திங்கள், 9 நவம்பர், 2009

வாய்ப்புகளை பயன்படுத்தவில்லை - தோனி


ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான 7 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 6-வது போட்டியை தோற்றதன் மூலம் தொடரை 4- 2 என்று இழந்துள்ள நிலையில் இந்திய அணி வெற்றிக்கு கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டதால் தொடரை இழக்க நேர்ந்தது என்று இந்திய அணித் தலைவர் எம்.எஸ்.தோனி தெரிவித்தார்.

"ஈரப்பதமுள்ள ஆட்டக்களத்தில் முதல் அரைமணி நேரமே போராட்டம். ஆனால் இதில் 5 விக்கெட்டுகளை 27 ரன்களுக்கு பறிகொடுத்தது மிகவும் அதிகம். இதனால் 150 ரன்களே வருமா என்ற கேள்வி எழுந்தது. முதல் அரை மணி நேரத்தில் ஆட்டக்களம் அவ்வளவு மோசமாக நடந்து கொள்ளவில்லை.

முதல் அரை மணி நேரத்தை கவனமாக விக்கெட்டுகளை அவ்வளவாக இழக்காமல் கடத்தியிருந்தால் நாங்கள் நினைத்திருந்த ரன்களை எட்டியிருப்போம். மதியம் ஆட்டக்களம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது. ஆனால் 170 ரன்கள் எப்போதும் போதாது.

ஓரிரு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தால் மீண்டு வந்திருக்க முடியும். ஏனெனில் 7-வது பேட்ஸ்மென் நம்மிடம் உள்ளனர். மேலும் ஹர்பஜன்சிங், பிரவீண் குமார் உள்ளனர்.

கிடைத்த வாய்ப்புகளை திறம்பட நாங்கள் பயன்படுத்தவில்லை. அனைத்து பேட்ஸ்மென்களும் ஒரே நேரத்தில் பங்களிப்பு செய்யத் தவறினர். முதல் வரிசை வீரர்கள் சரியாக ஆடாத போட்டிகளில் நடு வரிசை வீரரகளும் பங்களிப்பு செய்யவில்லை. முடிவில் நாம் தொடரை இழந்தோம். இந்த தொடரில் ஆங்காங்கே சிறப்பாக செயல் பட்டோம் அவ்வளவே, வாய்ப்புகளை வெற்றியாக மாற்றவில்லை."

இவ்வாறு தோனி ஆட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக