ்சீவியாகும்.
அரைக் கீரையில் புரதம், தாது உப்பு, மாவு சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரம், இரும்பு சத்துகள் உள்ளன. இதிலுள்ள நார்ச்சத்து மலர்ச்சிக்கலை நீக்குவதுடன் இதயத்திற்கு பலத்தைக் கொடுக்கிறது. உடலுக்கு இரும்புச் சத்து ஊட்டும்.
அரைக்கீரை சாப்பிட்டு வர சுரம், சன்னி, கபநோய், வாதம், நடுக்கம் தீருவதுடன் உடல் பலம் பெறும்.
மலச்சிக்கல், ஜன்னி, நரம்புத் தளர்ச்சி, பலவீனம், உடல்வலி, வாய்வு சம்பந்தமான வியாதிகள், நீர்க்கோவை, நரம்பு வலி ஆகியவை தீரும். நுரையீரல் ஜுரங்களைக் குறைக்க வல்லது. மேலும் இக்கீரை நினைவாற்றலைப் பெருக்கும் திறன் கொண்டது. இரத்தப் போக்கால் பலவீனமடைந்தவர்களைத் தேற்றி உடலுக்கு சக்தி கொடுக்கும்.
தலைமுடி கறுப்பாக, செழிப்பாக வளர ஊக்குவிக்கும் இக்கீரை மருந்தாலும், உணவாலும் ஏற்படும் உடற்சூட்டைத் தணிக்கிறது. சிறு பித்த சம்பந்தமான நோய்களையும், கண் நோய்களையும் குணப்படுத்துகிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் ஜுரம், ஜன்னி, கபம், வாதநோய், உடல்நடுக்கம் முதலான நோய்கள் தீரும். உடல் வலுப்பெறும். அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் தலைமுடியை கருகருவென்று நன்கு வளரச் செய்கிறது. முடிக்கு ஒரு மினுமினுப்பையும் தருகிறது.
அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். மேலும் இது நரம்பு தளர்ச்சியைப் போக்கும். நரம்புகளுக்கு பலமூட்டும். நோயினால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்தவர்களுக்கு இது இழந்த பலத்தை திரும்பக் கொடுக்கும். அரைக்கீரை உடம்பில் தொல்லை தரும் வாயுவைப் போக்கும். இரத்தத்தை விருத்தி செய்யும். தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் ஏற்படாது. எந்த நோயும் அணுகாது.
அரைக்கீரை விதைத் தைலம்:
தேங்காய் எடுத்து கண் திறந்து நீரைப் போக்கி அதனுள் அரைக்கீரை விதையை நிரப்பி மூங்கில் குச்சியினால் ஆப்பிட்டு அடைத்து தரையில் புதைத்து விட வேண்டும். 48 நாள் கழித்த பின் உடைத்து ஓடு நீக்கி நன்கு அரைத்து 1-1/2 லிட்டர் நல்லெண்ணெயில் காய்ச்சி பதத்தில் இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும். இதை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்து வர தலைவலி நீங்கும். தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
அரைக்கீரை பற்றி அறியாதாரே கிடையாது எனலாம். அரைக்கீரைக்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி உண்டு. எனவே இது மூலிகை வகையில் சேர்கிறது. அரைக்கீரையை மருந்தாக தயாரித்துச் சாப்பிடத் தேவையில்லை. சமையல் செய்து சாப்பிட்டாலே பல வியாதிகள் குணமாகும். தாது புஷ்டியை உண்டு பண்ணும். நரம்பு தளர்ச்சியைப் போக்கும். உடலுக்கு நல்ல பலத்தைத் தரும். புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். ஆண்மை இழந்தவர்கள் தினசரி இக்கீரை சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெறலாம். உடலில் உற்பத்தியாகும் வாயுவை அகற்றிவிடும். நாவில் ருசியறியும் தன்மை மாறினால் அரைக்கீரை சாப்பிட நா ருசியறியும் தன்மை பெற்றுவிடும். அடிக்கடி உடலில் வலி தோன்றி சங்கடப்படுகிறவர்கள் தினசரி இக்கீரை சாப்பிட உடல் வலி நீங்கும். அரைக்கீரையுடன் அதிக அளவு வெங்காயம் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட இருமல் குணமாகும்
அரைக்கீரையின் மருத்துவ பயன்களைச் சொல்லி முடியாது. அநேகமாக எல்லா விதத்திலும் இது சிறந்த பச்சிலையாகப் பயன்படுகிறது. குறிப்பாக ஜுர வகைகளுக்கு நல்ல மருந்து. நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் வாயு நீக்கும் மூலிகையாகும். உடலில் எந்தப் பகுதியில் வாயு சேர்ந்து தொல்லை கொடுத்தாலும் இது உடனே அகற்றி நலம் சேர்க்கும். உடல் வலி நீங்கி உடல் கலகலப்பாக இருக்கும். அரைக்கீரையின் இயல்பு உஷ்ணம் என்றாலும் யாரும் எந்த நிலையிலும் சாப்பிடலாம். குறை ஏற்படாது.
அறுகம்புல்-Cynodon Dactylon

அறுகம்புல் விநாயகருக்கு சூட்டப்படும் என்பதால் இது தெய்வீக மூலிகை இனத்தைச் சார்ந்ததாகிறது. ஆற்றங்கரை ஓரங்களிலும், சதுப்பு நிலங்களிலும் எளிதில் வளரக்கூடியது. அறுகம்புல் மருத்துவ குணங்கள் பலவும் கொண்டது. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
அறுகம்புல்லின் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள கண் நோய், தலை நோய், கண் புகைதல், குருதியழல் இவை ஒழியும்.
அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண் நோயும், கண் புகைச்சலும், மூக்கிலிட, மூக்கிலிருந்து பாயும் குருதியும், காயம் பட்ட இடத்தில் பூச அதிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். புண்களின் மீது தடவ புண் ஆறி வரும்.
அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவிவர சொறி, சிரங்கு, படர்தாமரை போகும்.
அறுகம்புல்லுடன், கடுக்காய்த் தோல், இந்துப்பு சிறிது, கிரந்தி தகரம், கஞ்சாங்கோரை இவை ஓரெடை எடுத்து மோர் விட்டரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு, படர்தாமரை ஒழியும், நுண் புழுக்களும் சாகும்.
ஆவாரை-Avarai

மலைச்சரிவுகளிலும், சிலவகைப் பூமியிலும் அதிகம் கிடைக்கிறது. சீயக்காய் போன்று சிகையிலுள்ள அழுக்கைப் போக்கிவிடும். வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும். இச்செடியானது மத்திய இந்தியா, தென்னிந்தியா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களில் ஏராளமாக வளரும் குத்துச் செடி. இதன் இலை, பூ, வேர், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.
இது பெருஞ்செடி வகையைச் சேர்ந்தது. இது செம்மண் பூமியில் தான் அதிக அளவில் பயிராகிறது. பெருஞ்செடியாக அடர்ந்து வளரும். முட்டை வடிவத்தில் குண்டு குண்டாக மொக்குகள் விட்டு பெரிய இதழுடன் மஞ்சள் நிறப் பூக்களுடன் காணப்படும். மழைக் காலத்தில் செழிப்பாகவும், கோடைகாலத்தில் செழுமை குன்றியும் காணப்படும். இலை அகத்திக் கீரையை ஒத்த வடிவத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும்.
ஆவாரஞ் செடியின் பட்டை தோல் பதனிட அதிக அளவில் பயன்பட்டு வருகிறது. மந்தமான கண் தெளிவடையும். மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும். ஆவாரம் பூவின் இதழ்களை ஆய்ந்து எடுத்து பச்சைப் பருப்பு, துவரம் பருப்பு சேர்த்து சமைத்து தொடர்ந்து 40 நாள் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் நல்ல பலம் பெறும்.
உடல் சூட்டை ஆவாரம் பூ தணிக்கக் கூடியது. பூவுடன் பாசிப்பயிறு சேர்த்து அரைத்து உடம்பிற்குத் தேய்த்துக் குளிக்கலாம். உடலிலுள்ள அரிப்பு நீங்க நன் மருந்து. ஆவாரைக்கு ‘தங்க மங்கை’ என்ற சிற்ப்புப் பெயருண்டு. இதில் தங்க பஸ்பம் செய்வார்கள்.
வைத்தியத் துறையில் இதன் எல்லா பாகங்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. உடலிலுள்ள துர்நீரை இறக்கி சிறு நீராக சுரக்கச் செய்து நீரை வெளியேற்றுகிறது. நரம்பு தளர்ச்சியை நீக்கி, வலிமையைக் கொடுக்கிறது.
ஆவாரம்பூவை நெய்யில் வதக்கி உட்கொண்டு வர உடலில் மறைந்திருக்கும் பல வியாதிகள் அகன்று விடும். பூவை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை, வெட்டை, மேக நோய்கள், சோர்வு, நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும். ஆவாரம் பூவுடன் நாவல் மர இலையை சேர்த்துப் பொடியாக்கி பசும்பாலில் கலக்கிக் குடித்துவர சர்க்கரை வியாதி விலகி விடும். நாவல் இலைக்குப் பதில் வில்வ இலையையும் சேர்க்கலாம்.
ஆவாரம் பூவுக்கு உடலைப் பொலிவுடன் அமைக்கும் சக்தி உண்டு. விருப்பம் போல பக்குவம் செய்து, இதனை உணவோடு சேர்த்துக் கொண்டால் உடலில் நல்ல தளதளப்பும், சாந்தியும் ஏற்படும்.
பூவுடன் பச்சைப் பயிறு சேர்த்தரைத்து நமைச்சலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். இலைகள் குளிர்ச்சியுடையது. வெயிலில் வெகு தூரம் நடப்பவர்கள், இந்த இலையை தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகை கட்டி நடப்பார்கள். வெயிலின் வெப்பம் பாதிக்காது. நடையும் சுறுசுறுப்புடன் தோன்றும்.
ஆவாரைப் பிசின் நிரிழிவு, வெள்ளைப்படுதல் முதலிய சிறுநீர் கேடுகளைப் போக்கும். இலை குளிர்ச்சியுடையமையால், வெயிலில் வெகுதூரம் நடப்பவர்கள் இவ்விலைகளைத் தலையின் மீது பரப்பி அதன்மீது தலைப்பாகையிட்டு நடக்க வெயிலின் கடுமை தாக்காது. பூவைச் சமைத்துச் சாப்பிட, கற்றாழை மணம், நீரிழிவு, நீர் வேட்கை சமனப்படும்.
விதையின் தோலைப் போக்கி, நுண்ணியதாகப் பொடிசெய்து கண்ணில் தூவியாவது அல்லது தேங்காய் எண்ணெயில் குழைத்து கண்ணோய்க்கு இடல் வழக்கு. இதனால் சீழ்பிடிக்கும் கண்ணோய் தீரும்.
வேரை குடிநீரிலிட்டுச் சாப்பிட்டுவர நீரிழிவு, ஆண்குறி எரிச்சல் தணியும். வேண்டுமானால் இத்துடன் கற்கண்டு, பசுவின் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆவாரை வேர்ப்பட்டையை கஷாயஞ் செய்து அதற்கு நேர் வெள்ளாட்டுப் பால் அல்லது பசுவின் பால், எண்ணெய் இவற்றைக் கூட்டித் தைலம் செய்து தலைமுழுகி வர, உடல் வெப்பந் தணியும், கண் குளிரும்.
ஆவாரந்துளிர், கல்மதம், கொன்றைவேர் ஆகிய மூன்றையும் புளித்த மோரில் கலக்கிக் குடிக்க நீரிழிவு நோய் நீங்கும். ஆவாரம், சீந்தில், தில்லைச்செடி இவைகளின் வேர், இலை, தண்டு, பூ முதலியவற்றை முறையே மூன்று, இரண்டு, ஒன்று எனும் எடையாகக் கொண்டு, இளவறுப்பாக வறுத்து ஒன்றிரண்டாக இடித்துப் பொடியாக்கி அரைப்படிக்கு அரைப்படி நீரிட்டு, அரைக்கால் படியாகக் குடிநீர் செய்து அதில் பால் கூட்டி காலை, மாலை கொடுக்க நீரிழிவு போகும். நீரில் சர்க்கரை அளவும் குறையும்.
தைம்-Thyme

மேற்கு இமயமலைப் பகுதிகளிலும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு ஆசியா பகுதிகளிலும் தைம் பயிரிடப்படுகிறது. பல ஆண்டுகள் நிலைத்திருக்கும் ஒரு சாதாரணமான தோட்டப் பயிர். பழுப்பு சேர்ந்த பச்சை நிற இலைகள் உலர்ந்ததும் சுருண்டிருக்கும். இலைகள் முழுமையாகவும், அரைத்த பொடியாகவும் விற்பனையாகிறது.
காரமான, துடிப்பான மணமும், இனிப்புச் சுவையும் கொண்டது தைம் தைலம் மருத்துவ தன்மைகள் கொண்டவை. நரம்பு தளர்ச்சி மற்றும் ஹிஸ்டீரியாவிற்கு குணம் தரும். நஞ்சுக்கு மாற்று மருந்தாகும். புழுக்களைக் கொல்லும் ஆற்றல் இதற்கு உண்டு. நெஞ்சுவலி, காசநோய், மார்புச்சளி முதலிய நிலைகளில் சிகிச்சைக்கு உதவும்.
பித்தநீரையும், இரத்தத்தையும் இளக்கும். சிறுநீரகம், கண் முதலியவற்றின் சிகிச்சைக்கும், இரத்தத்தை சுத்தி செய்வதற்கும் பயன்படும். விதைகள் குடற்பூச்சிகளைக் கொல்லும். சரும வீக்கம் மற்றும் சரும நோய்களின் சிகிச்சையிலும் உதவும்.
அவுரி-Indigofera Tinctoria

நீலி என சமஸ்கிருதத்தில் வழங்கப்படுகிறது. அவுரி எங்கும் கிடைக்கும் செடியினம். குறிப்பாக இந்தியாவில் தென்னாட்டிலும், வங்கத்திலும் பயிராகும் செடி. ‘வண்ணான் அவுரி’ என்ற பெயரும் உண்டு. இதன் இலைரசம் நீல நிறம் கொண்டது. இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு ஏராளமாய் மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. விளைநிலங்களுக்கு பசுந்தாள் உரமாகப் பயன்படுகிறது. விஷத் தாவரங்களினால் ஏற்படும் விஷங்களைப் போக்கி விடும் என்பதால் நிலத்துக்கும், பயிருக்கும், மனிதர்களுக்கும் மிகுந்த பயனளிக்கிறது.
முடி வளர் தைலங்களில் கரிசாலை, நெல்லிக்காய், கூட்டணியில் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி மூலிகையாகும். அவுரியானது ஆரோக்கியம் கொடுக்கும். மலச்சிக்கலை நீக்கும். விஷங்களைக் கொல்லும் குணங்களைக் கொண்டது.
இதன் இலை பதினெண் வகை நஞ்சுகளைப் போக்கும். காமாலை, சீதளம், முப்பிணி, கீல்வாதம் இவைகளைப் போக்கும். உடல் பொன்னிறம் பெறும்.
——–
ஸேஜ் (Sage)
புதினா குடும்பத்தைச் சேர்ந்த உறுதியான புதர்ச் செடி, ஸேஜில் உள்ள சத்து எண்ணெய்க்காக ஜம்முவில் பயிரிடுகிறார்கள். இலைகள் நறுமணம் கொண்டவை. வாடை அழுத்தமாகவும், துவர்ப்பாகவும், கசப்பாகவும் இருக்கும்.
கோழி மாமிசம், மசால், இறைச்சி போன்ற உணவுப் பண்டங்களுக்கு ஸேஜ் பெருமளவில் பயன்படும் பூண்டுச் செடிகளில் ஒன்று. உலர்ந்த இலைகள் மூலிகையாகப் பயன்படுகின்றன. பற்பொடி, கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
அழகுக்கூடும்…
பார்ஸ்லி -Parsley

மத்தியத் தரைக் கடல் பகுதி மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் மிகுதியாகப் பயிரிடப்படுகிறது. எனினும் இலைகளுக்காக இந்தியாவில் வேளாண்மைத் துறையில் பயிரிடப்படுகிறது. இது குளிர்காலப்பயிர் என்பதால் மலைப்பிரதேசங்களில் செழித்து வளருகிறது.
செடியின் எல்லா பகுதிகளிலும் ‘பார்ஸ்லி எண்ணெய்’ என்ற சத்து எண்ணெய் கிடைக்கிறது. பார்ஸ்லியின் பச்சை இலைகள் உணவுப் பண்டங்களின் வாடையைக் குறைக்கப் பயன்படுகிறது. இலைகள் பச்சையாகவும், இலையமுதாகவும் உட்கொள்ளப் படுகின்றன. இறைச்சி, கோழி இறைச்சி சமையலில் வாசனைக்காகவும் ருசிக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை தேனீர் பானம், சொறி, சிரங்குகளைத் தடுக்கும் குணம் கொண்டது. வைட்டமின் ‘சி’ அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். பழத்தின் தோல், பேன் போன்ற சருமப் பூச்சிகளை ஒழிக்க உதவும். பார்ஸ்லியை அளவோடு உபயோகித்தால் நலம் பயக்கும்.
சடாமஞ்சி
சீமை இனம், நாட்டு இனம் என இருவகை உண்டு. சீமை இனம் வட ஆசியா, வட காஷ்மீரம், சிந்து, பர்மா, இலங்கை முதலிய இடங்களிலும் நாட்டு இனம் இமயம், காஷ்மீர், பூட்டான் முதலிய பாகங்களிலும் பயிராகிறது. இது ஒருவகைப் பூங்கோரை இனம். இதற்கு நீண்ட ஆணிவேரும், பல சல்லி வேர்களுமுண்டு. புதிய வேருக்கு இனிப்பும், அதிக காரமான மணமுமிருக்கும். நாட்சென்றால் நாற்றம் பெறும். இவ்விரண்டு இனத்திற்கும் குணம் சற்றேறக்குறைய ஒத்திருக்குமென்பது கொள்கை.
சீமை இனத்தைப் பொடிசெய்து பத்திலிருந்து இருபது குன்றுமணி எடை நீரிற் கலந்து, நாள் ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை கொடுக்க சுரம், வலிப்பு நீங்கும். முக்கால் வராகன் எடை கொடுக்க கோழையை வெளிப்படுத்தும்.
நாட்டு இனத்துச் சடாமஞ்சியை நசுக்கி எடுக்கப்படும் எண்ணெய் அரோமா எண்ணெய் எனப்படுகிறது. இது மஞ்சள் நிறமாயிருக்கும். இது தலைமயிர் கறுத்து வளர உதவும். மேலும் சரும நோய்களுக்கும், கிரீம்களுக்கும் சேர்க்கப்படுகிறது.
சடாமஞ்சியை நசுக்கி வெந்நீரில் ஒருமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி, அரைக்கால் முதல் கால் ஆழாக்கு வீதம் தினம் மும்முறை கொடுக்க சூதக சன்னி, வலிப்பு நீங்கும்.
லெட்டூஸ்-Beauty tips

