
What is this?
மும்பை: வருகிற 2011ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்ககதேசம் ஆகியவை இணைந்து நடித்தவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.முதல் போட்டியில் இந்தியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.
உலக கோப்பைப் போட்டியில் 14 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்தியா பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், அயர்லாந்து, ஆலந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன.
ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, ஜிம்பாப்வே, கனடா, கென்யா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இந்தியாவில், இறுதிப் போட்டி, ஒரு அரை இறுதி, ஒரு கால் இறுதி உள்பட 29 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
ஒரு அரை இறுதி, ஒரு கால் இறுதி உள்பட 12 ஆட்டங்கள் இலங்கையிலும், தொடக்க விழா, இரு கால் இறுதி உள்பட 8 ஆட்டங்கள் வங்காளதேசத்திலும் நடைபெறும்.
43 நாட்கள் நடைபெறும் போட்டிகள் மொத்தம் 13 மைதானங்களில் நடைபெறவுள்ளது.
போட்டிக்கான கால அட்டவணை நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஐசிசி துணைத் தலைவரும், மத்திய ஒருங்கிணைப்புக் கமிட்டியின் தலைவருமான சரத் பவார், ஐசிசி செயல் தலைவர் ஹாரூன் லோர்காட், போட்டி இயக்குநர் ரத்னாகர் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டி அட்டவணை
முதல் போட்டி பிப்ரவரி 19ம் தேதி மிர்பூர் நகரில் நடைபெறும். இதில் இந்தியாவும், வங்கதேசமும் மோதவுள்ளன.
பிற போட்டிகள் விவரம்..
பிப்.20- இலங்கை - கனடா (ஹம்பன்தோடா-இலங்கை)
பிப்.20 - கென்யா - நியூசிலாந்து (சென்னை)
பிப்.21 - ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே (அகமதாபாத்)
பிப்.22 - இங்கிலாந்து - ஆலந்து (நாக்பூர்)
பிப்.23 - கென்யா - பாகிஸ்தான் (ஹம்பன்தோடா)
பிப்.24 - தென்ஆப்பிரிக்கா - மே.இ. தீவுகள் (டெல்லி)
பிப்.25 - வங்காளதேசம் - அயர்லாந்து (மிர்பூர்)
பிப்.25 - ஆஸ்திரேலியா நியூசிலாந்து (நாக்பூர்)
பிப்.26 - பாகிஸ்தான் - இலங்கை (கொழும்பு)
பிப்.27 - இந்தியா - இங்கிலாந்து (கொல்கத்தா)
பிப்.28 - ஆலந்து - மே.இ. தீவுகள் (டெல்லி)
பிப்.28 - கனடா - ஜிம்பாப்வே (நாக்பூர்)
மார்ச் 1 - கென்யா - இலங்கை (கொழும்பு)
மார்ச் 2 - இங்கிலாந்து -அயர்லாந்து (பெங்களூர்)
மார்ச் 3 - கனடா - பாகிஸ்தான் (கொழும்பு)
மார்ச் 3 - ஆலந்து - தென்ஆப்பிரிக்கா (மொஹாலி)
மார்ச் 4 - வங்காளதேசம் - மே. இ. தீவுகள் (மிர்பூர்)
மார்ச் 4 - நியூசிலாந்து - ஜிம்பாப்வே (அகமதாபாத்)
மார்ச் 5 - ஆஸ்திரேலியா - இலங்கை (கொழும்பு)
மார்ச் 6 - இந்தியா - அயர்லாந்து (பெங்களூர்)
மார்ச் 6 - இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா (சென்னை)
மார்ச் 7 - கனடா - கென்யா (டெல்லி)
மார்ச் 8 - நியூசிலாந்து - பாகிஸ்தான் (பல்லிகேலே)
மார்ச் 9 - இந்தியா - ஆலந்து (டெல்லிஃ
மார்ச் 10 - இலங்கை - ஜிம்பாப்வே (பல்லிகேலே)
மார்ச் 11 - வங்காளதேசம் - இங்கிலாந்து (சிட்டகாங்)
மார்ச் 11 - அயர்லாந்து - மே. இ. தீவுகள் (மொஹாலி)
மார்ச் 12 - இந்தியா - தென்ஆப்பிரிக்கா (நாக்பூர்)
மார்ச் 13 - கனடா - நியூசிலாந்து (மும்பை)
மார்ச் 13 - ஆஸ்திரேலியா - கென்யா (பெங்களூர்)
மார்ச் 14 - வங்காளதேசம் -ஆலந்து (சிட்டகாங்)
மார்ச் 14 - பாகிஸ்தான் - ஜிம்பாப்வே (பல்லிகேலே)
மார்ச் 15 - அயர்லாந்து - தென்ஆப்பிரிக்கா (கொல்கத்தா)
மார்ச் 16 - ஆஸ்திரேலியா - கனடா (பெங்களூர்)
மார்ச் 17 - இங்கிலாந்து - மே.இ. தீவுகள் (சென்னை)
மார்ச் 18 - நியூசிலாந்து - இலங்கை (மும்பை)
மார்ச் 18 - அயர்லாந்து - ஆலந்து (கொல்கத்தா)
மார்ச் 19 - வங்காளதேசம் - தென்ஆப்பிரிக்கா (மிர்பூர்)
மார்ச் 19 - ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் (கொழும்பு)
மார்ச் 20 - கென்யா - ஜிம்பாப்வே (கொல்கத்தா)
மார்ச் 20 - இந்தியா- மே.இ. தீவுகள் (சென்னை)
மார்ச் 23 - முதல் காலிறுதிப் போட்டி- மிர்பூர்
மார்ச் 24 - 2வது காலிறுதிப் போட்டி- கொழும்பு
மார்ச் 25 - 3வது காலிறுதிப் போட்டி- மிர்பூர்
மார்ச் 26 - 4வது காலிறுதிப் போட்டி - அகமதாபாத்.
மார்ச் 29 - முதல் அரை இறுதிப் போட்டி- கொழும்பு.
மார்ச் 30 - 2வது அரை இறுதிப் போட்டி- மொஹாலி
ஏப்ரல் 2 - இறுதிப் போட்டி - மும்பை.