கீரை வகைகளில் சிறந்த உணவாக லெட்டூஸ் கருதப்படுகிறது. இது இலைக் கீரையாகும். இதனை பச்சடிக்கீரை, சாலட்டுக் கீரை என்றும் கூறுவர். இதன் பிறப்பிடம் இந்தியாதான். இந்தியர்களை விட இக்கீரையை ஐரோப்பியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தக் கீரையானது இமயமலைச் சாரலில் ஏராளமாக தன்னிச்சையாக வளரக் கூடியது. பூப்பதற்கு முன்னுள்ள இலைகளே உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இலைகள் நீண்ட முட்டை வடிவமுள்ளதாய் இருக்கும். சில வகைகள் சுருள் சுருளான இலை அமைப்பை பெற்றிருக்கும். இலைகள் தடிப்பாக இருக்கும். சாறு நிறைந்து மிக மென்மையாக இருக்கும்.
பச்சை நிறம் கீரைவகையைச் சார்ந்தது. சாலட்டுகளில் அழகுக்காக சேர்க்கப்படுவது எனினும் வைட்டமின் ‘ஈ’ சத்தும், அதிகப்படியான தாது உப்புக்களும் நிறைந்து காணப்படுகின்றன. புற ஊதாக்கதிர் மற்றும் சூரியக்கதிர் தாக்கத்திற்குட்படும் சருமத்திற்கு நிவாரணமளிக்கிறது.
புரதம், தாது உப்புகள், வெப்ப ஆற்றல் முதலியன மிகுந்த கீரை, சிவப்பு அணுக்களைத் தோற்றுவிக்கும் ஒருவித சத்து இக்கீரையில் இருக்கிறது. இது சமையலில் இனிய மணத்துக்காகவும், சுவைக்காகவும் பலர் இதனை விரும்பி உண்கின்றனர். முதிர்ந்த இலைகளைக் கால்நடைகள் விரும்பி உண்கின்றன.
இக்கீரை உடலுக்கு குளிர்ச்சியையும், உற்சாகத்தையும் தரவல்லது. முச்சிரைப்பு நோயான ஆஸ்துமாவைக் கண்டிக்க வல்லது. இதிலுள்ள மாவுச் சத்து காரணமாக உடல்பருமனைக் குறைப்பதற்கு இந்தக் கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வார்கள். நிரிழிவு நோய்க்கு நல்ல பத்திய உணவு இக்கீரை.
செம்பருத்தி -Hibiscus

தோட்டங்களில் அழகுச் செடியாகவும், வேலித் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது. பசுமை நிறத்துடன் கூடிய தடித்த புதர்ச் செடி பல நிற மலர்களைக் கொண்டது. பூக்கள் தனித் தனியாகவும், அடுக்காகவும் காணப்படுகிறது. சிவப்பு ஐந்து இதழ்கள் கொண்ட நாட்டு செம்பருத்தி பூவே சிறந்தது.
இத்தாவரங்களில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.
மைசூர், பெங்களூர் போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.
இலைகள், பூக்கள் மிகுந்த மருத்துவ பயன்கள் தருபவை. இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. வழுவழுப்பான தன்மை கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை. மாதவிடாயைத் தூண்டக் கூடியது.
இதழ்களின் வடிசாறு காய்ச்சலில் வெம்மை போக்கும். சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது. பூவின் இதழ்களை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து தடவ வழுக்கைக்கு நிவாரணமளிக்கிறது. கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.
காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும். தலை முடி உதிர்தல், புழுவெட்டு, இளநரை, செம்பட்டை முடி, இளவயதில் ஏற்படும் வழுக்கை இவற்றிற்கான தைலம் இப்பூக்களிலிருந்து தயாரிக்கலாம்.
400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும்.
சிவப்பு பூக்கள் தான் மருத்துவச் சிறப்பு வாய்ந்தவையாகும். செம்பருத்திப் பூவில் தங்கச் சத்து உண்டு என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும். தினந்தோறும் அதிகாலையில் ஒன்றிரண்டு மலர்களைத் தின்று வந்தால் பருவம் அடையாத பெண்கள் பருவமடைவார்கள். வழுக்கைத் தலையில் பூவின் சாற்றை தேய்த்தால் நாளடைவில் வழுக்கை மறையும்.
ஒற்றையினப் பூவோடு, பொடுதலை, கோரைக் கிழங்கு, மருதாணி இலை சேர்த்து இடித்து தலையைச் சுத்தம் செய்து பூசி வந்தால் கூந்தல் வளர்வதோடு முடியும் கறுப்பாகும். உடல் குளிர்ச்சி பெற்று மயிர் உதிர்வது தடுக்கப்படும். ஒற்றைச் செம்பருத்திப் பூ, மருதாணி இலையுடன், பத்து மிளகு சேர்த்து மைபோல அரைத்து நரைமுடி உள்ளவர்கள். முடி கொட்டியவர்கள், கண் மயிரிலர் பூச்சி வெட்டியவர்களை தேய்த்து வந்தால் நல்ல பலன் கிட்டும்.
காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.
கடற்பாசி (ஸ்பைருலினா) -Spirulina

இலங்கையைச் சேர்ந்த கடலிலும், நம் நாட்டுக் கடலிலும் விளைகிற ஒருவகைப் பூண்டு. இதைக் காயவைத்து எடுத்து மருந்தாக உபயோகிக்கலாம்.
பச்சையம் அதிகம் செறிந்த இந்தப் பவுடர் சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடியது. சருமத்திற்கு ஈரப்பதம், பொலிமை, இளமை அளிக்கக் கூடியது.
கடற்பாசி பவுடருடன் சிறிது கருவாப்பட்டை சேர்த்துக் காய்ச்சி, கூழ்ப்பதமாக எடுத்து ஆறவைத்து, சிறிது சர்க்கரையும், திராட்சை ரசமும் சேர்த்து உள்ளுக்குக் கொடுத்துவர, நோயுற்றிளைத்தவர்கள் மிகுந்த உடல் வலிமையும், ஊக்கமும் பெறுவார்கள்.
ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மின் கதிர் வீச்சால் சருமத்திற்கு ஏற்படக்கூடிய தீமைகளை முறியடிக்க வல்லது. உள்மருந்தாகவும், உபயோகப்படுத்தப்படுகிறது.
சிறிது ஆரஞ்சு பழச்சாறு மற்றும் பால் பவுடருடன் கலந்து முகத்திற்குத் தேய்த்துக் கழுவ, தொய்வடைந்த சருமம் வலுப்பெறும். வயோதிகத் தோற்றம் மாறும். சருமம் சமச்சீரான நீர்ச்சத்தினைப் பெற்று அழகுடன் விளங்கும்
மஞ்சள் -Turmeric

இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். மஞ்சள் ஆண்டுதோறும் வளரும் பூண்டு வகைச்செடி. 60 முதல் 90 செ.மீ. உயரம் வளரும். இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைதது மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்கள்தான் மஞ்சள்.
நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். பச்சை மற்றும் உலர்ந்த கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. மஞ்சளில் இருந்து கிடைக்கும் சத்து எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
சுத்திகரிக்கப்பட்ட, பளபளப்பூட்டப் பெற்ற வேர்த்தண்டுதான் மஞ்சள். சமையலில் நிறமும், சுவையும் கூட்டும் மஞ்சள் மருத்துவ குணங்கள் மிகக் கொண்டது. இதில் ‘குர்மின்ங்’ என்ற நிறமி இருக்கிறது. இதில் கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள் என்று பல வகைகள் உள்ளன. ‘ஆலப்புழை மஞ்சள்’ தான் உலகிலேயே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
துணிகளுக்கு சாயம் ஏற்றவும், மருந்துகளிலும், ஒப்பனைப் பொருட்களிலும் மஞ்சளுக்கு தனி மகிமையே உண்டு. இந்துக்கள் மஞ்சளை மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.
பதார்த்தங்களுக்கு நிறம் தருவதற்காக மட்டுமின்றி, மசாலாவில் உள்ள காரத்தால் குடலில் புண் தோன்றாது காக்கவும், பருப்பு வகைகளில் உள்ள வாய்வுகளை அகற்றவும், உதவுவதுடன் காய்கள் நிறமிழக்காமல் தூய்மையடையவும், மீன் மாமிச வகைகளிலுள்ள நச்சுத்தன்மை மற்றும் விரும்பத்தகாத நாற்றங்களைப் போக்கவும் மஞ்சள் பயன்படுகிறது.
இன்றும் பருத்தித் துணிகளுக்கு சாயம் கொடுப்பதற்கும் பூச்சு வண்ணங்கள், வார்னிஷ் முதலியவை தயாரிக்கும் தொழில்களுக்கும் மஞ்சள் பயன்படுகிறது.
மஞ்சள் கலந்த நீரை வீட்டு முற்றங்களிலும், வெளிப்பகுதிகளிலும் தெளித்து வைப்பதன் மூலம் தொற்று நோய்க் கிருமிகள் அணுகவொட்டாமல் செய்யலாம். அளவாக மஞ்சள் பூசிக்கொள்வதால் பெண்களின் முகத்திற்கு வசீகரம் உண்டாகும். சருமம் வறட்சியடைவதில்லை. முதுமைக்குரிய குறிகளைக் தோற்றுவிப்பதில்லை. இரத்தக்கட்டை அகற்றுவதில் மஞ்சளுக்கு ஈடான மருந்து வேறில்லை. மஞ்சளை நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி தைலத்தை உடம்பில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் தோன்றாது. பெண்களுக்கு ஏற்படும் ‘ஹிஸ்டீரியா’ எனும் நோய்க்கு மஞ்சள்புகை நல்ல மருந்து.
மங்கல உணர்வுடன், மஞ்சளிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம் போன்ற பொருட்கள் நமது இந்துப் பெண்களுக்கு சிக்கனமான நாட்டு ஒப்பனைச் சாதனங்களாகப் பயன்படுகின்றன. உடல் முழுவதும் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், சருமம் பொலிவடைகிறது.
மஞ்சளில் உடலின் நிறமியை ஊக்குவிக்கும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. பல சரும நோய்களுக்கு பச்சை மஞ்சள் கிழங்குளின் சாறு ஓட்டயிர்க் கொல்லியாகப் பயன்படும். பெரியம்மை நோய்க்கு மஞ்சளை, நல்லெண்ணெய், வேப்பிலையுடன் அரைத்து தடவ வடுக்களை அகற்றி, கிருமிகளை அழித்து, உடலுக்கு வனப்பைக் கொடுக்கும்.
இந்திய மருத்துவத் துறையில் மருத்துவத் தைலங்கள், களிம்புகள் தயாரிப்பிலும் மஞ்சள் முக்கிய இடம் பெற்றுள்ளன. தோலின் அதிகப்படியான எண்ணெய்ப் பசையைப் போக்கக் கூடிய திறன் கொண்டது. புண்களை விரைந்து ஆற்றக்கூடியது.
வீக்கங்களைப் போக்குவதில் மஞ்சளுக்கு அதிக சக்தி உள்ளது. தோல் நோய்கள் அனைத்திற்கும் மருந்தாகிறது. மஞ்சளுக்கு ‘கொலஸ்டிரால்’ அளவினைக் குறைக்கும் திறனும் உண்டு.
பருவ வயதில் தோன்றும் முகப்பருக்களைத் தடுப்பதோடு அவற்றுக்கு சிகிச்சையாகவும் மஞ்சளின் நஞ்சடைத் தன்மைகள் பயன்படுகின்றன. பெண்களின் உடலிலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தகிறது.
இது மூன்று அடி வரை தோகையுடன் வளரக் கூடியது. பூமியில் மிருதுவான மணற்பாங்கான இடங்களில் இஞ்சியைப் போன்று பயிராகிறது. வயிற்றில் புண்கள் இருந்தால் அதை ஆற்றும் சக்தி மஞ்சளுக்குண்டு. புண்களில் உள்ள சீழை வெளியேற்றும்.
பித்த வெடிப்பு :
காம்பு நீக்கி சீத்தா இலை 10, 1 முட்டை வெள்ளைக்கரு, 1 அங்குல பச்சை மஞ்சள் மூன்றையும் கலந்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இரவில் படுக்கைக்குப் போகுமுன் கால்களை சுத்தமாக்கி பின் இக்களிம்பை தடவி வெள்ளை துணியால் சுற்றிக் கொண்டு உறங்க வேண்டும். காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு பாதங்களைக் கழுவி, ஈரம் போகத் துடைக்க வேண்டும். தொடர்ந்து 4 நாட்கள் செய்ய பித்த வெடிப்பு குணமாகும்.
ஆழமற்ற வடுக்கள் என்றால் மஞ்சள்பொடி, திருநீறு இரண்டையும் சமஅளவு எடுத்துக் கலந்து வைத்துக் கொண்டு பவுடர் போல் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசினால் குணமாகும்.
மஞ்சளைச் சாதத்துடன் சேர்த்தரைத்துக் கட்டிகளின் மீது வைத்துக்கட்ட அவைகள் எளிதில் பழுத்துடையும். மஞ்சளைக் சுட்டு முகர நீரேற்றம் நீங்கும். மஞ்சளுடன் ஆடாதோடா பாலை இலை சேர்த்து பசுவின் நீரை விட்டரைத்துப் பூச சொறி, சிரங்கு, நமைப்படைகள் ஒழியும். மஞ்சள் நீரை அருந்த காமாலை போகும். மஞ்சளை அரைத்து நீரிற்கலக்கி, வெண்சீலைக்குச் சாயமேற்றி அவ்வாடையை உடுப்பதால் வாதநீர்ச்சுருக்கு, இருமல், ஜுரம், மலக்கட்டு இவை நிங்கும்.
மஞ்சள் நீரில் நனைத்த துணியினை நிழலிலுர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள் கண்களை அப்போதைக்கப்போது துடைத்துவர கண் சிவப்பு, கண்ணருகல், கண்ணில் நீர் கோர்த்தல் போன்றவை தணியும்.
கஸ்தூரி மஞ்சள் --Kasturi Manjal

மஞ்சள் குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரம் மிகுந்த வாசனை கொண்டது. இந்தியாவின் பல பகுதிகளிலும் பயிரிடப்படும் மருந்துத் தாவரமாகும். பல்வேறுபட்ட மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தி வரும் ஓர் உயரிய மருத்துவப் பொருளே கஸ்தூரி.
புற்று நோயின் கடுமையைக் குறைக்கக் கூடியது. மிகுந்த வாசனைமிக்க இதன் பொடி, வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட் தயாரிப்புகளில் பெரும்பங்கு வகிக்கின்றன.
சற்று தூக்கலான மணம் உள்ளதாகும். சற்று பெரிய அளவில் காணப்படும் கஸ்தூரி வாசனைப்யூட்டக்கூடிய தயாரிப்புகளுக்கு பிரதானப் பொருளாக உபயோகிக்கப்படுகிறது. கஸ்தூரி மஞ்சளைக் கொண்டு தயாரிக்கப்படும் குளியல் பொடிகளை வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தேய்த்துக் குளித்துவந்தால் உடல் மட்டுமல்லாது கண்பார்வையும் ஆரோக்கியமாக இருக்கும்.
கதிர்வீச்சிலிருந்து தோலினைப் பாதுகாக்கும். சருமத்திலுள்ள வேண்டாத ரோமங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும். கஸ்தூரி மஞ்சள் இலையின் சாறை தலைக்குத் தடவ, தலை சம்பந்தமான நோய்கள் தீரும்.
கஸ்தூரி மஞ்சளுடன் கருந்துளசியைச் சேர்த்து அரைத்து உடலெங்கும் தேய்த்து வைத்திருந்து இளஞ்சூட்டில் குளித்து வந்தால் உடல் கவர்ச்சியுடனும், பளபளப்பாகவும் விளங்கும்.
கஸ்தூரி உடலின் தாதுக்களுக்குத் தேவையான பலத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து, உடலில் ஏற்படும் பல்வேறுபட்ட நோய்களுக்கும், வலிப்பு, இழுப்பு, உடற்சோர்வு, இளைப்பு, பலவீனம் ஆகியவற்றை நீக்கி முகத்தில் பொலிவையும், அழகையும், முகத்திற்கு ஒருவித ஒளியையும் தரும்.
ஒரு கண்ணாடி தம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அவற்றில் சிறிது கஸ்தூரியை போட்டு பார்த்தால் அது ஊதா நிறத்தோடு கீழிறங்கும். இவையே உண்மையான கஸ்தூரியாகும்.
அகில்-Agile

அகில் சந்தன மர வகையைச் சார்ந்தது. அகில் கட்டை இலேசான இனிப்பும், கசப்பும் கலந்த சுவை உடையது. உடலின் எந்தப் பகுதியில் வீக்கம் இருந்தாலும் அதைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. சுமார் 60 முதல் 75 அடி வரையிலும் வளரக் கூடிய மரம். இம்மரங்களில் ஒருவித பிசின் இருக்கிறது. அதுவே அகில் எனப்படுகிறது.
இந்தியாவில் அஸ்ஸாம் காடுகளிலும், கம்போடியா, பர்மாவிலும் அதிகம் காணப்படுகிறது. மருத்துவ முறைப்படி பக்குவம் செய்து சாப்பிட நரை, திரை போன்ற முதுமைக்கால சருமக் குறைபாடுகளை அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும்.
அகில் கட்டையை பசும்பால் விட்டு சந்தனம் அரைப்பது போல் அரைத்து, விழுதை சருமத்திற்கு தொடர்ந்து பூசி வர, சருமத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கும்.
ஊளைச் சதை உள்ளவர்கள் இந்த விழுதை தொடர்ந்து உடலில் பூசி வர ஊளைச் சதைக் குறைந்து இறுகி, உடல் வனப்புடன் விளங்கும் என மருத்துவக் குறிப்புகள் குறிப்பிடுகின்றன.
சந்தனம் போன்று நறுமணம் கொண்டது. பண்டைக் காலங்களில் அகிற்புகையூட்டி கூந்தலை உலர்த்தியிருக்கிறார்கள். இதிலிருந்து வடிக்கப்படும் தைலம் “அகர் அக்தர்” எனப்படுகிறது. இது தனியாகவும், பல உயர்ந்த வாசனைப் பொருள் தயாரிப்பில் கூட்டுப் பொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்திய மருத்துவம், ஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலும் சிறப்பிடம் பெறுகிறது.
வெப்பத்தைத் தூண்டும், பித்தத்தைப் பெருக்கும், வீக்கங்களை வடிக்கும் செய்கையுடையது. வயோதிகத்தால் உண்டாகும் தேகத் தளர்ச்சியைப் போக்கி உடம்பை இறுக்கும். சந்தனம் போல அகிற்கட்டையை உரைத்து மேனியில் பூசிவர, வயோதிக மேனித் தளர்ச்சி நீங்கும். ஆண்மை விருத்தியில் அகிற்கட்டையும் பங்கு கொள்ளும்.
அகிற்கட்டை தைலம் வடித்து தலைக்கு உபயோகித்து வர மூக்கடைப்பு, பீனிசம் போன்ற நோய்கள் அணுகாது.
அகிற்தைலம் :
அகிற் ஊறவைத்த நீர், நல்லெண்ணெய், பசும்பால் வகைக்கு ஒரு படி எடுத்து ஒன்று கூட்டி, இதில் அதிமதுரம், தான்றிக்காய்த் தோல் சிறிது எடுத்து பசுவின் பால் விட்டரைத்துக் கலந்து, எரித்துப் பதத்தில் வடித்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
இத்தைலத்தை தினசரி தலைக்குத் தடவிவர நீர்க்கோவை, மேகம், மூக்கடைப்பு முதலிய நோய்கள் தீரும்.
சந்தனம் -Sandalwood tree

மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் சந்தனமரம். இதன் தாயகம் இந்தியா. இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் மிகுந்து காணப்படும். சுமாரான உயரத்துடன் கூடிய மரம். வளர்ந்த மரம் வாசனை நிரம்பியது. மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து நிரம்பியது. இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை. சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.
மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும், வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். கட்டையை பழச்சாற்றில் உரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு பூசலாம். புருவத்தின் வலிகளுக்கு உரைத்துப் பற்றிடலாம். சந்தனாதித் தைலம் தேய்த்து தலைமூழ்கி வர உடல் சூடு தணிந்து முறைப்படும்.
சந்தன மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. பருமனுக்கு ஏற்ப மிக விலை உயர்ந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மரத்தின் மையம் பகுதியிலும், வேர்ப்பகுதியிலும் சேகரித்து வைத்துக் கொள்ளப்படுகிறது. சந்தன மரம் உலக விளைச்சலில் 65 சதவீதம் இந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவில் விளைகிறது.
சந்தனம் தமிழர் வாழ்வில், மருந்தில் மிக முன்காலத்திலிருந்து பயன்பட்டு வந்துள்ளன. வெளி உபயோகத்தில் மட்டுமல்ல உள் மருந்தாக உண்பதாலும் பல பிணிகள் நீங்கும்.
மிகுந்த நறுமணத்துடன் நீடிக்கவல்ல தன்மையுடன் இருப்பதால் மணமுள்ள பொடிகள் தயாரிக்கவும், ஒப்பனைச் சாதனங்களில் சேர்க்கப்படும் வாசனைப் பொருளாகவும், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
ஒளிக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் களிம்புகள் அனைத்து வித சருமத்திற்கும் ஏற்றது.
சருமத்திற்கு மிருதுத் தன்மை அளிக்கக்கூடியது. காய்ச்சலையும், ஒற்றைத் தலைவலியையும் போக்கும் குணமும் உண்டு. சந்தனமரம் தனித்து வளராது. வேறு மரத்திற்கு அருகில்தான் வளரும். மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச் சத்துகளைப் பெற்றுக் கொள்கிறது.
பக்கவாதம், முடக்குவாதம், அஜீரணம் எனப் பல நோய்களைப் போக்கும். மேல் பூச்சாக தோல் வியாதிகளைப் போக்கும். தளர்ந்த சருமத்திற்கு இறுக்கமளிக்கும். பாலுணர்வை ஊக்குவிக்கும் செயல் ஊக்குவியாகவும் செயல்படுகிறது. உலர்ந்த மரக்கட்டைகள் பொடியாக்கப்பட்டு நீருடன் சேர்த்து கொப்புளங்களுக்கு களிம்பாகவும், தோல் வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயும் தோல் வியாதிக்கு பயன்படுகிறது.
தலையில் அரைத்துப் பூச சுரத் தலைவலி, கோடைக்கட்டிகள் அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும், இருதயத்திற்கும் உள்ள பலவீனம் நலமடையும்.
சந்தனம் இரத்தத்தை சுத்தி செய்து, தேகத்தைக் குளிர்பித்து, மார்புத் துடிப்பு, மனபயம் முதலியவற்றை குணப்படுத்தும். சந்தனக் கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றுடன் அரைத்துக் தடவ நமைச்சல், சொறி சிரங்கு, அக்கி, படர்தாமரை, வீக்கம், தேமல் சரியாகும்.
அமுக்கிராங்கிழங்கு (அஸ்வகந்தி) -Aswaganthi

இந்தியாவிலும் பலுசிஸ்தானத்திலும் பயிராகும் சிறு செடி. கீழ் வங்காளத்தில் கிடைப்பதில்லை. இச்செடி சாம்பல் நிறமுள்ளது. காய் தக்காளிக் காயைப்போலத் தோலால் மூடப்பட்டு உள்ளே காயிருக்கும். பழுத்தால் பழம் செந்நிறமாயிருக்கும்.
இது நம்நாட்டு ஜின்சங். கிராமங்களில் சிறிய புதர்க்காடுகளில் வளரக் கூடிய கத்தரி இனத்தைச் சேர்ந்த செடி இனமாகும். அமுக்கணாங் கிழங்கு என்றும் கூறுவர். அமுக்கரா செடியின் சதைப் பற்றுள்ள வேர் அமுக்கிராங்கிழங்கு எனப்படுவதாகும். ஆயுர்வேதத்தில் இது அஸ்வகந்தி எனப்படுகிறது.
சீனா, கொரியாவில் பிரசித்தி பெற்ற ஜின்செங் என்ற செடியின் வேருக்கு சமமான பலன் இதில் உண்டு. வெப்ப குணமுள்ள அமுக்கரா வேரைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாத்திரத்திலிட்டு மூழ்க பசும்பால்விட்டு வேகவைத்து பால் சுண்டின பின் அளவிட்டு நீரில் அலம்பி வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்த வேண்டும். சிறிது துவர்ப்புள்ள இக்கிழங்கினால் சகலதோஷம் நீங்கும்.
அமுக்கிராங் கிழங்கினால் கஷாயம், வாதநோய், தோல் நோய், வயோதிக பலஹீனம் போகும். கிராம மக்களிடையே இப் பச்சைக்கிழங்கை அம்மியிலரைத்து காரக்குழம்பில் கலந்து சமைத்துண்ணும் பழக்கம் நடைமுறையிலுள்ளது. பச்சை அமுக்கிராங்கிழங்கை அரைத்துக் கட்டி, அடிபட்ட வீக்கம், வாத வீக்கங்களின் மேல் பூசி வைக்க வீக்கம் வற்றி விடும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நீர்முள்ளி விதையைச் சுத்தம் செய்து 100 கிராம் எடுத்து சம அளவு சுத்தி செய்த அமுக்கிராங் கிழங்குகளோடு சேர்த்து நன்கு இடித்து தூளாக்கி சலித்து சமஅளவு கலந்து வைத்துக் கொள்ளவும். காலை, இரவு, உணவுக்குப்பின் 1 ஸ்பூன் வீதம் காய்ச்சிய பசும்பாலில் கலந்து சாப்பிட்டுவர, கை, கால் ஓய்ச்சல், நரம்புத்தளர்ச்சி நீங்குவதுடன் உடல் உறுதி, காமவிருத்தி, நீண்ட ஆயுள் ஏற்படும். பத்தியமில்லை.
அமுக்கிராங் கிழங்கை பொடி, நெய் முதலியன செய்து பயன்படுத்தினால் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் முதலியவைகள் உண்டாகும். இதைச் சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டரைத்து, வீக்கங்களுக்குப் போட வீக்கம் கரையும். கிழங்கு அல்லது இலையை அரைத்து நோயுடன் கூடிய வீக்கம், புண் இவைகட்குப் பூசலாம்.
கிழங்கைப் பாலில் வேகவைத்து அலம்பி, உலர்த்தி பொடிசெய்து ஒருவேளைக்கு இரண்டு முதல் நான்கு கிராம் வரை தேனில் கலந்து கொடுக்க பசியின்மை, உடல் பருமன் இவைகள் போகும்.
அமுக்கிராக்கிழங்குப் பொடி ஒரு பங்கும், கற்கண்டு மூன்று பங்கும் சேர்த்து வேளைக்கு நான்கு கிராம், காலை, மாலை உட்கொண்டு அரை அல்லது ஓர் ஆழாக்கு பசுவின்பால் சாப்பிட்டுவர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும். உடலுக்கு அழகு தரும்.
அதிமதுரம் -Adhimaduram

நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.
ஸ்பெயின், துருக்கி, சிரியா, ஈரான் நாடுகளிலும் விளைகிறது. வெண் திட்டுகள், வெண்குட்டம் கண்ட இடத்தில் பூசி ஊற வைத்துக் குளித்து வர வெண்மை மாறி வரும். அதிமதுரத்தை தொடர்ந்தும், அதிகமாகவும் உண்ண உடல் எடை கூடும்.
இது ஆற்றங்கரைகளில் வளரும். வெளிநாட்டுக் குண்டுமணிச் செடியின் வேருக்கு அதிமதுரம் எனப் பெயர். ரஷ்யாவிலும், சீனாவிலும் இது விளைகிறது. 24 அடி உயரம் வரை உயர்ந்து வளரும் செடி அதிமதுரம், வேர் வெட்ட வெட்ட அழியாது. பல வருடங்கள் கழித்தும் வெட்டிய வேர் துளிர்க்கும். பல நோய்களை அழிக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. அதிமதுரம் இனிப்பு சுவையுள்ள வேர். ஸ்பெயினில் நன்கு வளரும்.
சுருட்டுப் பருமனில் ஏறத்தாழ அதே நீளத்தில் குச்சி, குச்சியாக சிவப்புச் சாயலுடன் அதிமதுரம் இருக்கும். இதில் ஹைட்ரோ கார்டிகோன் என்ற ஒரு பொருள் இருக்கிறது. நச்சுக் குணம் சிறிதும் இம் மூலிகையில் இல்லை. கொழுப்புப் பொருட்களை நன்கு ஜீரணிக்க உதவும் பண்பு இதற்கு உண்டு.
தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம். அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.
அதிமதுரம் என்றால் அதிக இனிப்புள்ளது என்று பொருள். இதன் வேர்ப்பகுதி தான் அதிமதுரம். இதை வடமொழியில் யஷ்டிமது என்றழைப்பர். இது இமயமலை அடிவாரத்தில் ஏராளமாக வளர்கிறது.
பண்டைய காலத்தில் எகிப்து, சீனம், கிரேக்கம் போன்ற நாடுகளில் புகையிலைகளுடன் அதிமதுரம் சேர்த்து புகைக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் புகையினால் ஏற்படும் தீமைகள் தவிர்க்கப்பட்டது. அதிமதுரத்திலிருந்து எடுக்கப்படும் சத்தானது கரும்பின் சர்க்கரையை விட ஐந்து மடங்கு இனிப்பு கொண்டதாகும்.
அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.
பாதாம் பருப்பு-Almonds

அனைவரும் அறிந்த அழகு சாதனப் பொருள். பெரிய பழவகையைச் சேர்ந்தது. இதன் கொட்டைகளிலுள்ள பருப்புகள் புரதசத்து மிகுந்தது. நினைவாற்றலை வளர்க்கக் கூடியது. இளைய தலைமுறையினருக்கு உடல், உள்ள வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணை புரியக்கூடியது. உடலுக்கு முக்கிய தேவைகளான அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிரம்பப் பெற்றது.
கேசம் மற்றும் சரும பராமரிப்பிற்கு உறுதுணை செய்யக்கூடிய துத்தநாகச் சத்தும், சருமத்திற்கு வனப்பும், இளமைத் தன்மையும், புற்று நோயை எதிர்த்து கிருமிகளை நாசம் செய்யக் கூடிய வைட்டமின் ‘இ’ சத்தும், எலும்பின் உறுதிக்கு தேவையான கால்சியம் மற்றும் தசைகளின் சக்திக்குத் தேவையான மக்னீஷியமும் பாதாம் பருப்பில் செறிந்து காணப்படுகிறது. இதிலுள்ள புரதம் உடலில் தங்கி பக்க விளைவுகளை உண்டாக்காது. உடலுக்கு சக்தியையும் வலுவையும் மட்டுமே சேர்க்கக் கூடிய தன்மையுடையது.
சரும நோய்க் கிருமிகளைத் தாக்கி அழிக்கவல்ல ‘ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள்’ உள்ளன. இதிலுள்ள புரதசத்து சமைத்த இறைச்சிக்கு சமமானவை. எனவே இவை அழகுக்கும், நோயில்லா ஆரோக்கிய வாழ்விற்கும், உத்திரவாதமானவை. சருமத்தை சுத்தம் செய்யும் மிருதுத் தன்மை அளிப்பதால் சருமப் பராமரிப்பிற்கான பொருட் தயாரிப்பின் சேர்க்கையில் பெரும்பங்கு வகிக்கிறது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சருமப் பராமரிப்பின் தலையாய ‘அரோமா’ எண்ணெய் ஆகும்.
சருமத்திற்குத் தேவையான ஈரப்பதத்தையும், குறிப்பாக கண்ணின் கருவளையததிற்கும் பயனளிக்கும். சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் “ப்ளீச்” தன்மை இருப்பதால் கண்ணின் கருவளையம் எளிதில் மறையும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)